ரூ. 499 இருந்தா போதும் நீங்களும் புக் செய்யலாம்! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யும் வழிமுறைகள்!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யும் வழிமுறைகள் பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம்.

ரூ. 499 இருந்தா போதும் நீங்களும் புக் செய்யலாம்! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யும் வழிமுறைகள்!

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் புக்கிங் பணிகள் தொடங்கியிருப்பதாக நேற்றைய (ஜூலை 16) தினம் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்திருந்தது.

ரூ. 499 இருந்தா போதும் நீங்களும் புக் செய்யலாம்! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யும் வழிமுறைகள்!

499 ரூபாய் என்ற மிகக் குறைந்த தொகையில் மின்சார ஸ்கூட்டருக்கான புக்கிங் நடைபெற்று வருகின்றது. ஆன்லைன் வாயிலாக இப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பலருக்கு எப்படி தங்களுக்கான ஓலா மின்சார ஸ்கூட்டரை புக் செய்வது என்பது பற்றிய சந்தேகம் எழும்பியுள்ளது.

ரூ. 499 இருந்தா போதும் நீங்களும் புக் செய்யலாம்! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யும் வழிமுறைகள்!

இதைத் தீர்த்து வைக்கும் வகையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எப்படி புக் செய்வது என்பது பற்றிய தகவலை படி படியாக இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ரூ. 499 இருந்தா போதும் நீங்களும் புக் செய்யலாம்! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யும் வழிமுறைகள்!

தனது ஆன்லைன் தளமான http://olaelectric.com வாயிலாகவே புக்கிங் பணிகளை ஓலா தொடங்கியிருக்கின்றது. இந்த தளம் பெரியளவில் சிக்கல்களை வழங்கும் வகையில் இல்லை என்பதை ஒரு முறை தளத்தை பார்த்தவுடன் எங்களால் உணர முடிகின்றது.

ரூ. 499 இருந்தா போதும் நீங்களும் புக் செய்யலாம்! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யும் வழிமுறைகள்!

இந்த தளத்திற்குள் நுழைந்த உடன் 'ரிசர்வ் ஃபார் 499' (Reserve For 499) என்ற ஓர் பொத்தான் அடிப்பகுதியில் காட்சியளிக்கின்றது. அதை க்ளிக் செய்த உடன் நேரடியாக அக்கவுண்டை உருவாக்கும் தளத்திற்கு அது அழைத்துச் செல்கிறது. அதில், செல்போன் எண்ணை உள்ளிடுவதன் வாயிலாக கணக்கு தொடங்கப்படுகின்றது.

ரூ. 499 இருந்தா போதும் நீங்களும் புக் செய்யலாம்! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யும் வழிமுறைகள்!

எதிர்காலத்தில் சிக்கல் ஏதேனும் ஏற்படாமல் இருக்க இக்கவுண்ட் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் பின்னர் வழக்கம்போல் பெயர், மின்னஞ்சல் ஆகியவையே கேட்கப்படுகின்றன. இந்த அடிப்படை தகவல்களை பகிர்ந்த பின்னர் நேரடியாக பணத்தை செலுத்தும் இடத்திற்கு அப்பக்கம் நம்மைக் கொண்டு செல்கின்றது.

ரூ. 499 இருந்தா போதும் நீங்களும் புக் செய்யலாம்! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யும் வழிமுறைகள்!

அங்கு முன்பதிவிற்கான கட்டணத்தைச் செலுத்த டெபிட், கிரெடிட் அல்லது யுபிஐ ஆகிய மூன்று விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து முன்பதிவிற்கான கட்டணத்தை செலுத்தலாம். அவ்வாறு செலுத்தினால் உங்களுக்கான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புக்காகிவிடும்.

ரூ. 499 இருந்தா போதும் நீங்களும் புக் செய்யலாம்! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யும் வழிமுறைகள்!

இதற்கான உறுதி தகவல், அதாவது, ஓலா மின்சார ஸ்கூட்டர் புக் செய்யப்பட்டுவிட்டது என்பது பற்றிய தகவல் குறுஞ்செய்தி வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தளவு மிக மிக சுலபமான வழிகளிலேயே ஓலா மின்சார ஸ்கூட்டருக்கான முன் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

ரூ. 499 இருந்தா போதும் நீங்களும் புக் செய்யலாம்! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யும் வழிமுறைகள்!

இத்துடன் புக் செய்யும்போதே நிற தேர்வு மற்றும் வீட்டுக்கே டெலிவரி செய்ய வேண்டுமா என்கிற தேர்வையும் ஓலா வழங்குகின்றது. தற்போது உற்பத்தி ஆலையை மிக வேகமாக கட்டமைக்கும் பணியில் ஓலா நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இது தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்து வருகின்றது.

ரூ. 499 இருந்தா போதும் நீங்களும் புக் செய்யலாம்! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யும் வழிமுறைகள்!

ஆண்டுக்கு 10 மில்லியன் மின் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனில் ஆலை உருவாகி வருகின்றது. இங்கு வைத்தே ஓலா மின்சார ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள் மற்றும் வெளி நாட்டு சந்தைகளுக்கு விநியோகம் செய்யப்பட இருக்கின்றன.

ரூ. 499 இருந்தா போதும் நீங்களும் புக் செய்யலாம்! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யும் வழிமுறைகள்!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது. அலாய் வீல், டெலிஸ்கோபிக் முகப்பு பகுதி சஸ்பென்ஷன், கிளவுட் இணைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், சாவியில்லா இயக்கம், செல்போன் செயலி வாயிலாக கட்டுப்படுத்தும் வசதி என ஏராளமான சிறப்பு வசதிகளுடன் இந்த மின்சார ஸ்கூட்டர் வர உள்ளது.

ரூ. 499 இருந்தா போதும் நீங்களும் புக் செய்யலாம்! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யும் வழிமுறைகள்!

இதுமட்டுமின்றி ஒற்றை முழுமையான சார்ஜில் 150 கிமீ ரேஞ்ஜை வழங்கும் திறனில் ஓலா மின்சார ஸ்கூட்டர் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவேதான் இந்தியர்கள் மத்தியில் இந்த ஸ்கூட்டர்களுக்கு கடும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இந்த ஆர்வம் உச்சத்தில் இருக்கின்ற வேலையில் மிக குறைவான தொகையில் மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவு வேலைகள் தொடங்கியிருக்கின்றன.

Most Read Articles

English summary
Ola Electric Scooter Booking Process & Details Explained. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X