சவாலான விலையில் வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு... கதி கலங்கி நிற்கும் போட்டியாளர்கள்!

அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் மிக சவாலான விலையில் எதிர்பார்க்கப்படும் ஓலா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த புதிய ஸ்கூட்டர் போட்டியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

சவாலான விலையில் வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு... கலக்கத்தில் போட்டியாளர்கள்!

இந்தியாவின் டாக்சி மார்க்கெட்டில் நம்பர்-1 இடத்தில் இருந்து வரும் ஓலா நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பிலும் இறங்க உள்ளது. இதற்காக, உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை ஓசூரில் அமைத்து வருகிறது.

சவாலான விலையில் வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு... கலக்கத்தில் போட்டியாளர்கள்!

இந்த புதிய தொழிற்சாலை 500 ஏக்கர் பரப்பளவில், ரூ.2,400 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஆண்டுக்கு 10 மில்லியன் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் திறனுடன் அமைத்து வருகிறது.

அடுத்த சில மாதங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியை துவங்குவதற்கு ஓலா திட்டமிட்டுள்ளது. ஆலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த எந்த தகவலையும் ஓலா இதுவரை வெளியிடாமல் இருந்து வந்தது.

சவாலான விலையில் வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு... கலக்கத்தில் போட்டியாளர்கள்!

இந்த நிலையில், முதல்முறையாக தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசரை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எடெர்கோ என்ற நிறுவனத்தை ஓலா நிறுவனம் கையகப்படுத்தியது தெரிந்ததே. அந்நிறுவனத்தின் எடெர்கோ ஆப்ஸ்கூட்டரின் அடிப்படையில்தான் ஓலாவின் புதிய ஸ்கூட்டர் வர இருப்பது கிட்டத்தட்ட டீசர் மூலமாக உறுதியாகி இருக்கிறது.

சவாலான விலையில் வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு... கலக்கத்தில் போட்டியாளர்கள்!

எடெர்கோ ஆப்ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 240 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். அதேநேரத்தில், தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை போட்டியாளர்களைவிட குறைவாக நிர்ணயிக்க ஓலா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சவாலான விலையில் வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு... கலக்கத்தில் போட்டியாளர்கள்!

இதனால், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சற்று திறன் குறைந்த பேட்டரி தொகுப்பு வழங்கப்படும். இதனால், 100 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கும் என்று தெரிகிறது. மேலும், பேட்டரியை கழற்றி மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்படும். இதன்மூலமாக, சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரியை மாட்டிக் கொண்டு பயணத்தை தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

சவாலான விலையில் வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு... கலக்கத்தில் போட்டியாளர்கள்!

ஓலா நிறுவனம் மிகப்பெரிய உற்பத்தி இலக்குடன் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலையை அமைத்து வருகிறது. எனவே, தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.1 லட்சத்தையொட்டிய விலையில் கொண்டு வரும் திட்டமும் அந்நிறுவனத்திடம் உள்ளது.

சவாலான விலையில் வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு... கலக்கத்தில் போட்டியாளர்கள்!

அதாவது, ஏத்தர் 450எக்ஸ், பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ-க்யூப் உள்ளிட்ட நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நேரடி போட்டியாக களமிறக்கப்படும். இதனால், இந்த நிறுவனங்களுக்கு கடும் சவால் தரும் வகையில் தனது வர்த்தக திட்டத்தை அமைத்து வருகிறது ஓலா.

சவாலான விலையில் வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு... கலக்கத்தில் போட்டியாளர்கள்!

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு காலத்தில் ஓலா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துவிடும். இந்த ஆண்டு இறுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது.

சவாலான விலையில் வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியீடு... கலக்கத்தில் போட்டியாளர்கள்!

ஓலா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், உற்பத்தி மற்றும் விற்பனை திட்டங்களை மிகப்பெரிய அளவில் ஓலா செய்து வருகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆவலை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்படுத்தி உள்ளது. மேட் இன் தமிழ்நாடு ஸ்கூட்டர் மாடலாகவும் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
OLA electric has released of its first electric scooter images and it is expected to launch in India by second half of this year.
Story first published: Monday, March 8, 2021, 11:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X