தமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி பார்த்த பிரபலம்! யார் தெரியுமா?

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பிரபலம் ஒருவர் ஓட்டி பார்த்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி பார்த்த பிரபலம்! யார் தெரியுமா?

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தமிழ்நாட்டின் ஓசூரில், எலெக்ட்ரிக் டூவீலர் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இதுதான் உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் டூவீலர் ஆலையாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 2,400 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி பார்த்த பிரபலம்! யார் தெரியுமா?

இந்த தொழிற்சாலையை வேகமாக கட்டமைத்து வரும் அதே நேரத்தில், இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தயாராகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை நடப்பாண்டு அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி பார்த்த பிரபலம்! யார் தெரியுமா?

அனேகமாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் 450எக்ஸ் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன், ஓலா நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போட்டியிடும். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கும் என தெரிகிறது.

தமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி பார்த்த பிரபலம்! யார் தெரியுமா?

இது மிகவும் சிறப்பான ரேஞ்ச் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிலோ மீட்டராக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தோற்றம் எவ்வாறு இருக்கும்? சாலையில் எப்படி இயங்கும்? என்ற தகவலை ஓலா எலெக்ட்ரிக் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி பார்த்த பிரபலம்! யார் தெரியுமா?

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பாவிஷ் அகர்வால் டெஸ்ட் ரைடு செய்துள்ளார். அத்துடன் அந்த வீடியோவை அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதான எதிர்பார்ப்பை வாடிக்கையாளர்கள் மத்தியில் இது அதிகரிக்க செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி பார்த்த பிரபலம்! யார் தெரியுமா?

ஃபாஸ்ட் சார்ஜிங் முறை மூலம் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெறும் 18 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும் என கூறப்படுகிறது. அதாவது 18 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே, 75 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். எனவே வாடிக்கையாளர்களுக்கு இது மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி பார்த்த பிரபலம்! யார் தெரியுமா?

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலமாகி வருகின்றன. குறிப்பாக வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தியாவில் தற்போது ஏத்தர் 450எக்ஸ், பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.

தமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி பார்த்த பிரபலம்! யார் தெரியுமா?

இந்த வரிசையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் இணையவுள்ளது. விலை நிர்ணயம் மட்டும் சரியாக இருந்தால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி தள்ளி வருகிறது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை

ஓலா ஸ்கூட்டர் தயாராகிவிட்ட நிலையில், உற்பத்தி ஆலையும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அசுர வேகத்தில் தயாராகி வருகிறது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை

ஓசூர் அருகே அமைக்கப்பட்டு வரும் இந்த ஆலையின் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டன. மிக விரைவில் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட உள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை ரூ.2,400 கோடி முதலீட்டில் அமைக்கப்படுகிறது. இந்த ஆலையிந் மூலமாக 10,000 பேருக்கு நேரடியாகவும், ஆயிரக்கணக்கானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை

இந்த ஆலை மிகவும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கட்டமைக்கப்பட்டு வருகிறது. மேலும், பசுமை அம்சங்கள் கொண்ட ஆலையாகவும் இருக்கும்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை

புதிய ஓலா மின்சார வாகன ஆலையில் முதலாவதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்படும். பின்னர், இருசக்கர மின்சார வாகனங்கள் மட்டுமின்றி, பல்வேறு வகையான மின்சார வாகனங்களும் உற்பத்தி செய்யப்படும்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலையில் இரண்டு நிமிடத்திற்கு ஒரு மின்சார ஸ்கூட்டர் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், ஆண்டுக்கு 2 மில்லியன் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உற்பத்தி இலக்குடன் இந்த ஆலை செயல்பட துவங்கும்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை

இங்கு உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதனால், இந்த ஆலை மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பை தமிழகத்திற்கு வழங்கும்.

Most Read Articles
English summary
Ola Electric CEO Bhavish Aggarwal Test Rides Upcoming Electric Scooter: Details Inside. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X