மிக விரைவில் உலகளவில் அறிமுகமாகிறது Piaggio One இ-ஸ்கூட்டர்! வாகனம்பற்றி அறிய வேண்டிய முக்கிய விபரங்கள் உள்ளே!

தனது One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை உலகளவில் அறிமுகம் செய்ய தயாராக இருப்பதாக Piaggio நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் பற்றிய முக்கிய விபரங்களை இப்பதிவில் காணலாம், வாங்க.

மிக விரைவில் உலகளவில் அறிமுகமாகிறது Piaggio One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஸ்கூட்டர் பற்றிய முக்கிய விபரங்கள் உள்ளே!

உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பியாஜியோ (Piaggio) மிக விரைவில் அதன் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உலகளவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனத்தின் ஒன் (One) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை நிறுவனம் சர்வதேச சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது. முதலில் இந்த வாகனம் ஐரோப்பிய சந்தையிலேயே விற்பனைக்கு வர இருக்கின்றது.

மிக விரைவில் உலகளவில் அறிமுகமாகிறது Piaggio One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஸ்கூட்டர் பற்றிய முக்கிய விபரங்கள் உள்ளே!

அறிமுகத்தை முன்னிட்டு பேட்டரியால் இயங்கும் மின்சார ஸ்கூட்டர் தற்போது அனைத்திற்கும் தயார் நிலையில் இருக்கின்றது. ஆகையால், நடப்பாண்டு முடிவதற்குள் பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் அறிமுகமாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், நீண்ட கால இந்த ஸ்கூட்டரை எதிர்நோக்கி மின் வாகன ஆர்வலர்கள் காத்திருக்க வேண்டியதில்லை என தெரிகின்றது.

மிக விரைவில் உலகளவில் அறிமுகமாகிறது Piaggio One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஸ்கூட்டர் பற்றிய முக்கிய விபரங்கள் உள்ளே!

இது ஓர் காம்பேக்ட் ரக ஸ்கூட்டராக இருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்த வாகனத்தின் ஃபிளாட்டான மற்றும் அதிக இட வசதிக் கொண்ட ஃபூட் ரெஸ்ட் பகுதியைக் கொண்டிருக்கின்றது. இத்துடன், கழட்டி மாட்டக் கூடிய ஃபூட்போர்ட்கள் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, இந்த வாகனத்தில் அதிக பொருட்களை வைக்கும் வகையில் பெரிய ஸ்டோரேஜ் கொடுத்திருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

மிக விரைவில் உலகளவில் அறிமுகமாகிறது Piaggio One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஸ்கூட்டர் பற்றிய முக்கிய விபரங்கள் உள்ளே!

அது ஹெல்மெட் மற்றும் இன்னும் சில பொருட்களை வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். அதேநேரத்தில் இந்த தயாரிப்பானது அதிக கவர்ச்சியான தயாரிப்பாகவும் இருக்கிறது. இந்த கவர்ச்சியை மேலும் மெருகேற்றும் வகையில் பல்வேறு சூப்பர் நிற தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன.

மிக விரைவில் உலகளவில் அறிமுகமாகிறது Piaggio One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஸ்கூட்டர் பற்றிய முக்கிய விபரங்கள் உள்ளே!

இதுமட்டுமின்றி கழட்டி மாட்டக் கூடிய பேட்டரி பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், எங்கு வேண்டுமானாலும் பேட்டரியை கழட்டி எடுத்துக் கொண்டு போய் சார்ஜ் செய்யலாம். ஸ்கூட்டரை இரு விதமான தேர்வுகளில் நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. ஒன் மற்றும் ஒன் ஆக்டீவ் ஆகிய இரு விதமான தேர்வுகளிலேயே உலக நாடுகளில் அது விற்பனைக்கு வர இருக்கிறது.

மிக விரைவில் உலகளவில் அறிமுகமாகிறது Piaggio One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஸ்கூட்டர் பற்றிய முக்கிய விபரங்கள் உள்ளே!

இதுமட்டுமின்றி ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1.2கிலோவாட் (1.6 பிஎச்பியை வெளியேற்றும்) வழங்கும் மின் மோட்டார் பயன்படுத்தப்பட இருக்கின்றது. அதிகபட்சமாக மணிக்கு 43 கிமீ எனும் வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. இதேபோல் இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 55 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

மிக விரைவில் உலகளவில் அறிமுகமாகிறது Piaggio One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஸ்கூட்டர் பற்றிய முக்கிய விபரங்கள் உள்ளே!

இது ஒன் தேர்வின் திறன்களாகும். ஒன் ஆக்டீவ் இதை விட சற்று கூடுதல் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக விற்பனைக்கு வர இருக்கின்றது. 2.6 பிஎச்பி மின் மோட்டார், மணிக்கு 60 கிமீ வேகத்தில் ஓடும் திறனில் மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 65 கிமீ தூரம் பயணிக்கக் கூடிய வசதி ஆகிய சிறப்பு திறன்களுடன் ஒன் ஆக்டீவ் தேர்வு கிடைக்கும்.

மிக விரைவில் உலகளவில் அறிமுகமாகிறது Piaggio One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஸ்கூட்டர் பற்றிய முக்கிய விபரங்கள் உள்ளே!

இதில் ஒன் தேர்விற்கு ரூ. 2,54,449 என்ற விலையும், ஒன் ஆக்டீவ் தேர்விற்கு ரூ. 3,05,390 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரு வேரியண்டுகளிலும் கைனடிக் எனர்ஜி ரெகவரி சிஸ்டம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது மிக ச ிறந்த தொழில்நுட்ப வசதியாகும். பிரேக்கிங் ரீஜெனரேட்டிவ் செய்ய இது உதவும்.

மிக விரைவில் உலகளவில் அறிமுகமாகிறது Piaggio One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஸ்கூட்டர் பற்றிய முக்கிய விபரங்கள் உள்ளே!

இதுமட்டுமின்றி 5.5 இன்ச் வண்ண திரை சென்சார் அடாப்ட் வசதியுடன் மற்றும் இன்னும் பல சிறப்பு வசதிகளுடன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், இந்த ஸ்கீரினில் இரு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஈகோ மற்றும் ஸ்போர்ட் எனும் இரு வித வேரியண்டுகளையே பியாஜியோ ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கியிருக்கின்றது.

மிக விரைவில் உலகளவில் அறிமுகமாகிறது Piaggio One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஸ்கூட்டர் பற்றிய முக்கிய விபரங்கள் உள்ளே!

மேலும், 770மிமீ அளவுள்ள லோவான இருக்கை, மிக சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் மற்றும் மிக சிறந்த பிரேக்கிங் கருவிகள் இருசக்கர வாகன முன் மற்றும் பின் ஆகிய இரு முனைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய வருகை கேள்விக்குறியே. ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை போல் பன்முக வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

மிக விரைவில் உலகளவில் அறிமுகமாகிறது Piaggio One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஸ்கூட்டர் பற்றிய முக்கிய விபரங்கள் உள்ளே!

அண்மையில் பியாஜியோ நிறுவனம் அரசியல் கூட்டணியையே மிஞ்சும் வகையில் கேடிஎம், யமஹா மற்றும் கேடிஎம் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணியை வைத்தது. இந்த கூட்டணியான மின்சார வாகனங்களுக்கான ஸ்வாப்பபிள் பேட்டரி நிலையங்களை உலகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஆனால், முதலில் இந்த கூட்டணி ஐரோப்பியா நாடுகளிலேயே ஸ்வாப்பபிள் பேட்டரி மையங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது.

மிக விரைவில் உலகளவில் அறிமுகமாகிறது Piaggio One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஸ்கூட்டர் பற்றிய முக்கிய விபரங்கள் உள்ளே!

நிறுவனம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் ஸ்வாப்பபிள் பேட்டரி மையங்கள் டூ-வீலர், மூன்று சக்கர வாகனம், மொபட் மற்றும் குவாட்ரி சைக்கிள் ரக மின்வாகனங்களுக்கு பயன்படும் நோக்கி மையங்களை உருவாக்க இருக்கின்றது. மக்கள் மத்தியில் மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் வகையில் நான்கு நிறுவனங்களும் மெகா கூட்டணி வைத்து ஸ்வாப்பபிள் பேட்டரி மையங்களை அமைக்க இருக்கின்றன.

Most Read Articles

English summary
Piaggio soon to launch one electric scooter in international market
Story first published: Friday, September 10, 2021, 21:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X