இதைதான் எதிர்பாத்தோம்... சூப்பரான காரியத்தை செய்ய தொடங்கிய ஓலா... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் ஜாலி!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சூப்பரான காரியத்தை செய்ய தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதைதான் எதிர்பாத்தோம்... சூப்பரான காரியத்தை செய்ய தொடங்கிய ஓலா... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் ஜாலி!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தொடங்கியது.

இதைதான் எதிர்பாத்தோம்... சூப்பரான காரியத்தை செய்ய தொடங்கிய ஓலா... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் ஜாலி!

இந்த வரிசையில் தற்போது தனது சார்ஜிங் நெட்வொர்க்கை இந்தியா முழுவதும் இன்ஸ்டால் செய்யும் பணிகளை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதனை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஹைப்பர்சார்ஜர் (Hypercharger) என அழைக்கிறது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான பாவிஷ் அகர்வால் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதைதான் எதிர்பாத்தோம்... சூப்பரான காரியத்தை செய்ய தொடங்கிய ஓலா... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் ஜாலி!

வரும் நாட்களில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஹைப்பர்சார்ஜர்களின் எண்ணிக்கையை உயர்த்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 2022ம் ஆண்டின் இறுதிக்குள் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்காக இந்தியா முழுவதும் இதுபோன்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சார்ஜிங் பாயிண்ட்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இதைதான் எதிர்பாத்தோம்... சூப்பரான காரியத்தை செய்ய தொடங்கிய ஓலா... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் ஜாலி!

எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வாடிக்கையாளர்களுக்காக இந்தியா முழுவதும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் தற்போது இந்த ஹைப்பர்சார்ஜர்களை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பொருத்தி வருகிறது.

இதைதான் எதிர்பாத்தோம்... சூப்பரான காரியத்தை செய்ய தொடங்கிய ஓலா... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் ஜாலி!

இதுகுறித்து பாவிஷ் அகர்வால் சமூக வலை தளத்தில் கூறியிருப்பதாவது: பல்வேறு நகரங்களில் ஹைப்பர்சார்ஜர்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் முக்கியமான பெட்ரோல் பங்க்குகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் ஹைப்பர்சார்ஜர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

இதைதான் எதிர்பாத்தோம்... சூப்பரான காரியத்தை செய்ய தொடங்கிய ஓலா... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் ஜாலி!

அடுத்த ஆண்டிற்குள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹைப்பர்சார்ஜர்கள் அமைக்கப்படும். அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த ஹைப்பர்சார்ஜர்களை வரும் 2022ம் ஆண்டு ஜூன் மாத இறுதி வரையில் இலவசமாக பயன்படுத்தி கொள்ள முடியும். இவ்வாறு பாவிஷ் அகர்வால் சமூக வலை தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதைதான் எதிர்பாத்தோம்... சூப்பரான காரியத்தை செய்ய தொடங்கிய ஓலா... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் ஜாலி!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஹைப்பர்சார்ஜர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரிகளை வெறும் 18 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 50 சதவீதம் வரை சார்ஜ் செய்து விடும் திறன் வாய்ந்தவை. வெறும் 18 நிமிடங்களில் பாதி பேட்டரி சார்ஜ் ஆகி விடும் என்பது உண்மையிலேயே வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த விஷயமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதைதான் எதிர்பாத்தோம்... சூப்பரான காரியத்தை செய்ய தொடங்கிய ஓலா... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் ஜாலி!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போதைய நிலையில் ஏத்தர் 450எக்ஸ், டிவிஎஸ் ஐ-க்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் அவை போட்டியிட்டு வருகின்றன.

இதைதான் எதிர்பாத்தோம்... சூப்பரான காரியத்தை செய்ய தொடங்கிய ஓலா... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் ஜாலி!

இந்தியாவில் தற்போது நிறைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகமாகி வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்துவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதுதான் இதற்கு காரணம். இதன் விளைவாக தற்போது இந்திய சாலைகளில் நிறைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காண முடிகிறது.

இதைதான் எதிர்பாத்தோம்... சூப்பரான காரியத்தை செய்ய தொடங்கிய ஓலா... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் ஜாலி!

இந்திய சாலைகளில் எலெக்ட்ரிக் கார்களை பார்ப்பது என்பதும் கூட தற்போது சாதாரணமான ஒரு விஷயமாகி விட்டது. குறிப்பாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களை மிக அதிகளவில் காண முடிகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி தன்வசம் வைத்துள்ளது.

இதைதான் எதிர்பாத்தோம்... சூப்பரான காரியத்தை செய்ய தொடங்கிய ஓலா... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் ஜாலி!

இதே டாடா நிறுவனத்தின் டிகோர் எலெக்ட்ரிக் கார், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய எலெக்ட்ரிக் கார்களும் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. வரும் காலங்களில் இந்திய சந்தையில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் கார்களின் அறிமுகத்தை பார்க்கலாம். இதில், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் ஆகிய கார்கள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இவை ஏற்கனவே விற்பனையில் உள்ள ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் ஆகும்.

Most Read Articles

English summary
Ola electric begins to set up hyperchargers
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X