மீண்டும் தொடங்கியது Ola இ-ஸ்கூட்டருக்கான புக்கிங் பணி... இந்த முறை எவ்வளவு முன் தொகை தெரியுமா? முக்கிய விபரம்!

ஓலா (Ola) நிறுவனம், அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான புக்கிங் பணிகளை இந்தியாவில் மீண்டும் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முக்கிய விபரத்தைக் கீழே காணலாம், வாங்க.

மீண்டும் தொடங்கியது Ola இ-ஸ்கூட்டருக்கான புக்கிங் பணி... இந்த முறை எவ்வளவு முன் தொகை தெரியுமா? முக்கிய விபரம்!

பிரபல கால் டாக்சி சேவை நிறுவனமான ஓலா (Ola), எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியில் களமிறங்கியிருக்கின்றது. கடந்த ஆகஸ்டு மாதம் எஸ்1 (S1) மற்றும் எஸ்1 ப்ரோ (S1 Pro) எனும் இரு புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி வைத்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான புக்கிங்கை ஏற்கனவே நிறுவனம் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

மீண்டும் தொடங்கியது Ola இ-ஸ்கூட்டருக்கான புக்கிங் பணி... இந்த முறை எவ்வளவு முன் தொகை தெரியுமா? முக்கிய விபரம்!

ரூ. 499 என்ற மிக மிக குறைவான விலையில் மின்சார ஸ்கூட்டருக்கான புக்கிங் ஏற்கப்பட்டது. இது தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 1 லட்சம் யூனிட்டுகளுக்கான முன் பதிவுகள் கிடைத்ததாக ஓலா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளில் ரூ. 1,100 கோடி மதிப்பிலான புக்கிங்குகள் தங்களுக்கு கிடைத்தாக நிறுவனம் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது.

மீண்டும் தொடங்கியது Ola இ-ஸ்கூட்டருக்கான புக்கிங் பணி... இந்த முறை எவ்வளவு முன் தொகை தெரியுமா? முக்கிய விபரம்!

இந்திய வாகன உலகிலேயே இத்தகைய வரவேற்பை ஓர் வாகனம் பெறுவது இதுவே முதல் முறையாகும். ஆகையால், ஒட்டுமொத்த வாகன உலகமே இந்த தகவலைக் கேட்டு ஆச்சரியத்தில் உறைந்தது என்றுகூட கூறலாம். அந்தளவு உச்சபட்ச வரவேற்பை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியர்களிடத்தில்பெற்றது.

மீண்டும் தொடங்கியது Ola இ-ஸ்கூட்டருக்கான புக்கிங் பணி... இந்த முறை எவ்வளவு முன் தொகை தெரியுமா? முக்கிய விபரம்!

இந்த நிலையில், எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான புக்கிங்கை ஓலா நிறுவனம் மீண்டும் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் ரூ. 499 எனும் அதே முன் தொகையில் முன்பதிவுகள் மீண்டும் ஏற்கப்பட்டு வருகின்றன.

மீண்டும் தொடங்கியது Ola இ-ஸ்கூட்டருக்கான புக்கிங் பணி... இந்த முறை எவ்வளவு முன் தொகை தெரியுமா? முக்கிய விபரம்!

முன்னதாக புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவரி வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாத (அக்டோபர்) இறுதிக்குள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் இதன் டெலிவிரி பணிகள் தொடங்கப்பட இருக்கின்றது.

மீண்டும் தொடங்கியது Ola இ-ஸ்கூட்டருக்கான புக்கிங் பணி... இந்த முறை எவ்வளவு முன் தொகை தெரியுமா? முக்கிய விபரம்!

ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 1 லட்சம் என்ற விலையும், எஸ்1 ப்ரோ மாடலுக்கு ரூ. 1.30 லட்சம் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மிகவும் குறைவான விலையில் விற்பனக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மீண்டும் தொடங்கியது Ola இ-ஸ்கூட்டருக்கான புக்கிங் பணி... இந்த முறை எவ்வளவு முன் தொகை தெரியுமா? முக்கிய விபரம்!

உதராணமாக, தலைநகர் டெல்லியில் ஓலா எஸ்1 ரூ. 85,099 என்ற விலையிலும், குஜராத்தில் ரூ. 79,999 என்ற மிக மிக குறைவான விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இதேபோல் எஸ்1 ப்ரோ மாடலும் குறைவான விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கும். இதற்கு அந்தந்த மாநிலங்கள் தங்களின் மாநில மக்களுக்கு தனித்துவமாக மானியம் திட்டத்தை அறிவித்திருப்பதே காரணம் ஆகும்.

மீண்டும் தொடங்கியது Ola இ-ஸ்கூட்டருக்கான புக்கிங் பணி... இந்த முறை எவ்வளவு முன் தொகை தெரியுமா? முக்கிய விபரம்!

மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ஒன்றிய அரசுடன் இணைந்து சில மாநில அரசுகள் தங்கள் சார்பாக தனியாக மானியம் திட்டத்தை அறிவித்திருக்கின்றன. இதனால், நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்களில் சிறப்பு மானிய திட்டத்தின்கீழ் மின்சார வாகனங்கள் சற்று குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் நிலை உருவாகி இருக்கின்றது.

மீண்டும் தொடங்கியது Ola இ-ஸ்கூட்டருக்கான புக்கிங் பணி... இந்த முறை எவ்வளவு முன் தொகை தெரியுமா? முக்கிய விபரம்!

ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 121 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ வேகம் ஆகும். எஸ்1 ப்ரோ இதைவிட அதிக திறன் வெளிப்பாடு கொண்ட தயாரிப்பாக காட்சியளிக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 181 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 115 கிமீ வேகம் ஆகும். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல்வேறு முக்கிய மற்றும் அதிநவீன சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மீண்டும் தொடங்கியது Ola இ-ஸ்கூட்டருக்கான புக்கிங் பணி... இந்த முறை எவ்வளவு முன் தொகை தெரியுமா? முக்கிய விபரம்!

7 இன்ச் தொடுதிரை, 4ஜி இணைப்பு, ப்ளூடூத் இணைப்பு, Wifi இணைப்பு, க்ரூஸ் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ரிவர்ஸ் வசதி என எக்கசக்க சிறப்பு வசதிகள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளன. இதுமாதிரியான புதுமையான அம்சங்களை ஓலா இ-ஸ்கூட்டர் பெற்றிருக்கின்றன காரணத்தினால்தான் மிக அமோகமான வரவேற்பை இந்தியாவில் பெற தொடங்கியிருக்கின்றது. தமிழகத்தின் ஓசூரில் ஓலா நிறுவனத்தின் உற்பத்தி உருவாக்கப்பட்டு வருகின்றது. இது, சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிக பிரமாண்டமான உற்பத்தி ஆலை ஆகும்.

Most Read Articles

மேலும்... #ஓலா #ola
English summary
Ola re opens bookings for s1 and s1 pro electric scooters
Story first published: Tuesday, October 5, 2021, 18:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X