ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை துவங்குவதில் தாமதம்!! அதிக புக்கிங்கால் வெப்சைட் ‘க்ராஷ்’!!

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை துவங்குவதில் தாமதம்!! அதிக புக்கிங்கால் வெப்சைட் ‘க்ராஷ்’!!

சிவப்பு, நீலம், மஞ்சள், சில்வர், கோல்டு, பிங்க், கருப்பு, க்ரே மற்றும் வெள்ளை என மொத்தம் 10 விதமான நிறத்தேர்வுகளில் மிக பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த மாதம் சுதந்திர தினத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை துவங்குவதில் தாமதம்!! அதிக புக்கிங்கால் வெப்சைட் ‘க்ராஷ்’!!

அதற்கு முன்னதாகவே இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுவிட்டன. 1,860மிமீ நீளத்தில், 700மிமீ அகலத்தில், 1,155மிமீ உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஓலா எஸ்1 இ-ஸ்கூட்டரின் வீல்பேஸ் 1,345மிமீ நீளத்திலும், ஓட்டுனர் இருக்கை ஆனது தரையில் இருந்து 800மிமீ உயரத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை துவங்குவதில் தாமதம்!! அதிக புக்கிங்கால் வெப்சைட் ‘க்ராஷ்’!!

எல்இடி டிஆர்எல் ஸ்ட்ரிப் உடன் இரட்டை-பீம் எல்இடி ஹெட்லைட்டை பெற்றுள்ள ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கைக்கு அடியில் கிட்டத்தட்ட 2 முழு ஹெல்மெட்கள் வைக்கும் அளவிற்கு நன்கு பெரிய இடவசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இ-ஸ்கூட்டரை உரிமையாளர் சாவியை பயன்படுத்தாமல் தனது மொபைல் போன் மூலமாகவே ஸ்டார்ட் செய்ய முடியும்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை துவங்குவதில் தாமதம்!! அதிக புக்கிங்கால் வெப்சைட் ‘க்ராஷ்’!!

ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட போது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2021 செப்டம்பர் 8ஆம் தேதியில் இருந்து, வரிசைப்படி முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முன்பதிவு செய்தவர்கள் ஸ்கூட்டருக்கான மீதி தொகையை செலுத்தி தனது ஓலா எஸ்1 ஸ்கூட்டரை டெலிவிரி பெற்று கொள்ளலாம் என கூறினர்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை துவங்குவதில் தாமதம்!! அதிக புக்கிங்கால் வெப்சைட் ‘க்ராஷ்’!!

கவர்ச்சிகரமான தோற்றத்தினால் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்து வருகிறது. முன்பதிவு துவங்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள்ளாகவே ஓலா எஸ்1-ஐ புக்கிங் செய்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை எளிதாக கடந்துவிட்டதாக அப்போதே தெரிவித்திருந்தோம். இவ்வாறு அதிகப்படியான முன்பதிவுகளினால் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவிரி செய்வதில் ஓலா நிறுவனத்திற்கு பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை துவங்குவதில் தாமதம்!! அதிக புக்கிங்கால் வெப்சைட் ‘க்ராஷ்’!!

இதனால் செப்டம்பர் 8ஆம் தேதியில் இருந்து துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரிகள் சற்று தாமதமாக செப்டம்பர் 15ஆம் தேதி காலை 8 மணியில் இருந்து ஆரம்பிக்கும் என தற்போது ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவில் புக்கிங் குவிந்ததினால் இணையத்தள பக்கத்தில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறே டெலிவிரியில் தாமதத்திற்கு காரணமாகும்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை துவங்குவதில் தாமதம்!! அதிக புக்கிங்கால் வெப்சைட் ‘க்ராஷ்’!!

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், அவர்களது எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை செப்டம்பர் 15ஆம் தேதியில் இருந்தே துவங்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், முதலாவதாக முன்பதிவு செய்தவர்களுக்கே முதலாவதாக ஸ்கூட்டர் டெலிவிரி செய்யப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை துவங்குவதில் தாமதம்!! அதிக புக்கிங்கால் வெப்சைட் ‘க்ராஷ்’!!

எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என்ற இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஓலா எலக்ட்ரிக் பிராண்டின் இந்த முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1 லட்சம் மற்றும் ரூ.1.3 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவை மாநில அரசாங்கள் தனித்தனியாக அறிவித்துள்ள மானியங்கள் சேர்க்கப்படாத விலைகளாகும். அவற்றை சேர்த்தால் விலை இன்னும் குறையும்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை துவங்குவதில் தாமதம்!! அதிக புக்கிங்கால் வெப்சைட் ‘க்ராஷ்’!!

ஓலா எஸ்1-இல் 2.98kWh பேட்டரி தொகுப்பும், எஸ்1 ப்ரோ வேரியண்ட்டில் 3.97kWh பேட்டரி தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது. எஸ்1 வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 121கிமீ வரையிலும், எஸ்1 ப்ரோவில் 181கிமீ தூரம் வரையிலும் செல்லலாம் என ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் எஸ்1 வேரியண்ட்டில் அர்பன் & ஸ்போர்ட் என 2 ரைடிங் மோட்கள் வழங்கப்பட, எஸ்1 ப்ரோ வேரியண்ட்டில் ஹைப்பர் மோடையும் சேர்ந்து 3 ரைடிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை துவங்குவதில் தாமதம்!! அதிக புக்கிங்கால் வெப்சைட் ‘க்ராஷ்’!!

தோற்றத்தை பொறுத்தவரையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் எளிமையானது. பக்கவாட்டிலும் டர்ன் இண்டிகேட்டர்களை பெற்று வந்துள்ள இந்த இ-ஸ்கூட்டர் மாடலில் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் திரை, டிஸ்க் ப்ரேக்குகள், 12 இன்ச் சக்கரங்கள் மற்றும் ரிவர்ஸில் செல்லும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக ரிவர்ஸ் வசதி பார்க்கிங் செய்யும் போது மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை துவங்குவதில் தாமதம்!! அதிக புக்கிங்கால் வெப்சைட் ‘க்ராஷ்’!!

மற்ற எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களை போன்று ஓலாவும் தனது எலக்ட்ரிக் இருசக்கர & மூன்று சக்கர வாகனங்களின் சார்ஜிங் வசதிக்காக ஒருங்கிணைக்கப்பட்ட ஆற்றல் சேவைகள் லிமிடெட் (CESL) உடன் கூட்டணியில் உள்ளது. இந்த கூட்டணியின் விளைவாக, ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதி-வேக ஹைப்பர் சார்ஜர்கள் மற்றும் வீட்டு பயன்பாட்டு சார்ஜர்கள் வழங்கப்பட உள்ளன.

Most Read Articles
English summary
Ola Electric Scooter Sale Start Date Delayed Due To Technical Issues.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X