2 வினாடிகளுக்கு ஒரு ஸ்கூட்டர்... மெகா திட்டத்தில் உருவாகும் ஓலாவின் ஓசூர் ஆலை!

3,000 ரோபோக்கள், 10,000 தொழிலாளர்கள் மற்றும் 1,000 எஞ்சினியர்களுடன் இரண்டு வினாடிகளுக்கு ஒரு ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் திறனுடன் ஓலாவின் ஓசூர் ஆலை மிக பிரம்மாண்டமாக செயல்பட உள்ளது.

 2 வினாடிகளுக்கு ஒரு ஸ்கூட்டர்... மெகா திட்டத்தில் உருவாகும் ஓலாவின் ஓசூர் ஆலை!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் கிடுகிடுக்க வைக்கும் திட்டத்துடன் ஓலா நிறுவனம் கங்கணம் கட்டி இறங்கி உள்ளது. புத்தாண்டில் ஓசூரில் ஆலை அமைப்பதற்கான இடத்தை கையகப்படுத்திய நிலையில், பிப்ரவரி மாத துவக்கத்தில் ஆலை அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 2 வினாடிகளுக்கு ஒரு ஸ்கூட்டர்... மெகா திட்டத்தில் உருவாகும் ஓலாவின் ஓசூர் ஆலை!

உலகின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகன உற்பத்தி ஆலையாக அமைக்கப்படும் இந்த ஆலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்த வீடியோ ஒன்றை ஓலா பகிர்ந்து கொண்டுள்ளது.

 2 வினாடிகளுக்கு ஒரு ஸ்கூட்டர்... மெகா திட்டத்தில் உருவாகும் ஓலாவின் ஓசூர் ஆலை!

அடுத்த சில மாதங்களில் இந்த கனவு ஆலையானது நனவாக இருக்கிறது. ரூ.2,400 கோடி முதலீட்டில் 500 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமைக்கப்படுகிறது. இதில், 50 சதவீதம் அளவுக்கு உதிரிபாக சப்ளையர்களின் உற்பத்தி மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

 2 வினாடிகளுக்கு ஒரு ஸ்கூட்டர்... மெகா திட்டத்தில் உருவாகும் ஓலாவின் ஓசூர் ஆலை!

இந்த ஆலை வளாகத்தை மிகவும் இயற்கை சூழல் மிகுந்ததாகவும் உருவாக்குவதற்கு ஓலா முடிவு செய்துள்ளது. இதனால், பசுமை வளாகத்துடன் இந்த ஆலை செயல்பட உள்ளது.

 2 வினாடிகளுக்கு ஒரு ஸ்கூட்டர்... மெகா திட்டத்தில் உருவாகும் ஓலாவின் ஓசூர் ஆலை!

அடுத்த சில மாதங்களில் இந்த ஆலையின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்கும் ஓலா திட்டமிட்டுள்ளது. இதற்காக, மிக விரிவானத் திட்டத்துடன் பணிகளை துரிதப்படுத்தி உள்ளது.

வினாடிக்கு 2 ஸ்கூட்டர்கள்... மெகா திட்டத்தில் உருவாகும் ஓலாவின் ஓசூர் ஆலை!

ஆண்டுக்கு 10 மில்லியன் மின்சார இருசக்கர வாகனங்களை இந்த ஆலையில் உற்பத்தி செய்யவும் ஓலா திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, உள்நாட்டு சந்தை மட்டுமின்றி, உலக அளவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் தனது மின்சார ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு ஓலா திட்டமிட்டுள்ளது.

 2 வினாடிகளுக்கு ஒரு ஸ்கூட்டர்... மெகா திட்டத்தில் உருவாகும் ஓலாவின் ஓசூர் ஆலை!

இந்த ஆலையில் மின்சார இருசக்கர வாகன உற்பத்திப் பணிகளுக்காக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். 3,000 ரோபோக்களும், 10,000 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர். ரோபோக்களை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் பிரத்யேக சாஃப்ட்வேரை 1,000 எஞ்சினியர்கள் குழு மூலமாக கட்டுப்படுத்தப்படும்.

ஓசூரில் அமைக்கப்படும் தனது எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தொழிற்சாலை எப்படி இருக்கும் என்பதை அனிமேஷன் வடிவில் வீடியோவாக ஓலா வெளியிட்டுள்ளது. அதனை இந்த ஸ்லைடில் பார்க்கலாம்.

Most Read Articles

English summary
OLA has released upcoming Hosur electric scooter plant plan video.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X