செம்ம ரெஸ்பான்ஸ் கிடைக்குது... 1000க்கும் அதிகமான நகரங்களில் டெஸ்ட் டிரைவ் திட்டத்தை தொடங்க Ola திட்டம்!

ஓலா நிறுவனம் அதன் இ-ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்திருப்பதாக தகவல் தெரிவித்திருக்கின்றது. இதனை முன்னிட்டு தற்போது குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே மேற்கொண்டு வரும் இந்த திட்டத்தை ஆயிரத்திற்கும் அதிகமான நகரங்களில் தொடங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

செம்ம ரெஸ்பான்ஸ் கிடைக்குது... 1000க்கும் அதிகமான நகரங்களில் டெஸ்ட் டிரைவ் திட்டத்தை தொடங்க Ola திட்டம்!

பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா (Ola), ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) எனும் பெயரில் மின்சார இருசக்கர வாகன தயாரிப்பை மேற்கொண்டு வருகின்றது. இந்நிறுவனம் எஸ்1 (Ola S1) மற்றும் எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) எனும் இரு மாடல்களை ஏற்கனவே நாட்டில் அறிமுகம் செய்துவிட்டது.

செம்ம ரெஸ்பான்ஸ் கிடைக்குது... 1000க்கும் அதிகமான நகரங்களில் டெஸ்ட் டிரைவ் திட்டத்தை தொடங்க Ola திட்டம்!

இந்த இருசக்கர வாகனத்திற்கு ஏற்கனவே பல லட்சக் கணக்கான புக்கிங்குகள் கிடைத்திருக்கும் நிலையில் இதனை இரட்டிப்பாக்கும் முயற்சியில் நிறுவனம் தற்போது ஈடுபட தொடங்கியுள்ளது. பரந்தளவு டெஸ்ட் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, அதன் வாயிலாக மக்களை தங்களின் தயாரிப்பின் பக்கம் ஈர்க்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

செம்ம ரெஸ்பான்ஸ் கிடைக்குது... 1000க்கும் அதிகமான நகரங்களில் டெஸ்ட் டிரைவ் திட்டத்தை தொடங்க Ola திட்டம்!

இந்த நடவடிக்கையில் நிறுவனம் ஏற்கனவே களமிறங்கிவிட்டது குறிப்பிடத்தகுந்தது. பெங்களூரு, அஹமதாபாத், டெல்லி மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. இதைத்தொடர்ந்து, சென்னை, மும்பை, ஹைதரபாத், கொச்சி மற்றும் புனே ஆகிய நகரங்களிலும் தொடங்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

செம்ம ரெஸ்பான்ஸ் கிடைக்குது... 1000க்கும் அதிகமான நகரங்களில் டெஸ்ட் டிரைவ் திட்டத்தை தொடங்க Ola திட்டம்!

இந்த அனைத்து நகரங்களிலும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருவதாக நிறுவனம் கூடுதல் தகவலை தற்போது வெளியிட்டிருக்கின்றது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் விரைவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க இருப்பதாக சமூக வலைதளத்தின் நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கின்றது.

செம்ம ரெஸ்பான்ஸ் கிடைக்குது... 1000க்கும் அதிகமான நகரங்களில் டெஸ்ட் டிரைவ் திட்டத்தை தொடங்க Ola திட்டம்!

எந்தவொரு நிறுவனம் இதற்கு முன்னதாக செய்திராத வகையில் இந்த டெஸ்ட் டிரைவ் திட்டம் அமைய இருக்கின்றது. ஆகையால், ஒட்டுமொத்த இந்திய மின் வாகன சந்தையுமே இந்த அறிவிப்பு அதிர வைத்திருக்கின்றது. இதன் வாயிலாக பன்தரப்பட்ட மக்களால் ஓலா இ-ஸ்கூட்டரை டெஸ்ட் செய்து பார்க்க முடியும். இது மேலும் பல மடங்கு புக்கிங் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய உதவும்.

செம்ம ரெஸ்பான்ஸ் கிடைக்குது... 1000க்கும் அதிகமான நகரங்களில் டெஸ்ட் டிரைவ் திட்டத்தை தொடங்க Ola திட்டம்!

இ-ஸ்கூட்டரை ஏற்கனவே புக் செய்திருக்கும் வாடிக்கையாளர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக, இந்த வாகனம் எப்போது டெலிவரி செய்யப்படும் என்பது இருக்கின்றது. நிறுவனம், இந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்கனவே முற்று புள்ளியை வைத்துவிட்டது. இந்த மாதத்தின் இறுதிக்குள் டெலிவரி பணிகள் தொடங்கிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்ம ரெஸ்பான்ஸ் கிடைக்குது... 1000க்கும் அதிகமான நகரங்களில் டெஸ்ட் டிரைவ் திட்டத்தை தொடங்க Ola திட்டம்!

புக்கிங் வரிசையின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவரி கொடுக்கப்பட இருக்கின்றன. இதன்படி, நடப்பு மாதம், வரும் டிசம்பர், 2022 ஜனவரி மற்றும் 2022 பிப்ரவரி ஆகிய மாதங்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவரி கொடுக்கப்பட இருக்கின்றன.

செம்ம ரெஸ்பான்ஸ் கிடைக்குது... 1000க்கும் அதிகமான நகரங்களில் டெஸ்ட் டிரைவ் திட்டத்தை தொடங்க Ola திட்டம்!

தற்போது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனை அடுத்த மாதம் மீண்டும் நிறுவனம் தொடங்க இருக்கின்றது. எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய இரு மாடல்களுக்கும் ரூ. 499 முன்தொகையின்கீழ் முன் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

செம்ம ரெஸ்பான்ஸ் கிடைக்குது... 1000க்கும் அதிகமான நகரங்களில் டெஸ்ட் டிரைவ் திட்டத்தை தொடங்க Ola திட்டம்!

ஓலா மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனையகங்கள் வாயிலாக அல்லாமல் நேரடியாக விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது. இந்த டைரக்டு-டூ-ஹோம் (direct-to-home) திட்டத்தின் வாயிலாக இருசக்கர வாகனத்தை விற்பனைக்கு வழங்குவதனால் பல மடங்கு இருசக்கர வாகனத்தின் விலையை குறைவாக்க வைத்திருக்க முடியும் என நிறுவனம் நம்புகின்றது.

செம்ம ரெஸ்பான்ஸ் கிடைக்குது... 1000க்கும் அதிகமான நகரங்களில் டெஸ்ட் டிரைவ் திட்டத்தை தொடங்க Ola திட்டம்!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரத்தில் டெஸ்ட் டிரைவ் என்ற இலக்கை வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் எட்ட நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக, அந்நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் அவரது டுவிட்டர் பதிவின் வாயிலாக தெரிவித்திருக்கின்றார். அடுத்ததாக சூரத், திருவனந்தபுரம், கோழிகோடு, விசாகப்பட்டினம், விஜயவாடா, கோயம்பத்தூர், வதோதரா, புவனேஸ்வர், நாக்பூர் மற்றும் திருப்பூர் ஆகிய நகர வாசிகளுக்கு ஓலா இ-ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செம்ம ரெஸ்பான்ஸ் கிடைக்குது... 1000க்கும் அதிகமான நகரங்களில் டெஸ்ட் டிரைவ் திட்டத்தை தொடங்க Ola திட்டம்!

ஓலா எஸ்1 மின்சார ஸ்கூட்டருக்கு ரூ. 99,999 என்ற விலையும், எஸ்1 ப்ரோ தேர்விற்கு ரூ. 1,29,999 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓலா எஸ்1 அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகம், 121 ரேஞ்ஜ் ஆகிய திறன்களுடன் விற்பனைக்குக் கிடைக்கும். இதைவிட அதிக திறன்கள் கொண்ட வாகனமாக எஸ்1 ப்ரோ இருக்கின்றது. இது மணிக்கு 115 கிமீ வேகம் மற்றும் 181 கிமீ ரேஞ்ஜ் ஆகிய திறன்களைக் கொண்டிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Ola electric plans to take test rides of its electric scooter 1000 plus cities across india
Story first published: Saturday, November 20, 2021, 16:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X