டெஸ்லா பாணியை கையில் எடுத்த ஓலா... எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளருக்கு நேரடியாக விற்பனை செய்ய திட்டம்!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய இருசக்கர வாகன சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பல புதுமையான திட்டங்களுடன் அதிரடியாக சந்தையை தன் வசப்படுத்த ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

டெஸ்லா பாணியை கையில் எடுத்த ஓலா... எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளருக்கு நேரடியாக விற்பனை செய்ய திட்டம்!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ் சீரிஸ் என்ற பெயரில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கடந்த 15ந் தேதி ஆன்லைனில் முன்பதிவு துவங்கப்பட்டது. ரூ.499 மட்டும் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு துவங்கி முதல் 24 நேரத்திற்குள் 1 லட்சம் புக்கிங்குகளை குவித்து சாதனை படைத்தது.

டெஸ்லா பாணியை கையில் எடுத்த ஓலா... எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளருக்கு நேரடியாக விற்பனை செய்ய திட்டம்!

இந்த நிலையில், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நேரடியாக விற்பனை செய்யப்பட உள்ளதாக ஃபர்ஸ்ட் போஸ்ட் தள செய்தி தெரிவிக்கிறது. வழக்கமான டீலர்கள் மூலமாக விற்பனை செய்யும் நடைமுறையை தவிர்த்து, புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டோர் டெலிவிரி செய்யப்பட உள்ளது.

டெஸ்லா பாணியை கையில் எடுத்த ஓலா... எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளருக்கு நேரடியாக விற்பனை செய்ய திட்டம்!

அதேநேரத்தில் டீலர்கள் மற்றும் சர்வீஸ் மையங்கள் இல்லாமல் இதுபோன்று நேரடியாக விற்பனை செய்யப்பட்டால், விற்பனைக்கு பிந்தைய சேவை குறித்து வாடிக்கையாளர்களுக்கு இடர்பாடுகள் ஏற்படும். மேலும், வாடிக்கையாளர்களும் இதுகுறித்து ஐயப்பாடு கொள்ள நேரிடும்.

டெஸ்லா பாணியை கையில் எடுத்த ஓலா... எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளருக்கு நேரடியாக விற்பனை செய்ய திட்டம்!

இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பராமரிப்புப் பணி மற்றும் பழுது நீக்குப் பணிகளுக்காக மெக்கானிக்குகளை வீட்டிற்கே வந்து சரிசெய்து தரும் திட்டத்தையும் ஓலா எலெக்ட்ரிக் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

டெஸ்லா பாணியை கையில் எடுத்த ஓலா... எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளருக்கு நேரடியாக விற்பனை செய்ய திட்டம்!

இதனால், சர்வீஸ் மையங்களுக்கு சென்று காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படுவதுடன், பிரச்னையை மிக விரைவாக சரிசெய்து தருவதற்கான வாய்ப்பையும் வாடிக்கையாளர்கள் பெறும் வாய்ப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

டெஸ்லா பாணியை கையில் எடுத்த ஓலா... எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளருக்கு நேரடியாக விற்பனை செய்ய திட்டம்!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுப்பதற்காகவும், நடைமுறைகளை மேற்கொள்ளவும் தனி வர்த்தக அமைப்பை ஏற்படுத்தி செயல்படுத்தவும் ஓலா திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, குறித்த நேரத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவிரி கொடுக்க முடியும்.

டெஸ்லா பாணியை கையில் எடுத்த ஓலா... எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளருக்கு நேரடியாக விற்பனை செய்ய திட்டம்!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போட்டியாளர்களை ஒப்பிடுகையில் அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் பேட்டரி மற்றும் குறைவான பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் அதிகரித்துள்ளதுடன், ஆவலும் அதிகரித்து வருகிறது. அடுத்த ஒரு சில வாரங்களில் இந்த ஸ்கூட்டரின் விலை அறிவிப்பு வெளியிடப்பட்டு, டெலிவிரிப் பணிகள் துவங்கப்படும் என தெரிகிறது.

டெஸ்லா பாணியை கையில் எடுத்த ஓலா... எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளருக்கு நேரடியாக விற்பனை செய்ய திட்டம்!

உலகின் மிகவும் பிரபலமான எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக கார்களை டெலிவிரி வழங்கி வருகிறது. அதேபோன்று, மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனமும் இந்த ஆண்டு இறுதியில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக கார் விற்பனை செய்யும் திட்டத்தை அமல்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
According to report, Ola electric is planning to sell it's first electric scooter to customers directly. Read in Tamil.
Story first published: Wednesday, July 21, 2021, 15:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X