ஓலா மின்சார ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் வீடியோ... ரொம்ப தீவிரமா செஞ்சிட்டு இருக்காங்க... அடுத்து டெலிவரிதான்!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.

ஓலா மின்சார ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் வீடியோ... ரொம்ப தீவிரமா செஞ்சிட்டு இருக்காங்க... அடுத்து டெலிவரிதான்!

பிரபல கால் டாக்சி சேவை நிறுவனமான ஓலா, அதன் மின்சார இருசக்கர வாகனங்களை மிக சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதை அறிமுகம் செய்த கையோடு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான புக்கிங் பணிகளையும் நாட்டில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, மின்சார ஸ்கூட்டரை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு அவற்றை டெலிவரி கொடுப்பதற்கான பணியை நிறுவனம் தொடங்கியது. அதாவது, உற்பத்தி பணியை தொடங்கியது.

ஓலா மின்சார ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் வீடியோ... ரொம்ப தீவிரமா செஞ்சிட்டு இருக்காங்க... அடுத்து டெலிவரிதான்!

இந்த நிலையில், தற்போது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை புக் செய்தோருக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் மற்றும் ஓர் புதிய தகவல் தற்போது வெளியாகியிருக்கின்றது. நிறுவனம், மின்சார ஸ்கூட்டரின் உற்பத்தி பணியை மிக வேகமாக செய்து வருவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் ஓர் வீடியோவை அவரது டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டிருக்கின்றார்.

ஓலா மின்சார ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் வீடியோ... ரொம்ப தீவிரமா செஞ்சிட்டு இருக்காங்க... அடுத்து டெலிவரிதான்!

அவ்வீடியோவில் ஓலா மின்சார ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையில் பெண்கள் மிக தீவிரமாக உற்பத்தி பணியில் ஈடுபட்டுவதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆகையால், கூடிய விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓலா மின்சார ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் வீடியோ... ரொம்ப தீவிரமா செஞ்சிட்டு இருக்காங்க... அடுத்து டெலிவரிதான்!

எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எனும் இரு விதமான தேர்வுகளில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும். இவையிரண்டிற்குமான புக்கிங் தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இதனை வரும் நவம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்பு ரூ. 499 என்ற மிகக் குறைவான முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டன.

ஓலா மின்சார ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் வீடியோ... ரொம்ப தீவிரமா செஞ்சிட்டு இருக்காங்க... அடுத்து டெலிவரிதான்!

மீண்டும் இதே முன் தொகையில் புக்கிங் பணிகள் தொடங்கலாம் என யூகிக்கப்படுகின்றது. தொடர்ந்து, ஓலா நிறுவனம் வரும் நவம்பர் 10ம் தேதி முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கலாம் என தெரிவித்திருக்கின்றது. ஓலா நிறுவனம் அண்மையில் தனது மின்சார வாகனங்களுக்கான அதிவிரைவு சார்ஜ் ஏற்றும் நிலையத்தை திறந்து வைத்தது. இதுவே நிறுவனத்தின் முதல் அதிவிரைவு சார்ஜ் செய்யும் மையம் ஆகும்.

ஓலா மின்சார ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் வீடியோ... ரொம்ப தீவிரமா செஞ்சிட்டு இருக்காங்க... அடுத்து டெலிவரிதான்!

ஹைப்பர்-சார்ஜர் நெட்வொர்க் என்ற அதிவிரைவு பேட்டரி சார்ஜ் ஏற்றும் நிலையத்தையே நிறுவனம் திறந்திருக்கின்றது. இதனை நாடு முழுவதும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட நகரங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான அதி விரைவு பேட்டரி சார்ஜ் ஏற்றும் மையங்களை அமைக்க ஓலா திட்டமிட்டுள்ளது.

ஓலா மின்சார ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் வீடியோ... ரொம்ப தீவிரமா செஞ்சிட்டு இருக்காங்க... அடுத்து டெலிவரிதான்!

ஓலா நிறுவனம் எஸ்1 மாடல் மின்சார ஸ்கூட்டருக்கு ரூ. 99,999 என்ற விலையையும், எஸ்1 ப்ரோ தேர்விற்கு ரூ. 1,29,999 என்ற விலையையும் நிர்ணயித்துள்ளது. எஸ்1 தேர்வில் 2.98KWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. எஸ்1 ப்ரோ தேர்வில் 3.97KWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஓலா மின்சார ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் வீடியோ... ரொம்ப தீவிரமா செஞ்சிட்டு இருக்காங்க... அடுத்து டெலிவரிதான்!

இப்பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 181 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதைவிட சற்று குறைவான ரேஞ்ஜையே எஸ்1 வழங்குகின்றது. அது ஓர் முழுமையான சார்ஜில் 121 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த ரேஞ்ஜ் விபரங்கள் அராய் அமைப்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் ஆகும்.

ஓலா மின்சார ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் வீடியோ... ரொம்ப தீவிரமா செஞ்சிட்டு இருக்காங்க... அடுத்து டெலிவரிதான்!

இதுமட்டுமின்றி இன்னும் பல சிறப்பு வசதிகளை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றிருக்கின்றது. இந்தியாவில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள் நாட்டிற்கு மட்டுமின்றி ஐரோப்பா, இங்கிலாந்து, லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன.

ஓலா மின்சார ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் வீடியோ... ரொம்ப தீவிரமா செஞ்சிட்டு இருக்காங்க... அடுத்து டெலிவரிதான்!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டீலர்கள் ஏதுமின்றி விற்பனைச் செய்யப்பட இருக்கின்றன. அதாவது, "டைரக்ட்-டூ-ஹோம்" எனும் டீலர்கள் இல்லாமல் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனத்தை வீட்டுக்கே சென்று டெலிவரி செய்ய இருக்கின்றது. இதன் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் மின்சார வாகனங்களை வழங்க முடியும் என நிறுவனம் நம்புகின்றது.

ஓலா இ-ஸ்கூட்டர் உற்பத்தி வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles

மேலும்... #ஓலா #ola
English summary
Ola ceo reveals e scooter production video
Story first published: Wednesday, October 27, 2021, 18:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X