150கிமீ ரேஞ்ஜை தாராளமாக தரும்... Okaya Faast இ-ஸ்கூட்டர் அறிமுகம்.. இந்த இந்திய தயாரிப்போட விலை என்ன தெரியுமா?

இந்திய நிறுவனமான ஒகாயா (Okaya), அதன் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான ஃபாஸ்ட் (Faast) எனும் இ-ஸ்கூட்டரை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது. இதன் விலை மற்றும் பேட்டரி திறன்கள் பற்றிய முக்கிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

150 கிமீ ரேஞ்ஜை தாராளமாக தரும்... Okaya Faast இ-ஸ்கூட்டர் அறிமுகம்... இந்த இந்திய தயாரிப்போட விலை என்ன தெரியுமா?

இந்தியாவை மையமாகக் கொண்டு மின் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில் ஒகாயா (Okaya)-வும் ஒன்று. இந்நிறுவனம் இந்தியாவில் உயர்-வேக இ-ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது. ஃபாஸ்ட் (Faast) புதுமுக மின்சார ஸ்கூட்டரையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

150 கிமீ ரேஞ்ஜை தாராளமாக தரும்... Okaya Faast இ-ஸ்கூட்டர் அறிமுகம்... இந்த இந்திய தயாரிப்போட விலை என்ன தெரியுமா?

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அறிமுக விலையாக ரூ. 90 ஆயிரம் ஒகாயா நிர்ணயித்திருக்கின்றது. இந்த விலையிலேயே மின்சார ஸ்கூட்டர் இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் அதிக விலைக் கொண்ட இ-ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்த குறைவான விலையை ஒகாயா நிர்ணயித்திருக்கின்றது.

150 கிமீ ரேஞ்ஜை தாராளமாக தரும்... Okaya Faast இ-ஸ்கூட்டர் அறிமுகம்... இந்த இந்திய தயாரிப்போட விலை என்ன தெரியுமா?

நொய்டாவில் நடைபெற்ற இவி எக்ஸ்போ 2021 (மின்வாகன கண்காட்சி 2021)-இல் இந்த இ-ஸ்கூட்டர் காட்சிப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ. 1,999 என்ற முன் தொகையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியுள்ளன.

150 கிமீ ரேஞ்ஜை தாராளமாக தரும்... Okaya Faast இ-ஸ்கூட்டர் அறிமுகம்... இந்த இந்திய தயாரிப்போட விலை என்ன தெரியுமா?

புக்கிங் பணிகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்-லைன் (ஒகாயா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாளர்கள்) வாயிலாக செய்யப்பட்டு வருகின்றன. ஒகாயா ஃபாஸ்ட் இ-ஸ்கூட்டரில் எண்ணற்ற சிறப்பு வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 4.4 கிலோவாட் லித்தியம் ஃபாஸ்பேட் பேட்டரி அதில் முக்கியமான ஒன்று.

150 கிமீ ரேஞ்ஜை தாராளமாக தரும்... Okaya Faast இ-ஸ்கூட்டர் அறிமுகம்... இந்த இந்திய தயாரிப்போட விலை என்ன தெரியுமா?

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த ரேஞ்ஜை 200 கிமீ தூரம் வரை உயர்த்திக் கொள்ள முடியும். மிகக் குறைவான வேகம் மற்றும் மின்சார திறனை விரையமாக்காமல் செயல்பட்டால் இதன் ரேஞ்ஜை அதிகரித்துக் கொள்ள முடியும்.

150 கிமீ ரேஞ்ஜை தாராளமாக தரும்... Okaya Faast இ-ஸ்கூட்டர் அறிமுகம்... இந்த இந்திய தயாரிப்போட விலை என்ன தெரியுமா?

இதுமட்டுமின்றி, எல்இடி மின் விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பகல்நேரத்தில் எரியும் மின் விளக்குகள், சிபிஎஸ் (காம்பி பிரேக்கிங் சிஸ்டம்) உள்ளிட்ட சிறப்பு வசதிகள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், இணைப்பு வசதியும் இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

150 கிமீ ரேஞ்ஜை தாராளமாக தரும்... Okaya Faast இ-ஸ்கூட்டர் அறிமுகம்... இந்த இந்திய தயாரிப்போட விலை என்ன தெரியுமா?

ஒகாயா ஃபாஸ்ட் இ-ஸ்கூட்டரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 60-70 கிமீ ஆகும். இத்தகைய அதிக திறன் மற்றும் சிறப்பு வசதிகளுடனேயே மின்சார ஸ்கூட்டர் சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த ஸ்கூட்டரின் அறிமுகத்தின்போது ஒகாயா நிறுவனம் மற்றுமொரு சிறப்பு வாய்ந்த மின்சார தயாரிப்பையும் காட்சிப்படுத்தியது.

150 கிமீ ரேஞ்ஜை தாராளமாக தரும்... Okaya Faast இ-ஸ்கூட்டர் அறிமுகம்... இந்த இந்திய தயாரிப்போட விலை என்ன தெரியுமா?

ஃபெர்ரடோ எனும் இ-மோட்டார்சைக்கிளை அது காட்சிப்படுத்தியது. இந்த எலெக்ட்ரிக் பைக் அடுத்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில், 2 கிலோவாட் திறன் மின் மோட்டார் மற்றும் 3 கிலேவாட் திறன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

150 கிமீ ரேஞ்ஜை தாராளமாக தரும்... Okaya Faast இ-ஸ்கூட்டர் அறிமுகம்... இந்த இந்திய தயாரிப்போட விலை என்ன தெரியுமா?

இந்த 2 கிலோவாட் மின் மோட்டார் மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதேபோல், இதன் பேட்டரி பேக் ஒற்றை முழுமையான சார்ஜில் 100 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்தியாவில் மிக வேகமாக வளர்ச்சியைக் கண்டு வரும் நிறுவனங்களில் ஒன்றாக ஒகாயா மாறியிருக்கின்றது.

150 கிமீ ரேஞ்ஜை தாராளமாக தரும்... Okaya Faast இ-ஸ்கூட்டர் அறிமுகம்... இந்த இந்திய தயாரிப்போட விலை என்ன தெரியுமா?

நிறுவனம் கால் தடம் பதித்த மிக விரைவில் 225 விற்பனையகங்களை நாடு முழுவதும் உருவாக்கியிருக்கின்றது. ஆறு மாதங்களில் கண்ட வளர்ச்சி இதுவாகும். இந்த நிலை மின் வாகனங்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பு மாபெரும் வளர்ச்சியைச் சந்தித்திருப்பதை உணர்த்துகின்றது. மேலும், ஒட்டுமொத்த வாகன உலகின் எதிர்பார்ப்பை போல், மிக விரைவில் அனைத்து சாலைகளையும் எலெக்ட்ரிக் வாகனங்களே ஆள இருக்கின்றன என்பது தெளிவாக தெரிகின்றது.

Most Read Articles

English summary
Okaya faast e scooter launched in india at rs 90000
Story first published: Saturday, December 25, 2021, 12:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X