ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த நவம்பரில் முன்பதிவு செய்ய முடியாது!! புக்கிங் டிசம்பருக்கு தள்ளிவைப்பு!

ஒலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான இரண்டாம் கட்ட முன்பதிவுகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த நவம்பரில் முன்பதிவு செய்ய முடியாது!! புக்கிங் டிசம்பருக்கு தள்ளிவைப்பு!

மிக பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கடந்த சுதந்திர தினத்தின் போது இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. எஸ்1 & எஸ்1 ப்ரோ என்கிற இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் அறிமுகத்திற்கு முன்னதாகவே துவங்கப்பட்டன.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த நவம்பரில் முன்பதிவு செய்ய முடியாது!! புக்கிங் டிசம்பருக்கு தள்ளிவைப்பு!

இத்தனைக்கும் ஸ்கூட்டரை பற்றிய விபரங்கள் வெளியிடப்படுவதற்கு முன்னரே துவங்கப்பட்டாலும், வெறும் 24 மணிநேரத்தில் 1 லட்ச ஓலா இ-ஸ்கூட்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டு நம்மை ஆச்சிரியப்படுத்தி இருந்தன. இதனால் எஸ்1 ஸ்கூட்டர்களுக்கான இரண்டாம் கட்ட முன்பதிவுகளை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் எப்போது துவங்கும் என எதிர்பார்ப்பு வலுக்க ஆரம்பித்தது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த நவம்பரில் முன்பதிவு செய்ய முடியாது!! புக்கிங் டிசம்பருக்கு தள்ளிவைப்பு!

முன்னதாக, இரண்டாம் கட்ட முன்பதிவுகள் நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து துவங்கப்படலாம் என ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஓலா எஸ்1 & எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்தவற்கான அடுத்தக்கட்ட இணைய ஜன்னல் வருகிற டிசம்பர் மாதம் 16ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த நவம்பரில் முன்பதிவு செய்ய முடியாது!! புக்கிங் டிசம்பருக்கு தள்ளிவைப்பு!

இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வாங்குவதற்கும், டெலிவிரி செய்வதற்கும் இடையே குறைந்தப்பட்ச காத்திருப்பு நேரத்தை உறுதிப்படுத்தவும், ஏற்கனவே உள்ள ஆர்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் இந்த மாற்றியமைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு ஸ்கூட்டர்கள் டெலிவிரி செய்வதில் எந்த மாற்றமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த நவம்பரில் முன்பதிவு செய்ய முடியாது!! புக்கிங் டிசம்பருக்கு தள்ளிவைப்பு!

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்களில் அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முதல் வேரியண்ட் 2 கிலோவாட்ஸ் மோட்டார் ஆகும். எஸ்1-இன் ஆரம்ப நிலை வேரியண்ட்டான இதில் அதிகப்பட்சமாக மணிக்கு 45 கிமீ வேகத்தில் செல்லலாம். இரண்டாவது வேரியண்ட்டில் 4 கிலோவாட்ஸ் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த நவம்பரில் முன்பதிவு செய்ய முடியாது!! புக்கிங் டிசம்பருக்கு தள்ளிவைப்பு!

இதன் டாப் ஸ்பீடு 70kmph ஆகும். மூன்றாவது வேரியண்ட்டில் அளவில் பெரிய 7 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது. இது ஸ்கூட்டரை அதிகப்பட்சமாக மணிக்கு 95 kmph வேகத்தில் செல்ல அனுமதிக்கும். இவற்றை வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யலாம். ஆரம்பத்தில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சுமார் 240 கிமீ ரேஞ்சை வழங்கக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த நவம்பரில் முன்பதிவு செய்ய முடியாது!! புக்கிங் டிசம்பருக்கு தள்ளிவைப்பு!

ஆனால் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 150கிமீ வரையில் இயங்கும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையில் நிஜ-வாழ்க்கை ரேஞ்ச் 150கிமீ-க்கும் குறைவாக மாறலாம். ஏனெனில் வாகனங்களின் மைலேஜ் எவ்வாறு பயன்படுத்த, பயன்படுத்த குறையுமோ அதேபோன்று தான், சில காரணிகளினால் எலக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச்சும் குறையும்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த நவம்பரில் முன்பதிவு செய்ய முடியாது!! புக்கிங் டிசம்பருக்கு தள்ளிவைப்பு!

சாதாரண சார்ஜிங் நிலையங்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முழுவதுமாக சார்ஜ் ஆக 2.5 மணிநேரங்கள் எடுத்து கொள்ளும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுவே ஹைப்பர் சார்ஜிங் நிலையங்கலில் இதன் பேட்டரிகளை வெறும் 18 நிமிடங்களில் 50% சார்ஜ் ஏற்றிவிடலாமாம். வீட்டில் உபயோகப்படுத்தும் மின்சாரத்தின் மூலம் முழு சார்ஜ் ஏற்ற குறைந்தது 5.5 மணிநேரங்கள் தேவைப்படும்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த நவம்பரில் முன்பதிவு செய்ய முடியாது!! புக்கிங் டிசம்பருக்கு தள்ளிவைப்பு!

ஸ்கூட்டரின் பேட்டரி முழுவதுமாக சார்ஜ் நிரப்பப்பட்டால் அதுகுறித்த தகவல் உரிமையாளருக்கு சென்றடையும் வகையில் வசதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 4ஜி இணைப்பு வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக யுடியூப், மொபைல்போன் அழைப்புகள் உள்ளிட்டவற்றை பெறலாம்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த நவம்பரில் முன்பதிவு செய்ய முடியாது!! புக்கிங் டிசம்பருக்கு தள்ளிவைப்பு!

இவற்றுடன் உடலில் பழுதினை தானாகவே கண்டறிந்து அதுகுறித்த அறிக்கையினை உரிமையாளருக்கும், பழுது பார்ப்பவருக்கும் தெரிவிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வசதிகள் நின்றுவிடவில்லை. சாவியில்லா ஸ்டார்ட் மற்றும் ‘ஸ்கூட்டரை கண்டறி' வசதியும் ஓலா எஸ்1 & எஸ்1 ப்ரோ-வில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த நவம்பரில் முன்பதிவு செய்ய முடியாது!! புக்கிங் டிசம்பருக்கு தள்ளிவைப்பு!

முன்னதாக, இரண்டாம் கட்ட முன்பதிவுகள் துவங்கப்பட்டதற்கு சில நாட்களில், அதாவது தீபாவளி முடிந்த பின்னர் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெஸ்ட் ட்ரைவ் பெறலாம் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட முன்பதிவுகள் அடுத்த டிசம்பர் மாதத்தில் இருந்துதான் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், டெஸ்ட் ட்ரைவ் வழங்குவதில் எந்த தாமதம் ஏற்படாது என்றே தெரிகிறது.

Most Read Articles

மேலும்... #ஓலா #ola
English summary
Ola electric scooter delivery bookings details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X