சூப்பரு... ஒலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்த வசதியெல்லாம் இருக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய முக்கிய விபரங்கள் டீசர் படங்களாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

சூப்பரு... ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்த வசதியெல்லாம் இருக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ஓலா க்ரூப்பின் சிஇஒ-வும், தலைவருமான பாவிஷ் அகர்வால், நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறார். இதற்கிடையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெங்களூரில் சமீபத்தில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டது.

சூப்பரு... ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்த வசதியெல்லாம் இருக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இந்த சோதனையில் ஸ்கூட்டரை சிஇஒ பாவிஷ் அகர்வால் தான் இயக்கி பார்த்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவர், அவரது டுவிட்டர் பக்கத்தில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான சில டீசர் படங்களை வெளியிட்டுள்ளார்.

சூப்பரு... ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்த வசதியெல்லாம் இருக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ஓலா நிறுவன தலைவரின் இந்த டுவிட்டர் பதிவின்படி பார்க்கும்போது, சாவியில்லா ஸ்டார்ட், செயலி சார்ந்த அணுகல் உள்ளிட்டவற்றுடன் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கைக்கு அடியில் போதிய இட வசதி உடன் சேமிப்பிடத்தை பெற்று வரவுள்ளது.

சூப்பரு... ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்த வசதியெல்லாம் இருக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

அதுமட்டுமில்லாமல் தற்போதைய இ-ஸ்கூட்டர்களிலேயே நீண்ட சார்ஜிங் ரேஞ்ச்சை கொண்டதாகவும் முதல் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுவரப்பட உள்ளதாகவும் இந்த டீசர் படங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கொண்டிருக்கும் வசதிகளையும் எதிர்பார்க்கலாம்.

சூப்பரு... ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்த வசதியெல்லாம் இருக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

அதாவது நீக்கக்கூடிய லித்தியம்-இரும்பு பேட்டரி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், க்ளவுட் இணைப்பு, அலாய் சக்கரங்கள், முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் போன்றவை ஓலா இ-ஸ்கூட்டரில் நிச்சயம் வழங்கப்படலாம்.

சூப்பரு... ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்த வசதியெல்லாம் இருக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நமது தமிழகத்தில் தான் அதன் பிரம்மாண்ட வாகன தொழிற்சாலையை நிறுவி வருகிறது. இந்தியாவின் மிகவும் அட்வான்ஸான ‘பசுமை' தொழிற்சாலையாக விளங்கவுள்ள இந்த ஓலா தொழிற்சாலை மிக விரைவாக வெறும் 4 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சூப்பரு... ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்த வசதியெல்லாம் இருக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இந்த தொழிற்சாலைக்காக சுமார் ரூ.2,400 கோடியை முதலீடு செய்துள்ள ஓலா க்ரூப் முதற்கட்டமாக தொழிற்சாலையில் 2,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. அதன்பின் தேவையை பொறுத்து அதிகப்பட்சமாக 10,000 பணியாளர்கள் பணியாற்றும் அளவிற்கு திறன் கொண்டதாக இந்த தொழிற்சாலை உருவாக்கப்பட்டு வருகிறது.

சூப்பரு... ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்த வசதியெல்லாம் இருக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

தொழில்துறை 4.0 தரத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் இந்த தொழிற்சாலையில் வருடத்திற்கு 10 மில்லியன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்க முடியுமாம். ஆனால் முதற்கட்டமாக வருடத்திற்கு 2 மில்லியன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சூப்பரு... ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்த வசதியெல்லாம் இருக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

மொத்தம் 10 பொது அசெம்பிள் வரிசையை இந்த தொழிற்சாலை கொண்டிருக்கவுள்ளது. இதனால் ஒவ்வொரு 2 வினாடிக்கும் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு பணிகள் முழுவதையும் நிறைவு செய்யப்பட்டு வெளியேற்றப்படுமாம்.

Most Read Articles
English summary
Ola Electric Scooter Features Teased; Launch Soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X