3 மாதங்களில் 15 ஆயிரம் ஒகினாவா இ-ஸ்கூட்டர்கள் விற்பனை!! அதிக பேரால் தேர்வு செய்யப்படும் ஒகினாவா மாடல்கள்

இந்தியாவின் பல்வேறு மாநில அரசாங்கள் அறிவித்த மானியத்தினாலும், மத்திய அரசாங்கத்தின் ஃபேம்-2 மானியம் திருத்தங்களினாலும் எலக்ட்ரிக் வாகனங்கள் குறிப்பிடத்தக்க விலை குறைப்புகளை பெற்று வருகின்றன.

3 மாதங்களில் 15 ஆயிரம் ஒகினாவா இ-ஸ்கூட்டர்கள் விற்பனை!! அதிக பேரால் தேர்வு செய்யப்படும் ஒகினாவா மாடல்கள்

அதுமட்டுமில்லாமல் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருவது மக்களை எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர வைத்துள்ளது. குறிப்பாக இ-ஸ்கூட்டர்களின் விற்பனை சமீப மாதங்களாக வேகமாக அதிகரித்து வருகிறது.

3 மாதங்களில் 15 ஆயிரம் ஒகினாவா இ-ஸ்கூட்டர்கள் விற்பனை!! அதிக பேரால் தேர்வு செய்யப்படும் ஒகினாவா மாடல்கள்

இந்த வகையில் ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் எலக்ட்ரிக் வாகன பிராண்டாக உருவெடுத்துள்ளது. இதற்கு தற்போது வெளியிடப்பட்டுள்ள இ-ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கையே சாட்சியாகும்.

3 மாதங்களில் 15 ஆயிரம் ஒகினாவா இ-ஸ்கூட்டர்கள் விற்பனை!! அதிக பேரால் தேர்வு செய்யப்படும் ஒகினாவா மாடல்கள்

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து துவங்கிய 2021ஆம் ஆண்டின் இரண்டாம் கால்பகுதியில் மொத்தம் 15,976 ஒகினாவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2021 ஏப்ரல் மாதத்தில் 4,467 இ-ஸ்கூட்டர்களை ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

3 மாதங்களில் 15 ஆயிரம் ஒகினாவா இ-ஸ்கூட்டர்கள் விற்பனை!! அதிக பேரால் தேர்வு செய்யப்படும் ஒகினாவா மாடல்கள்

அதுவே 2021 மே மாதத்தில் 5,649 ஒகினாவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும், 2021 ஜூன் மாதத்தில் 5,860 ஸ்கூட்டர்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த விற்பனை எண்ணிக்கைகளில் இருந்து ஒவ்வொரு மாதத்திலும் ஒகினாவாவின் விற்பனை எந்த அளவிற்கு முன்னேறி வருகிறது என்பதை அறியலாம்.

3 மாதங்களில் 15 ஆயிரம் ஒகினாவா இ-ஸ்கூட்டர்கள் விற்பனை!! அதிக பேரால் தேர்வு செய்யப்படும் ஒகினாவா மாடல்கள்

ஏற்கனவே கூறியதுதான், ஒகினாவா பிராண்டின் இத்தகைய முன்னேற்றத்திற்கு பெட்ரோல் விலை உயர்வு மிக முக்கிய காரணமாக விளங்குகிறது. இந்த மாதங்களில் நமது தமிழ்நாடு உள்பட தென்னிந்திய மாநிலங்களில் தான் ஒகினாவா தனது சந்தையை வலுப்படுத்தியுள்ளது.

3 மாதங்களில் 15 ஆயிரம் ஒகினாவா இ-ஸ்கூட்டர்கள் விற்பனை!! அதிக பேரால் தேர்வு செய்யப்படும் ஒகினாவா மாடல்கள்

15,976 என்கிற மொத்த விற்பனையில் பெரும்பான்மையான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெங்களூர், தமிழகத்தில் காஞ்சிப்புரம், நெல்லூர் மற்றும் புனே நகரங்களில் தான் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஒகினாவா தெரிவித்துள்ளது.

3 மாதங்களில் 15 ஆயிரம் ஒகினாவா இ-ஸ்கூட்டர்கள் விற்பனை!! அதிக பேரால் தேர்வு செய்யப்படும் ஒகினாவா மாடல்கள்

ஒகினாவா இ-ஸ்கூட்டர்களை பொறுத்தவரையில், ஐபிரைஸ்+ மற்றும் பிரைஸ் ப்ரோ மாடல்கள் அதிக பேரால் தேர்வு செய்யக்கூடியவைகளாக விளங்குகின்றன. இதற்கு காரணம், இவற்றின் ஸ்டைல் & அதிவேக வசதி பலரை கவர்ந்துள்ளது.

3 மாதங்களில் 15 ஆயிரம் ஒகினாவா இ-ஸ்கூட்டர்கள் விற்பனை!! அதிக பேரால் தேர்வு செய்யப்படும் ஒகினாவா மாடல்கள்

ஒகினாவா பிராண்ட் பொறுத்தமட்டில் மட்டுமல்லாமல், ஐபிரைஸ்+ மற்றும் பிரைஸ் ப்ரோ இ-ஸ்கூட்டர்கள் தற்சமயம் மொத்தமாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களாக விளங்குகின்றன. ஒகினாவா பிராண்டில் குறைந்தப்பட்ச விலையில் ஆர்30 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.58,801 என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

3 மாதங்களில் 15 ஆயிரம் ஒகினாவா இ-ஸ்கூட்டர்கள் விற்பனை!! அதிக பேரால் தேர்வு செய்யப்படும் ஒகினாவா மாடல்கள்

இந்திய அரசாங்கத்தின் ஃபேம்-2 மானிய திருத்தங்களுடன், மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அரசாங்கங்களும் தங்களது மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத்தை அறிவித்துள்ளன.

3 மாதங்களில் 15 ஆயிரம் ஒகினாவா இ-ஸ்கூட்டர்கள் விற்பனை!! அதிக பேரால் தேர்வு செய்யப்படும் ஒகினாவா மாடல்கள்

இதன்படி ப்ரீமியம் தரத்திலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக விளங்கும் ஹீரோ ஆப்டிமா, ஒகினாவா பிரைஸ் ப்ரோ, ஏத்தர் 450எக்ஸ், ஆம்பியர் மேக்னஸ் & ஜியல் உள்ளிட்டவற்றின் விலைகள் ரூ.18,000-இல் இருந்து ரூ.20,000 வரையில் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஒகினவா #okinawa
English summary
Okinawa Electric Scooter Sales Cross 15k In Q2 2021. Read All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X