இந்தியாவில் அடுத்தடுத்த அறிமுகமாகும் எலக்ட்ரிக் பைக்குகள்!! மிக விரைவில் ஒகி100 அறிமுகமாகிறது...

ஒகினாவா எலக்ட்ரிக் பைக்கின் டீசர் படங்கள் அதன் அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் அடுத்தடுத்த அறிமுகமாகும் எலக்ட்ரிக் பைக்குகள்!! மிக விரைவில் ஒகி100 அறிமுகமாகிறது...

எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஒகினாவா ஆட்டோடெக் பிரைவேட் லிமிடெட் அதன் முதல் எலக்ட்ரிக் பைக்கை ஒகி100 என்ற பெயரில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்தியாவில் அடுத்தடுத்த அறிமுகமாகும் எலக்ட்ரிக் பைக்குகள்!! மிக விரைவில் ஒகி100 அறிமுகமாகிறது...

இதற்கு மத்தியில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படங்களில் பைக்குடன் ‘மிக விரைவில்' என்ற வாக்கியங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் இந்த எலக்ட்ரிக் பைக்கின் அறிமுகத்தை இன்னும் சில வாரங்களில் எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் அடுத்தடுத்த அறிமுகமாகும் எலக்ட்ரிக் பைக்குகள்!! மிக விரைவில் ஒகி100 அறிமுகமாகிறது...

ஒகி100 பைக்கின் முதல் மாதிரி கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு முன்பு 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதனால் இதன் அறிமுகத்தை 2020ன் தீபாவளி பண்டிகை காலஙளில் எதிர்பார்த்தோம்.

இந்தியாவில் அடுத்தடுத்த அறிமுகமாகும் எலக்ட்ரிக் பைக்குகள்!! மிக விரைவில் ஒகி100 அறிமுகமாகிறது...

ஆனால் இன்னும் இந்த எலக்ட்ரிக் பைக் அறிமுகமான பாடில்லை. ரூ.1 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த ஒகினாவா பைக்கிற்கு விற்பனையில் ரிவோல்ட் ஆர்வி400 முக்கிய போட்டி மாடலாக விளங்கும்.

இந்தியாவில் அடுத்தடுத்த அறிமுகமாகும் எலக்ட்ரிக் பைக்குகள்!! மிக விரைவில் ஒகி100 அறிமுகமாகிறது...

பேட்டரி உள்பட தனது முதல் எலக்ட்ரிக் பைக்கை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் பாகங்களை கொண்டு உருவாக்கவுள்ளதாக கூறியிருந்த ஒகினாவா நிறுவனம் இந்த பைக்கில் வழங்கவுள்ள எலக்ட்ரிக் மோட்டார் குறித்த விபரங்களை இதுவரையில் வெளியிடவில்லை.

இந்தியாவில் அடுத்தடுத்த அறிமுகமாகும் எலக்ட்ரிக் பைக்குகள்!! மிக விரைவில் ஒகி100 அறிமுகமாகிறது...

நமக்கு தெரிந்தவரை கேடிஎம்125 போன்ற ப்ரீமியம் 125சிசி பைக்குகளுக்கு இணையான ஆற்றலில் இயங்கும் விதத்தில் ஒகி100 எலக்ட்ரிக் பைக் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படலாம். அதேபோல், பைக்கின் அதிகப்பட்ச வேகம் 100kmph என்ற அளவில் நிர்ணயிக்கப்படலாம்.

இந்தியாவில் அடுத்தடுத்த அறிமுகமாகும் எலக்ட்ரிக் பைக்குகள்!! மிக விரைவில் ஒகி100 அறிமுகமாகிறது...

எரிபொருள் என்ஜினை போன்று ஒகி100 பைக்கில் எலக்ட்ரிக் மோட்டார் அடிப்பகுதியில் வழங்கப்படவுள்ளதால், பைக்கின் காற்று இயக்கவியல் பண்பு சிறப்பானதாகவே இருக்கும். அதேநேரம், எல்இடி விளக்குகள், முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் திரை, டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளிட்டவற்றையும் இந்த பைக்கில் எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் அடுத்தடுத்த அறிமுகமாகும் எலக்ட்ரிக் பைக்குகள்!! மிக விரைவில் ஒகி100 அறிமுகமாகிறது...

ஏற்கனவே கூறியதுபோல், கிட்டத்தட்ட 3 வருடங்களாக இதன் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகளில் ஒகினாவா நிறுவனம் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இந்த பிராண்டின் தயாரிப்பு மாடல்கள் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு எந்த அளவில் உதவியாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles

மேலும்... #ஒகினவா #okinawa
English summary
Okinawa Oki100 Electric Bike Teased Ahead Of Launch, Here Are All The Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X