அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது இந்திய தயாரிப்பு இ-ஸ்கூட்டர்... தரமான சம்பவத்தை உறுதிப்படுத்திய ஓலா!

பிரபல கால் டாக்சி நிறுவனமான Ola, அதன் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அமெரிக்க அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த மேலும் முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது இந்திய தயாரிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... தரமான சம்பவத்தை உறுதிப்படுத்திய பிரபல நிறுவனம்!

பிரபல கால் டாக்சி நிறுவனமான Ola (ஓலா), அண்மையில் அதன் புதுமுக மின்சார ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனக்கு அறிமுகப்படுத்தியது. இதுவே நிறுவனம் மின் வாகன தயாரிப்பில் களமிறங்கி விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முதல் வாகனமாகும். S1 (எஸ்1) மற்றும் S1 Pro (எஸ்1 ப்ரோ) ஆகிய இருவிதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது இந்திய தயாரிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... தரமான சம்பவத்தை உறுதிப்படுத்திய பிரபல நிறுவனம்!

இவற்றை தமிழகத்தின் ஓசூரில் வைத்து நிறுவனம் உற்பத்தி செய்ய இருக்கின்றது. இதற்காக 500 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமான உற்பத்தி ஆலையை நிறுவனம் கட்டமைதத்து வருகின்றது. மிக விரைவில் உற்பத்தி ஆலை கட்டமைப்பு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. ஆகையால், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உற்பத்தி பணியும் மிக விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது இந்திய தயாரிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... தரமான சம்பவத்தை உறுதிப்படுத்திய பிரபல நிறுவனம்!

இதைத் தொடர்ந்து, புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெலிவரி கொடுக்கும் பணியை ஓலா தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த இருசக்கர வாகனங்களை இந்தியர்களுக்கு மட்டுமின்றி வேறு நாட்டவர்களுக்கும் அனுப்பி வைக்க இருப்பதாக நிறுவனம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது இந்திய தயாரிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... தரமான சம்பவத்தை உறுதிப்படுத்திய பிரபல நிறுவனம்!

இதுகுறித்து நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது, "மிக விரைவில் தங்கள் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அமெரிக்காவில் அறிமுகம் செய்ய இருக்கின்றோம். அடுத்த ஆண்டிற்குள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷிப்பிங் செய்யப்படும்" என தெரிவித்திருக்கின்றார். டுவிட்டர் பயனர் ஒருவர் எழுப்பிய கேள்வியின் அடிப்படையில் இந்த தகவலை அவர் வெளியிட்டிருக்கின்றார்.

அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது இந்திய தயாரிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... தரமான சம்பவத்தை உறுதிப்படுத்திய பிரபல நிறுவனம்!

தமிழகத்தில் உருவாகி வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி ஆலை மிகவும் பிரமாண்டமானது மட்டுமில்லைங்க, அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதும்கூட. அதாவது நிறுவனம் ஆண்டிற்கு 10 மில்லியன் உருவாக்கம் என்ற திறனில் செயல்படக் கூடியது என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. அதேவேலையில், ஆரம்பத்தில் ஆண்டிற்கு 2 மில்லியன் வாகன உற்பத்தி என்ற இலக்கில் இது இயங்க இருக்கின்றது.

அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது இந்திய தயாரிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... தரமான சம்பவத்தை உறுதிப்படுத்திய பிரபல நிறுவனம்!

இங்கு தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உலகின் சில முக்கிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன. ஓலா நிறுவனம் தற்போது அறிமுகம் செய்திருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் எஸ்1 மலிவு விலைக் கொண்ட தேர்வாக இருக்கின்றது. அதற்கு ரூ. 99,999 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைக் காட்டிலும் கூடுதல் விலைக் கொண்ட தேர்வாக எஸ்1 ப்ரோ இருக்கின்றது. இதற்கு ரூ. 1,29,999 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது இந்திய தயாரிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... தரமான சம்பவத்தை உறுதிப்படுத்திய பிரபல நிறுவனம்!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2.98 kWh மற்றும் 3.97 kWh என இருவிதமான பேட்டரி பேக் தேர்விலும், 8.5 kW திறன் கொண்ட மின் மோட்டார் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும். இதில் 2.98 kWh பேட்டரி பேக் அதிகபட்சமாக 120 கிமீ வரை ஒரு முழுமையான சார்ஜிக்கு ரேஞ்ஜை வழங்குகிறது. இதைவிட அதிக ரேஞ்ஜ் தரும் பேட்டரி பேக்காக 3.97 kWh இருக்கிறது. இது ஓர் முழுமையான சார்ஜில் 181 கிமீ தூரம் வரை ரேஞ்ஜை வழங்கும். எஸ்1 ப்ரோவின் ரேஞ்ஜ் திறனே இது ஆகும்.

அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது இந்திய தயாரிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... தரமான சம்பவத்தை உறுதிப்படுத்திய பிரபல நிறுவனம்!

எஸ்1 ப்ரோ அதிக ரேஞ்ஜை வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமல்ல இது அதிக வேகத்தில் பயணிக்கக் கூடிய மின்சார ஸ்கூட்டரும் கூட. இது, உச்சபட்ச வேகமான மணிக்கு 115 கிமீ எனும் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. அதேவேலையில், வெறும் 3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் வேகத்தையும், ஐந்து செகண்டுகளுக்குள் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தையும் எட்டக் கூடிய திறனையும் இது பெற்றிருக்கின்றது.

அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது இந்திய தயாரிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... தரமான சம்பவத்தை உறுதிப்படுத்திய பிரபல நிறுவனம்!

இதைவிட திறன் மற்றும் ரேஞ்ஜ் ஆகியவற்றை குறைவாக வெளியேற்றும் தேர்வாக எஸ்1 இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ ஆகும். இது, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் வேகத்தை எட்ட 3.6 செகண்டுகளுக்குள் வரை எடுத்துக் கொள்ளும். இத்தகைய அதிக திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களாகவே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது இந்திய தயாரிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... தரமான சம்பவத்தை உறுதிப்படுத்திய பிரபல நிறுவனம்!

ஓலா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இன்னும் பல முக்கிய மற்றும் சிறப்பு வசதிகளை வழங்கியிருக்கின்றது. 7 அங்குல தொடுதிரை, 4ஜி இணைப்பு, ப்ளூடூத் இணைப்பு மற்றும் Wifi இணைப்பு, க்ரூஸ் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு கன்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் செய்யும் வசதி என எக்கசக்க வசதிகளை நிறுவனம் வாரி வழங்கியிருக்கின்றது. இவற்றில் பல சிறப்பு வசதிகளை இன்னும் பிற நிறுவனங்கள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் விற்பனையில் புதிய புரட்சியை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Ola ceo confirms electric scooter us launch
Story first published: Saturday, September 4, 2021, 15:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X