வெறும் ரூ.499 தான், ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்களும் முன்பதிவு செய்யலாம்!!

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை ஏற்கனவே துவங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் ரூ.499 தான், ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்களும் முன்பதிவு செய்யலாம்!!

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், பயண பகிர்வு நிறுவனமான ஓலாவின் எலக்ட்ரிக் பிரிவில் இருந்து முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வெறும் ரூ.499 தான், ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்களும் முன்பதிவு செய்யலாம்!!

இந்த நிலையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் வெறும் ரூ.499 என்கிற டோக்கன் தொகையுடன் தற்போது துவங்கப்பட்டுள்ளன. இந்த டோக்கன் தொகை, வாகனத்தை வாங்கவில்லை என்றால், மீண்டும் பெறக்கூடியதாகும்.

வெறும் ரூ.499 தான், ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்களும் முன்பதிவு செய்யலாம்!!

இதன்படி ஓலா இ-ஸ்கூட்டரை வாங்க விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் olaelectric.com என்ற இணையத்தள பக்கத்தில் முன்பதிவு செய்யலாம். டெலிவிரி பணிகள் நடைபெற்றுவரும் முன்பதிவுகளை பொறுத்து மேற்கொள்ளப்படலாம்.

வெறும் ரூ.499 தான், ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்களும் முன்பதிவு செய்யலாம்!!

பிரிவிலேயே அதிகப்படியான டாப் ஸ்பீடு, எதிரே பார்க்காத ரேஞ்ச், இருக்கைக்கு அடியில் பெரிய அளவிலான சேமிப்பிடம் மற்றும் அட்வான்ஸான தொழிற்நுட்பங்கள் என்பவை ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களாகும்.

வெறும் ரூ.499 தான், ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்களும் முன்பதிவு செய்யலாம்!!

கடந்த வாரத்தில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பிராண்டின் தலைவர் & குழும சிஇஓ பெங்களூரில் பொது சாலையில் சோதனை செய்து பார்க்கும் வீடியோ வெளியானது. அதனை தொடர்ந்து சமீபத்தில் ஓலா பிராண்டில் இருந்து முதலாவதாக வெளிவரவுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பெயர்கள் வெளியாகி இருந்தன.

வெறும் ரூ.499 தான், ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்களும் முன்பதிவு செய்யலாம்!!

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எதெர்கோ ஆப்ஸ்கூட்டரின் அடிப்படையில் தான் ஓலா எலக்ட்ரிக் தயாரிக்கப்பட்டுள்ளது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். இந்த ஆப்ஸ்கூட்டருக்கும், ஓலா இ-ஸ்கூட்டருக்கும் இடையே தோற்றத்தில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை.

வெறும் ரூ.499 தான், ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்களும் முன்பதிவு செய்யலாம்!!

ஆனால் இவை எல்லாவற்றையும் விட வாடிக்கையாளர்களை கவர இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலையில் தான் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கூடுதல் கவனத்தை செலுத்தவுள்ளது. முதல் ஓலா இ-ஸ்கூட்டருக்கான விலைகள் வரும் நாட்களில் வெளியிடப்படலாம்.

வெறும் ரூ.499 தான், ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்களும் முன்பதிவு செய்யலாம்!!

ஓலாவின் இந்த மின்மயமாக்கப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்கனவே ஜெர்மன் வடிவமைப்பு விருது உள்பட ஏகப்பட்ட விருதுகளை சொந்தமாக்கியுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க உலகிலேயே மிக பெரிய இருசக்கர வாகன தொழிற்சாலையை ஓலா நிறுவனம் நிறுவியுள்ளது.

வெறும் ரூ.499 தான், ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்களும் முன்பதிவு செய்யலாம்!!

நமது தமிழ்நாட்டில் ஓசூரில் அமைக்கப்பட்டு வரும் இந்த தொழிற்சாலை 500 ஏக்கரில், வருடத்திற்கு அதிகப்பட்சமாக 10 மில்லியன் இ-ஸ்கூட்டர்களை தயாரிக்கும் திறனுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்பத்தில் வருடத்திற்கு 2 மில்லியன் என்கிற அளவில் தான் தொழிற்சாலை இயக்கப்பட உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஓலா #ola
English summary
Ola Electric Scooter Bookings Open In India For Just Rs. 499.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X