எலெக்ட்ரிக் டூ-வீலர் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய Okinawa! 2021ல மட்டும் பல யூனிட்ட விற்பனை செஞ்சிருக்கு

மின்சார இருசக்கர வாகன உற்பத்தியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஒகினவா நிறுவனம் நடப்பு 2021ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக எத்தனை மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது என்பது பற்றிய முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மின்சார இருசக்கர வாகன விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய Okinawa... 2021ல மட்டும் பல யூனிட்ட விற்பனை செஞ்சிருக்கு!

பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனமான ஒகினவா இந்தியாவின் மிகவும் பிரபலமான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக மாறியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் நடப்பு 2021ம் ஆண்டில் பல மடங்கு அதிக விற்பனை உயர்வைப் பெற்றிருக்கின்றது.

மின்சார இருசக்கர வாகன விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய Okinawa... 2021ல மட்டும் பல யூனிட்ட விற்பனை செஞ்சிருக்கு!

இதுகுறித்த தகவலையே நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கின்றது. அதாவது, 2021ம் ஆண்டில் எத்தனை எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது என்பது பற்றிய முக்கிய விபரத்தை ஒகினவா வெளியிட்டிருக்கின்றது.

மின்சார இருசக்கர வாகன விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய Okinawa... 2021ல மட்டும் பல யூனிட்ட விற்பனை செஞ்சிருக்கு!

அது வெளியிட்டிருக்கும் தகவலை வைத்து பார்க்கையில் இந்தியாவில் மின் வாகனங்களுக்கான டிமாண்ட் பல மடங்கு உயர்த்திருப்பதை நம்மால் தெளிவாக உணர முடிகின்றது. ஒகினவா நிறுவனம் ஒரு லட்சம் யூனிட்டுகளுக்கும் அதிகமான மின் வாகனங்களை விற்பனைச் செய்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

மின்சார இருசக்கர வாகன விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய Okinawa... 2021ல மட்டும் பல யூனிட்ட விற்பனை செஞ்சிருக்கு!

அனைத்து யூனிட்டுகளும் நடப்பு 2021ம் ஆண்டில் மட்டுமே விற்பனைச் செய்யப்பட்டவை என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதுகுறித்த அறிவிப்பையே நிறுவனம் இன்று வெளியிட்டது. ஒகினவா நிறுவனம் உயர் வேகம் மற்றும் குறைவான வேகம் என இரு விதமான தேர்வுகளில் இ-ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

மின்சார இருசக்கர வாகன விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய Okinawa... 2021ல மட்டும் பல யூனிட்ட விற்பனை செஞ்சிருக்கு!

இதில், நிறுவனத்தின் உள்நாட்டு தயாரிப்பான ஐ-ப்ரைஸ் ப்ளஸ் மற்றும் ப்ரைஸ் ப்ரோ ஆகிய தேர்வுகளுக்கு நல்ல டிமாண்ட் கிடைத்திருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை, ஒட்டுமொத்த விற்பனையில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை விற்பனையாகி இருக்கின்றன.

மின்சார இருசக்கர வாகன விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய Okinawa... 2021ல மட்டும் பல யூனிட்ட விற்பனை செஞ்சிருக்கு!

நிறுவனத்தின் ஒரு லட்சம் யூனிட் விற்பனைக்கு நிறுவனம் விற்பனையகத்தின் எண்ணிக்கையை தொடர்ச்சியாக உயர்த்தி வருவதும் காரணம் என ஒகினவா தெரிவித்திருக்கின்றது. இதன் வாயிலாகவே நாட்டில் சிறப்பான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக கூறியிருக்கின்றது.

மின்சார இருசக்கர வாகன விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய Okinawa... 2021ல மட்டும் பல யூனிட்ட விற்பனை செஞ்சிருக்கு!

நிறுவனத்தின்கீழ் தற்போது 400க்கும் அதிகமான விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் நிறுவனத்தின் விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களிலும் நிறுவனத்தின் விற்பனையகங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

மின்சார இருசக்கர வாகன விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய Okinawa... 2021ல மட்டும் பல யூனிட்ட விற்பனை செஞ்சிருக்கு!

இதுமட்டுமின்றி, மிக விரைவில் விற்பனையகத்தின் எண்ணிக்கையை பல மடங்கு அதிகரிக்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. முக்கியமாக விரைவில் 50க்கும் அதிகமான கேலக்ஸி ஸ்டோர்களை நாட்டில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பதாக தெரிவித்திருக்கின்றது.

மின்சார இருசக்கர வாகன விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய Okinawa... 2021ல மட்டும் பல யூனிட்ட விற்பனை செஞ்சிருக்கு!

இதுகுறித்து ஒகினவா ஆட்டோ நிறுவனத்தின் எம்டி மற்றும் நிறுவனருமான ஜீதேந்தர் ஷர்மா கூறியதாவது, "ஒகினாவா மீது தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியவர்களுக்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் அவர்களுக்கு எங்களது பாராட்டுக்கள். ஆற்றல்மிக்க தயாரிப்பாகவும், தனித்துவமான சவாரி அனுபவங்களை ஒகினாவாவின் தயாரிப்புகள் வழங்குவதனால் தொடக்கத்திலிருந்தே நாங்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றோம். இதன் வாயிலாக புதிய மைல்கல்லை நாங்கள் எட்டியிருக்கின்றோம்" என்றார்.

மின்சார இருசக்கர வாகன விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய Okinawa... 2021ல மட்டும் பல யூனிட்ட விற்பனை செஞ்சிருக்கு!

தொடர்ந்து பேசிய அவர், "ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் சில யுக்தி கையாண்டு வருகின்றோம். அவை, மின் வாகனங்கள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அவற்றின் மீது நிலவும் கட்டுக்கதைகளை நீக்குதல். இத்துடன், வித்தியாசமான அணுகுமுறைக் கொண்ட இளைஞர்கள் மற்றும் பூஜ்ஜிய உமிழ்வை விரும்பும் பயன்பாட்டாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் எங்களது தயாரிப்பை உருவாக்கி வருகின்றோம்" என்றார்.

Most Read Articles

English summary
Okinawa sold over 1 lakh e vehicles in 2021
Story first published: Tuesday, December 21, 2021, 18:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X