10 விதமான நிறங்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! எல்லாமே சூப்பரா இருக்கே

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வழங்கப்பட உள்ள நிறத்தேர்வுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

10 விதமான நிறங்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! எல்லாமே சூப்பரா இருக்கே

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருவது இந்நேரம் உங்களில் பெரும்பாலானோர்க்கு தெரிந்திருக்கும்.

10 விதமான நிறங்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! எல்லாமே சூப்பரா இருக்கே

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் நடைபெற்றுவரும் நிலையில் இந்த வாகனத்திற்கு 10 நிறங்களை தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது. 10 என்பது மிக அதிகம். இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த நிறத்தில் ஸ்கூட்டரை வாங்க அதிக தேர்வுகள் உள்ளன.

10 விதமான நிறங்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! எல்லாமே சூப்பரா இருக்கே

இந்த 10 நிறங்களின் அதிகாரப்பூர்வ பெயர்கள் இ-ஸ்கூட்டரின் அறிமுகத்தின்போது வெளியிடப்பட உள்ளன. தற்போதைக்கு அந்த நிறங்களில் ஸ்கூட்டரின் தோற்றத்தை மட்டுமே தயாரிப்பு நிறுவனம் அதன் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

10 விதமான நிறங்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! எல்லாமே சூப்பரா இருக்கே

இது தொடர்பான படத்தில் நீலம், மஞ்சள், சிவப்பு, இளம்சிவப்பு, வெள்ளை, சில்வர், அடர் நீலம் உள்பட ஏற்கனவே நமக்கு தெரிய வந்துவிட்ட கருப்பு நிறத்திலும் ஓலா ஸ்கூட்டர் காட்சியளிக்கிறது. இந்த நிறங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக மேட் ஷேட்டிலும், பளபளப்பான ஷேடிலும் உள்ளன.

10 விதமான நிறங்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! எல்லாமே சூப்பரா இருக்கே

ஆனால் கருப்பு நிறத்தை இரு ஷேடிலும் பெற முடியும். இந்த 10 விதமான நிறங்கள் குறித்த ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓலா ஸ்கூட்டரின் இணையற்ற ஸ்கூட்டர் அனுபவத்தை பெறவுள்ள வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய பரந்த அளவிலான வண்ணங்கள் உள்ளன.

10 விதமான நிறங்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! எல்லாமே சூப்பரா இருக்கே

இ-ஸ்கூட்டரின் அம்சங்கள் மற்றும் விலையை ஓலா வரும் நாட்களில் வெளிப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிறத்தில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பெருகி வரும் முன்பதிவுகளையும் பார்க்கலாம். கடந்த ஜூலை 15ஆம் தேதி ஓலா இ-ஸ்கூட்டருக்கு முன்பதிவுகள் துவங்கப்பட்டன.

10 விதமான நிறங்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! எல்லாமே சூப்பரா இருக்கே

ரூ.499 என்கிற முன் தொகையுடன் துவங்கப்பட்ட இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு 24 மணிநேரத்தில் 1 லட்சத்தை கடந்தது மொத்த ஆட்டோமொபைல் துறையின் கவனத்தையும் பெற்றது. முன்பதிவு தவறுதலாக ரத்தானால் ரூ.499 தொகை திரும்ப வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 விதமான நிறங்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! எல்லாமே சூப்பரா இருக்கே

ஓலா நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் சில ஆவணங்கள் வெளியாகி இருந்தன. அவற்றின் மூலம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சீரிஸ் எஸ் என்கிற பெயரில் அறிமுகமாகவுள்ளதை அறிந்திருந்தோம். எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என்ற இரு வேரியண்ட்களில் இந்த இ-ஸ்கூட்டர் வெளிவரலாம்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர், இளம் தலைமுறையினர் மட்டுமின்றி வயது முதிர்ந்த வாடிக்கையாளர்களையும் கவரும் தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கையாக உள்ளது. இதற்கு இந்த 10 விதமான பெயிண்ட் தேர்வுகள் மிகவும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஓலா #ola
English summary
Ola Electric officially announces the available colours for the soon-to-be-launched electric scooter. The company is offering the Ola electric scooter in 10 colour options to choose from, making it the widest range of colours available on a two-wheeler.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X