ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தங்கு தடையற்ற பயணம்.. முதல் ஹைப்பர்சார்ஜர் நிலையம் திறப்பு!

ஓலா நிறுவனத்தின் மின்சார வாகனங்களுக்கான முதல் அதிவிரைவு சார்ஜ் ஏற்றும் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹைப்பர்சார்ஜர் நிலையம் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதமாக அ்மையும் என்று கருதப்படுகிறது.

ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முதல் ஹைப்பர்சார்ஜர் நிலையம் திறப்பு!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்1 என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்பார்த்தது போலவே புக்கிங்கிலும் அசத்தி வருகிறது. இந்த நிலையில், அதிகமாக முன்பதிவு குவிந்ததால், தற்காலிகமாக புக்கிங் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் செய்தவர்களுக்கு வரும் நவம்பர் 10ந் தேதி முதல் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது. மேலும், வரும் 1ந் தேதி முதல் மீண்டும் புக்கிங் துவங்கப்பட உள்ளது.

ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முதல் ஹைப்பர்சார்ஜர் நிலையம் திறப்பு!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் விதத்தில், பல்வேறு திட்டங்களை ஓலா செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க் என்ற அதிவிரைவு பேட்டரி சார்ஜ் ஏற்றும் நிலையத்தை நாடு முழுவதும் அமைக்க திட்டமிட்டுள்ளது.

ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முதல் ஹைப்பர்சார்ஜர் நிலையம் திறப்பு!

நாடுமுழுவதும் 400 நகரங்களில் 1 லட்சம் அதிவிரைவு பேட்டரி சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க உள்ளதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தது. முதல் கட்டமாக 100 நகரங்களில் 5,000 ஹைப்பர்சார்ஜர் நிலையங்களை திறக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, முதல் ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க் நிலையத்தை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திறந்துள்ளது.

ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முதல் ஹைப்பர்சார்ஜர் நிலையம் திறப்பு!

இந்த தகவலை ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் சமூக ஊடக பக்கம் மூலமாக வெளியிட்டுள்ளார். முதல் ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க் நிலையத்தில் தனது ஓலா எஸ்1 ஸ்கூட்டருக்கு சார்ஜ் ஏற்றியது குறித்த படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முதல் ஹைப்பர்சார்ஜர் நிலையம் திறப்பு!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஹைப்பர்சார்ஜர் நிலையங்களில் மிக விரைவாக ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எதிர்காலத்தில் அந்த நிறுவனம் வெளியிட இருக்கும் மின்சார வாகனங்களை சார்ஜ் ஏற்ற முடியும். தற்போது விற்பனைக்கு வந்துள்ள ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் மின்சார வாகனமான எஸ்-1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை பூஜ்யத்திலிருந்து 50 சதவீதம் என்ற அளவை வெறும் 18 நிமிடங்களில் சார்ஜ் ஏற்றுவிட முடியும்.

ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முதல் ஹைப்பர்சார்ஜர் நிலையம் திறப்பு!

இந்த சார்ஜ் மூலமாக ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 75 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை பெற முடியும். எனவே, அவசர சமயங்களில் இந்த ஹைப்பர்சார்ஜர் நிலையங்கள் வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். அத்துடன், பெருநகரங்களில் இந்த சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் மிக நெருக்கமாக அமைக்கப்பட உள்ளதால், தங்கு தடையற்ற பயண அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முதல் ஹைப்பர்சார்ஜர் நிலையம் திறப்பு!

அதேபோன்று, ஒரே நேரத்தில் பல வாகனங்களுக்கு இந்த ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க் நிலையங்களில் சார்ஜ் ஏற்ற முடியும். எனவே, காத்திருக்கும் அவசியம் பெரும்பாலும் தவிர்க்கப்படும். முதல் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் மிக நெருக்கமாக இந்த சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. விபரங்களும் ஓலா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முதல் ஹைப்பர்சார்ஜர் நிலையம் திறப்பு!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 என்ற பெயரில் வந்துள்ள முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆகஸ்ட் 15ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டர் எஸ்1 மற்றும் எஸ்1 புரோ என்ற இரண்டு மாடல்களில் கிடைக்கும். இதில், எஸ்1 ஸ்கூட்டருக்கு ரூ.1 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் 120 கிமீ தூரம் வரை பயணிக்கும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 3.97kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முதல் ஹைப்பர்சார்ஜர் நிலையம் திறப்பு!

அதேபோன்று, எஸ்1 புரோ ஸ்கூட்டரானது அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மாடலாக உள்ளது. இந்த மாடலில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 180 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மணிக்கு 115 கிமீ வேகம் வரை செல்லும். ரூ.1.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முதல் ஹைப்பர்சார்ஜர் நிலையம் திறப்பு!

இந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி மற்றும் அது எவ்வளவு தூரம் செல்லும் என்பதை பரைசாற்றும் விதமாக பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அந்நிறுவனத்தின் வாகன ஆலையை பார்வையிடுவதற்கு ஓலா எஸ்1 ஸ்கூட்டரில் பயணம் மேற்கொள்வதாக பவிஷ் அகவர்வால் படங்களை வெளியிட்டு இருந்தார்.

ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முதல் ஹைப்பர்சார்ஜர் நிலையம் திறப்பு!

இதன்மூலமாக, இந்தியாவிலேயே மிக நீண்ட தூரம் பயணிப்பதற்கான வாய்ப்பை ஓலா எஸ்1 புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கும் என்ற நம்பிக்கை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் என்று கருதலாம். மேலும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் மூலமாக வாகனத்தின் வேகம், ரேஞ்ச், பழுது ஏற்படுவது குறித்த எச்சரிக்கை விஷயங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

Most Read Articles

மேலும்... #ஓலா #ola
English summary
Ola Electric launches its first Hypercharger in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X