முன்பதிவு செய்ய வெறும் 499 ரூபாய் மட்டும்தான்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முன்பதிவு செய்ய வெறும் 499 ரூபாய் மட்டும்தான்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கி வரும் மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் காரணமாக இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் தற்போது மிக அதிகளவில் அறிமுகமாகி கொண்டுள்ளன.

முன்பதிவு செய்ய வெறும் 499 ரூபாய் மட்டும்தான்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?

பஜாஜ் சேத்தக், ஏத்தர் 450எக்ஸ் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் ஏற்கனவே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வரிசையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

முன்பதிவு செய்ய வெறும் 499 ரூபாய் மட்டும்தான்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் டூவீலர் தொழிற்சாலையை கட்டமைக்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் டூவீலர் தொழிற்சாலை என்ற பெருமையை இது பெறவுள்ளது. இங்குதான் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கப்படவுள்ளது.

முன்பதிவு செய்ய வெறும் 499 ரூபாய் மட்டும்தான்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சீரிஸ் எஸ் என பெயரிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என்ற 2 வேரியண்ட்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படலாம். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த பெயர்களை பதிவு செய்த ஆவணங்கள் சமீபத்தில் கிடைத்தன. இதன் மூலம் இந்த பெயர் சூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பதிவு செய்ய வெறும் 499 ரூபாய் மட்டும்தான்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?

எட்டர்கோ ஆப்ஸ்கூட்டர் (Etergo Appscooter) அடிப்படையில்தான் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் எட்டர்கோ ஆப்ஸ்கூட்டரின் பிளாட்பார்ம், இந்தியாவில் பயன்படுத்தும் வகையிலும், சிறப்பான செயல்திறனை வழங்கும் வகையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எட்டர்கோ என்பது நெதர்லாந்தை சேர்ந்த பிரபலமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் ஆகும்.

முன்பதிவு செய்ய வெறும் 499 ரூபாய் மட்டும்தான்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?

இந்த நிறுவனத்தை இந்தியாவின் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கைப்பற்றி விட்டது. எனவே எட்டர்கோ நிறுவனத்தின் ஆப்ஸ்கூட்டர் அடிப்படையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மாற்றங்களை செய்துள்ளது.

முன்பதிவு செய்ய வெறும் 499 ரூபாய் மட்டும்தான்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பகுதியில் ட்வின்-போட் எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. இதை சுற்றிலும் எல்இடி பட்டை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அலாய் வீல்களும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த செக்மெண்ட்டிலேயே பெரிய பூட் ஸ்பேஸை தங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றிருக்கும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கூறியுள்ளது.

முன்பதிவு செய்ய வெறும் 499 ரூபாய் மட்டும்தான்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?

எலெக்ட்ரிக் வாகனம் என்றாலே அனைவரும் கேட்கும் முதல் கேள்வி ரேஞ்ச் எவ்வளவு? என்பதுதான். அதாவது ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் பயணிக்கும் தூரமே ரேஞ்ச் எனப்படுகிறது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் எவ்வளவு என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. எனினும் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 150 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பதிவு செய்ய வெறும் 499 ரூபாய் மட்டும்தான்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?

ரேஞ்ச் விஷயத்திற்கு அடுத்தபடியாக அனைவரும் கேட்கும் முக்கியமான கேள்வி விலை எவ்வளவு? என்பதுதான். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ விலை விரைவில் அறிவிக்கப்படும்.

முன்பதிவு செய்ய வெறும் 499 ரூபாய் மட்டும்தான்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தற்போது முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. olaelectric.com என்ற இணையதளத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம். வெறும் 499 ரூபாயை செலுத்துவதன் மூலம் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த தொகை திரும்ப பெறக்கூடியது என்பதும் கூடுதல் சிறப்பம்சம்.

முன்பதிவு செய்ய வெறும் 499 ரூபாய் மட்டும்தான்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கப்படும்போது, தற்போது முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே நீங்கள் தற்போது முன்பதிவு செய்தால், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவாக டெலிவரி பெறுவதற்கான சூழல் உருவாகும். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Ola Electric Scooter: Price, Range, Booking, Design, Name And More Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X