ஓலா எஸ்1 இ-ஸ்கூட்டரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் சூப்பரான அறிவிப்பு!! இலவசமாக எஸ்1 ப்ரோவின் ஹார்ட்வேர்...

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை புக் செய்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் சூப்பரான அறிவிப்பு!! இலவசமாக எஸ்1 ப்ரோவின் ஹார்ட்வேர்...

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அதன் எஸ்1 வரிசை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என்கிற இரு விதமான வேரியண்ட்களில் ஓலாவின் முதல் இ-ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் சூப்பரான அறிவிப்பு!! இலவசமாக எஸ்1 ப்ரோவின் ஹார்ட்வேர்...

இந்த நிலையில் தற்போது எஸ்1 ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்தவர்கள் எந்தவொரு கூடுதல் தொகையும் செலுத்தாமல் தங்களது எஸ்1 ஸ்கூட்டரை எஸ்1 ப்ரோ ஸ்கூட்டராக அப்கிரேட் செய்து கொள்ளலாம் என ஓலா எலக்ட்ரிக் அறிவித்துள்ளது. இந்த அப்கிரேடினால் ஸ்கூட்டரின் இயந்திர பாகங்கள் மேம்பட்டதாக வழங்கப்படும் என்றும், ஆனால் அவற்றின் திறன்களை முழுமையாக பயன்படுத்த இயலாது எனவும் ஓலா எலக்ட்ரிக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் சூப்பரான அறிவிப்பு!! இலவசமாக எஸ்1 ப்ரோவின் ஹார்ட்வேர்...

அதாவது ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரின் என்ஜின் உள்பட இயந்திர பாகங்களை எஸ்1 மாடலிலேயே பெறலாம். ஆனால் அதன் முழு செயல்படுதிறனை பெற முடியாது. எஸ்1 மாடலில் பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார் எத்தகைய ஆற்றலை வெளிப்படுத்துமோ அந்த அளவிலேயே பெற முடியும். இவற்றை முழுமையாக பெற மற்றும் எஸ்1 ப்ரோ வேரியண்டில் வழங்கப்படும் சில கூடுதல் மென்பொருள் வசதிகளை எஸ்1 வேரியண்ட்டில் பெற வேண்டுமெனில் ரூ.30,000 வரையில் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் சூப்பரான அறிவிப்பு!! இலவசமாக எஸ்1 ப்ரோவின் ஹார்ட்வேர்...

இதுகுறித்த அறிவிப்பை எஸ்1 ஸ்கூட்டரை முன்பதிவு செய்தவர்களில் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அனுப்பியுள்ளது. விரைவில் அனைத்து எஸ்1 வாடிக்கையாளர்களும் இந்த அறிவிப்பினை பெறுவார்களா? இது தொடர்பான குறுஞ்செய்தியை பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த அப்கிரேடினை பெறுவார்களா? என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை.

ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் சூப்பரான அறிவிப்பு!! இலவசமாக எஸ்1 ப்ரோவின் ஹார்ட்வேர்...

தோற்றத்தில் எஸ்1 மாடலுக்கும், எஸ்1 ப்ரோ மாடலுக்கும் இடையில் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு பொருத்தப்படும் பேட்டரி தொகுப்பில் தான் இவை இரண்டும் வேறுப்படுகின்றன. எஸ்1 மாடலில் 2.98kWh பேட்டரி தொகுப்பும், எஸ்1 ப்ரோ மாடலில் இதனை காட்டிலும் அளவில் சற்று பெரிய 3.97kWh பேட்டரி தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் சூப்பரான அறிவிப்பு!! இலவசமாக எஸ்1 ப்ரோவின் ஹார்ட்வேர்...

இதனால் இவை இரண்டும் ஸ்கூட்டரில் வழங்கக்கூடிய ரேஞ்ச் வித்தியாசப்படுகிறது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகளை இணையத்தில் துவங்கியதில் இருந்து பலர் இவற்றை புக் செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலான முன்பதிவுகள் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மீதே மேற்கொள்ளப்படுவதாகவும், ஆரம்ப நிலை எஸ்1 ஸ்கூட்டர்களை மிகவும் குறைவானவர்களே புக் செய்துள்ளதாகவும் ஓலா தெரிவிக்கிறது.

ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் சூப்பரான அறிவிப்பு!! இலவசமாக எஸ்1 ப்ரோவின் ஹார்ட்வேர்...

இதன் காரணமாகவே தாங்கள் முன்பதிவு செய்த எஸ்1 ஸ்கூட்டர்களை எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்களாக எந்தவொரு கட்டணமும் இன்றி அப்கிரேட் செய்து கொள்ளலாம் என ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலமாக தயாரிப்பு நிறுவனத்திற்கு தொழிற்சாலை பணிகள் சற்று குறையும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் இது முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பொருத்தது ஆகும்.

ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் சூப்பரான அறிவிப்பு!! இலவசமாக எஸ்1 ப்ரோவின் ஹார்ட்வேர்...

அதாவது எஸ்1 ப்ரோ ஸ்கூட்டராக அப்கிரேட் செய்து கொள்ளலாம் அல்லது எஸ்1 ஸ்கூட்டராகவே கூட வாங்கலாம். இருப்பினும் எஸ்1 ப்ரோ-வில் வழங்கப்படும் ஹைப்பர் மோட், ஹில் ஹோல்ட், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் குரல் கட்டுப்பாட்டு உதவி உள்ளிட்ட வசதிகளை இதன் மூலமாக பெற முடியாது. ஏற்கனவே கூறியதுபோல் இவற்றையும் சேர்த்து பெற ரூ.30,000 கூடுதலாக செலுத்த வேண்டும்.

ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் சூப்பரான அறிவிப்பு!! இலவசமாக எஸ்1 ப்ரோவின் ஹார்ட்வேர்...

ஏனெனில் எஸ்1 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 லட்சமாகவும், எஸ்1 ப்ரோ வேரியண்ட்டின் விலை ரூ.1,30,000 ஆகவும் உள்ளன. பெரிய அளவிலான பேட்டரி தொகுப்பை பெறுவதால், எஸ்1 ப்ரோ மாடலின் ரேஞ்ச் 181கிமீ ஆகும். அதாவது இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 181கிமீ தொலைவிற்கு இயங்க முடியும். ஆனால் எஸ்1 மாடலின் ரேஞ்ச் 121கிமீ மட்டுமே என ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவிக்கிறது.

ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் சூப்பரான அறிவிப்பு!! இலவசமாக எஸ்1 ப்ரோவின் ஹார்ட்வேர்...

மேலும் எஸ்1 ப்ரோவை அதிகப்பட்சமாக மணிக்கு 115கிமீ வேகத்தில் இயக்கலாம். ஆனால் எஸ்1 ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு 90kmph மட்டுமே ஆகும். ஏற்கனவே கூறியதுதான், எஸ்1 ஸ்கூட்டரை எஸ்1 ப்ரோ மாடலாக பெற்றாலும், ஸ்கூட்டரின் செயல்படுதிறனில் எந்த மாற்றமும் இருக்காது. ஏனெனில் இந்த நடவடிக்கையை முழுக்க முழுக்க தனது தொழிற்சாலை பணிகளை குறைக்கும் முயற்சியாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. ஒன்று மட்டும் நிச்சயம், இந்த அப்கிரேடினால் ஸ்கூட்டரின் எடை கிட்டத்தட்ட 4 கிலோ வரையில் அதிகரிக்கும்.

Most Read Articles

English summary
Ola Electric Scooter Update Details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X