Just In
- 1 hr ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 8 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 10 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 14 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2 விதமாக பயன்படுத்திக்கலாம்! இந்தியாவில் அறிமுகமானது வாகன பதிவு தேவைப்படாத ஒகினவா மின்சார ஸ்கூட்டர்!
இரு விதமாக பயன்படுத்திக் கொள்ளும் புதுமுக மின்சார ஸ்கூட்டரை ஒகினவா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனத்தின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம்.

பிரபல மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஒகினவா இரு விதமான பயன்பாட்டு திறன் கொண்ட ட்யூவல் (Dual) எனும் மின்சார இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஓர் மொபட் ரக மின்சார ஸ்கூட்டராகும். டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டைப் போன்று இதன் ஸ்டைல் இருக்கின்றது.

இதன் இடத்தைக் காலி செய்யும் நோக்கிலேயே ஒகினவா இந்த மின்சார இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதனைத் தேவையென்றால் சரக்கு ஏற்றி செல்லும் வாகனமாகவோ அல்லது இருவர் பயணிக்கும் ஸ்கூட்டராகவோ மாற்றிக் கொள்ள முடியும்.

இதுவே இந்த மொபட் ரக மின்சார இருசக்கர வாகனத்தின் சிறப்பம்சமாகும். இந்த வாகனத்தைக் கொண்டு 200 கிலோ வரையிலான சரக்கு வாகனங்களை ஏற்றி செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய திறன்மிக்க மின்சார வாகனத்திற்கு ஒகினவா மிக குறைந்த விலையையே நிர்ணயித்திருக்கின்றது.

ரூ. 58,998 என்ற விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜெமோபாய் மிஸோ மின்சார இருசக்கர வாகனத்திற்கு போட்டியளிக்கின்ற வகையில் இதன் விலை மற்றும் அறிமுகம் அமைந்திருக்கின்றது. ஜொமோபாய் மிஸோ மின்சார இருசக்கர வாகனமும் வர்த்தக ரீதியாக பயன்படும் வசதிகளைக் கொண்ட டூ வீலர் ஆகும்.

ஆனால், இதைக் காட்டிலும் கூடுதல் சிறப்பு வசதிகளைக் கொண்ட மின்சார வாகனமாகவே புதிய ஒகினவா ட்யூவல் இருக்கின்றது. இதன் பின்பக்கத்தில் மட்டுமின்றி முன்பக்கத்திலும் லக்கேஜ் ஏற்றி செல்வதற்கான கேரியர் வசதி கொடுக்கப்பட்டிருக்கின்று. ஆனால், இதில் இலகு ரக பொருட்களை மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும்.

அதேசமயம், பின் பக்க கேரியரில் அதிக எடைக் கொண்ட பொருட்களைக் கூட ஏற்றி செல்ல முடியும். சிலிண்டர், தண்ணீர் கேன், அரிசி மூட்டை என பல விதமான பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்ல முடியும். இத்தகைய சிறப்பு வசதிகளை இது பெற்றிருக்கின்ற காரணத்தினாலயே வர்த்தக ரீதியாக இயங்கும் நிறுவனங்களுக்கான தயாரிப்பாக இது பார்க்கப்படுகின்றது.

இந்த மின்சார வாகனம் இருவிதமான நிற தேர்வுகள் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபையர் ரெட் மற்றும் சன்ஷைன் மஞ்சள் ஆகிய நிறங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கும். இந்த ஸ்கூட்டரில் 250 வாட் திறன் கொண்ட மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன் அதிகபட்ச வேகமே மணிக்கு 25 கிமீ வேகம் ஆகும்.

ஆகையால், இதனை ஓட்ட டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை. மேலும், வாகன பதிவு சான்றும் தேவைப்படாது என கூறப்படுகின்றது. மின்சார தேவைக்காக 48W 55Ah திறன் கொண்ட தனியாக பிரித்தெடுக்கக் கூடிய லித்தியம் பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 130 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

மேலும், இதனை முழுமையாகச் சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரங்களே போதும். அதேசமயம், பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்ய 1.5 மணி நேரங்களே போதும். இதுமட்டுமின்றி, ரிமோட் பங்க்சன் சிஸ்டம், பக்கவாட்டு ஃபூட் ரெஸ்ட், குளோவ் பாக்ஸ் மற்றும் செல்போன் சார்ஜிங் பாயிண்ட் என பல்வேறு சிறப்பு வசதிகள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

தொடர்ந்து இந்த மின்சார இருசக்கர வாகனத்தின் பக்கம் மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக சில சிறப்பு சலுகைகளை ஒகினவா அறிவித்திருக்கின்றது. பேட்டரிக்கு 3 வருட வாரண்டி மற்றும் மோட்டாருக்கு 3 வருடங்கள் அல்லது 30 ஆயிரம் கிமீ என்ற வாரண்டியை அது அறிவித்துள்ளது.