நாளை முதல் விற்பனைக்கு! Ola இ-ஸ்கூட்டரை வாங்குவது ரொம்ப சுலபம்! நிறைய பேங்க்-கூட கூட்டணி வச்சிருக்காங்க!

Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பக்கம் மக்களைக் கவரும் விதமாக நிறுவனம் தரமான ஓர் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இதுகுறித்த மேலும் முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாளை முதல் விற்பனைக்கு! Ola இ-ஸ்கூட்டரை வாங்குவது ரொம்ப சுலபம்! நிறைய பேங்க்-கூட கூட்டணி வச்சிருக்காங்க!

பிரபல கால் டாக்சி சேவை நிறுவனமான ஓலா (Ola), இந்தியாவில் அதன் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. எஸ்1 (S1) மற்றும் எஸ்1 ப்ரோ (S1 Pro) ஆகிய இரு விதமான தேர்வுகளில் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், எஸ்1 மாடலுக்கு மிகக் குறைந்த விலையாக ரூ. 99,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் விற்பனைக்கு! Ola இ-ஸ்கூட்டரை வாங்குவது ரொம்ப சுலபம்! நிறைய பேங்க்-கூட கூட்டணி வச்சிருக்காங்க!

இதைவிட விலைக் கொண்ட தேர்வாக எஸ்1 ப்ரோ இருக்கின்றது. இதன் விலை ரூ. 1,29,999 ஆகும். இந்த விலைகளிலேயே இந்தியாவில் ஓலாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைக்கும். இது சற்று அதிகமான விலை என்பதால் ஒரு சிலருக்கு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எட்டாக் கனியாக மாறும் நிலை உருவாகியிருக்கின்றது.

நாளை முதல் விற்பனைக்கு! Ola இ-ஸ்கூட்டரை வாங்குவது ரொம்ப சுலபம்! நிறைய பேங்க்-கூட கூட்டணி வச்சிருக்காங்க!

இதனைக் கருத்தில் கொண்டு ஓலா நிறுவனம் ஓர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்கின்றது. அதாவது, வாடிக்கையாளர்கள் எளிதில் தங்களின் தயாரிப்பைக் கொள்முதல் செய்ய ஏதுவாக கடன் மற்றும் இஎம்ஐ திட்டத்தை வழங்கும் வகையில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காகவே நிறுவனம் தற்போது சில வங்கிகளுடன் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது.

நாளை முதல் விற்பனைக்கு! Ola இ-ஸ்கூட்டரை வாங்குவது ரொம்ப சுலபம்! நிறைய பேங்க்-கூட கூட்டணி வச்சிருக்காங்க!

எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா பிரைம் மற்றும் டாடா கேபிடல் உள்ளிட்ட வங்கிகளுடன் நிறுவனம் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. இந்த நிதி நிறுவனங்களின் வாயிலாக பல்வேறு கவர்ச்சிகரமான இஎம்ஐ திட்டங்களையும் சலுகைகளையும் வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. நாளை முதல் எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனைத் தொடங்க உள்ளநிலையில் இந்த தரமான நடவடிக்கையில் ஓலா களமிறங்கியிருக்கின்றது.

நாளை முதல் விற்பனைக்கு! Ola இ-ஸ்கூட்டரை வாங்குவது ரொம்ப சுலபம்! நிறைய பேங்க்-கூட கூட்டணி வச்சிருக்காங்க!

மேலே பார்த்த வங்கிகள் மட்டுமின்றி இன்னும் சில வங்கிகளுடன் நிறுவனம் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. பாங்க் ஆஃப் பரோடா, ஆக்சிஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, இந்தூசியந்த் வங்கி, ஏயூ ஸ்மால் ஃபினான்ஸ் வங்கி, ஜனா ஸ்மால் ஃபினான்ஸ் வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகிய வங்கிகள் உடனும் நிறுவனம் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது.

நாளை முதல் விற்பனைக்கு! Ola இ-ஸ்கூட்டரை வாங்குவது ரொம்ப சுலபம்! நிறைய பேங்க்-கூட கூட்டணி வச்சிருக்காங்க!

"மாதம் ரூ. 2,999 என்ற மிக குறைந்த இஎம்ஐ கட்டணம் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த வங்கிகளின் ஊடாகவே வழங்கப்பட இருப்பதாக" நிறுவனத்தின் மூத்த அதிகாரி வருன் துபே தெரிவித்திருக்கின்றார். இதன் வாயிலாக பட்ஜெட் மற்றும் அனைத்து தரப்பு வாகன பிரியர்களையும் கவரும் முடியும் என நிறுவனம் நம்புகின்றது. அதேவேலையில் குறைந்த இஎம்ஐ கட்டணம் மட்டுமின்றி இன்னும் பல்வேறு சலுகைகளை வங்கிகள் தங்கள் தரப்பில் தர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை முதல் விற்பனைக்கு! Ola இ-ஸ்கூட்டரை வாங்குவது ரொம்ப சுலபம்! நிறைய பேங்க்-கூட கூட்டணி வச்சிருக்காங்க!

ஓலா நிறுவனம் மின் வாகன உற்பத்தியில் களமிறங்கி அது விற்பனைக்குக் கொண்டு வரும் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமாக எஸ்1 உள்ளது. இதைத்தொடர்ந்து, மிக விரைவில் எஸ்1 ப்ரோவிற்கான விற்பனையும் இந்தியாவில் தொடங்கப்படும். ஏற்கனவே, இந்தியாவில் இவ்விரு மின்சார ஸ்கூட்டர்களுக்குமான புக்கிங் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆப் மற்றும் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் வாயிலாக புக்கிங் நடைபெற்று வருகின்றது.

நாளை முதல் விற்பனைக்கு! Ola இ-ஸ்கூட்டரை வாங்குவது ரொம்ப சுலபம்! நிறைய பேங்க்-கூட கூட்டணி வச்சிருக்காங்க!

ரூ. 499 என்ற குறைவான முன்தொகையின்கீழ் புக்கிங் நடைபெற்று வருகிறது. புக்கிங் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே, அதாவது, 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே ஒரு லட்சம் பேர் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை புக் செய்தனர். இந்த தற்போது இன்னும் பல மடங்கு அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை தமிழகத்தின் ஓசூரில் கட்டமைத்து வருகின்றது. இதன் முதல் பகுதி ஏற்கனவே முழுமையடையும் நிலையில் இருப்பதாக ஓலா கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

நாளை முதல் விற்பனைக்கு! Ola இ-ஸ்கூட்டரை வாங்குவது ரொம்ப சுலபம்! நிறைய பேங்க்-கூட கூட்டணி வச்சிருக்காங்க!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டீலர்கள் ஏதுமின்றி விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது. "டைரக்ட்-டூ-ஹோம்" அதாவது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கான வாகனத்தை நேரடியாக நிறுவனமே டூர் டெலிவரி செய்ய இருக்கின்றது.

நாளை முதல் விற்பனைக்கு! Ola இ-ஸ்கூட்டரை வாங்குவது ரொம்ப சுலபம்! நிறைய பேங்க்-கூட கூட்டணி வச்சிருக்காங்க!

ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.98KWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதன் எஸ்1 ப்ரோ தேர்வில் 3.97KWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 181 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதுவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மிக அதிகபட்ச ரேஞ்ஜ் திறன் ஆகும்.

நாளை முதல் விற்பனைக்கு! Ola இ-ஸ்கூட்டரை வாங்குவது ரொம்ப சுலபம்! நிறைய பேங்க்-கூட கூட்டணி வச்சிருக்காங்க!

2.98KWh திறன் பேட்டரி பேக்கில் கிடைக்கும் எஸ்1 தேர்வு ஒரு முழுமையான சார்ஜில் 121 கிமீ தூரம் வரை ரேஞ்ஜ் வழங்கும். இந்த ரேஞ்ஜ் விபரம் அராய் அமைப்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் ஆகும். இதுமட்டுமின்றி இன்னும் பல சிறப்பு வசதிகளுடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் வர இருக்கின்றன. இந்தியாவில் தயாராகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நமது நாட்டில் மட்டுமின்றி ஐரோப்பா, இங்கிலாந்து, லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஓலா #ola
English summary
Ola partners with several banks to offer affordable loans to customers
Story first published: Tuesday, September 7, 2021, 11:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X