பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு... இந்தியாவிற்கு வருமா?

பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு... இந்தியாவிற்கு வருமா?

பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக அதன் தொழில்நுட்ப விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த மூன்று வேரியண்ட்களின் வெளிப்புற தோற்றம் ஒன்றாகவே இருக்கும். ஆனால் செயல்திறனில் வேறுபாடுகள் இருக்கும்.

பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு... இந்தியாவிற்கு வருமா?

பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிக்டாக்கில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது அதன் தொழில்நுட்ப விபரங்கள் வெளியாகியுள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் எதிர்காலம் என்பது தற்போதே நமக்கு உறுதியாக தெரிகிறது. இதில், எந்தவிதமான சந்தேகங்களும் இல்லை. எனவே உலகம் முழுவதும் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்த தொழிலில் களமிறங்கியுள்ளன.

பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு... இந்தியாவிற்கு வருமா?

இதில், சில நிறுவனங்கள் ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வந்து விட்டன. அதே நேரத்தில் மிகப்பெரிய நிறுவனங்கள் மெதுவாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றன. இதில், பியாஜியோவும் ஒன்று. பியாஜியோ நிறுவனம் தனது துணை நிறுவனங்கள் மூலமாக எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க முயன்று வருவது ஏற்கனவே நமக்கு தெரிந்த விஷயம்தான்.

பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு... இந்தியாவிற்கு வருமா?

இதன்படி சமீபத்தில் பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியிடப்பட்டது. ஆனால் அப்போது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. ஒன், ஒன் ப்ளஸ் மற்றும் ஒன் ஆக்டிவ் என மொத்தம் 3 வேரியண்ட்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும்.

பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு... இந்தியாவிற்கு வருமா?

இதில், ஒன் பேஸ் வேரியண்ட் ஆகும். இந்த வேரியண்ட்டில், 48V 1.8kWh பேட்டரி தொகுப்பும், 1.2kW மோட்டாரும் வழங்கப்படும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 55 கிலோ மீட்டர்கள். அதே நேரத்தில் ஒன் ப்ளஸ் வேரியண்ட்டிலும் இதே 1.2kW மோட்டார்தான் வழங்கப்படும். ஆனால் இந்த வேரியண்ட்டில் பெரிய 2.3kWh பேட்டரி தொகுப்பு இடம்பெற்றிருக்கும்.

பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு... இந்தியாவிற்கு வருமா?

எனவே ரேஞ்ச் மற்றும் டாப் ஸ்பீடு அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் பியாஜியோ ஒன் ஆக்டிவ் மாடலில், ஒன் ப்ளஸ் மாடலை போன்று 2.3kWh பேட்டரி தொகுப்புதான் வழங்கப்படவுள்ளது. ஆனால் 2kW மோட்டாரை இந்த வேரியண்ட் பெற்றிருக்கும். அதே நேரத்தில் இந்த மூன்று வேரியண்ட்களிலும், முழு எல்இடி லைட்டிங், யூஎஸ்பி சார்ஜிங், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும்.

பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு... இந்தியாவிற்கு வருமா?

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாற்றக்கூடிய பேட்டரியுடன் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. 2 ரைடு மோடுகளை இந்த ஸ்கூட்டர் பெற்றிருக்கும். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 3 வேரியண்ட்களும் ஐரோப்பிய சந்தையில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு... இந்தியாவிற்கு வருமா?

ஆனால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தைக்கு வருமா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்தியாவில் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இன்னும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. ஆனால் வரும் காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #piaggio #பியாஜியோ
English summary
Piaggio One Electric Scooter's Technical Specifications Revealed Ahead Of Its Launch. Read in Tamil
Story first published: Wednesday, June 9, 2021, 23:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X