அமெரிக்கா, இங்கிலாந்துலயே நம்ம ஊர் பைக்குகள்தான் மாஸ் காட்டுது! இந்த சூப்பரான விஷயம் இவ்ளோ நாளா தெரியாம போச்சே

அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படும் 'மேட் இன் இந்தியா' பைக்குகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அமெரிக்கா, இங்கிலாந்துலயே நம்ம ஊர் பைக்குகள்தான் மாஸ் காட்டுது! இந்த சூப்பரான விஷயம் இவ்ளோ நாளா தெரியாம போச்சே

உலகின் மிகப்பெரிய பைக் சந்தைகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இங்கு உற்பத்தியாகும் ஏராளமான பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 'மேட் இன் இந்தியா' பைக்குகள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுவது நமக்கு பெருமையான விஷயம்தான். இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளில் விற்பனையாகும் பைக்குகளின் பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அமெரிக்கா, இங்கிலாந்துலயே நம்ம ஊர் பைக்குகள்தான் மாஸ் காட்டுது! இந்த சூப்பரான விஷயம் இவ்ளோ நாளா தெரியாம போச்சே

பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar)

உலகிலேயே அதிக பைக்குகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக இந்தியாவின் பஜாஜ் திகழ்ந்து வருகிறது என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் வரிசை பைக்குகள் மிகவும் பிரபலமாக உள்ளன. இந்தியாவை போலவே, சர்வதேச சந்தைகளிலும் பஜாஜ் பல்சர் வரிசை பைக்குகளுக்கு அதிக டிமாண்ட் இருக்கிறது.

அமெரிக்கா, இங்கிலாந்துலயே நம்ம ஊர் பைக்குகள்தான் மாஸ் காட்டுது! இந்த சூப்பரான விஷயம் இவ்ளோ நாளா தெரியாம போச்சே

பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் இருந்து பல்சர் வரிசை பைக்குகளை, தாய்லாந்து, நேபாளம், வங்கதேசம் மற்றும் மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அத்துடன் ஒரு சில லத்தீன் அமெரிக்க சந்தைகளுக்கும் 'மேட் இன் இந்தியா' பஜாஜ் பல்சர் பைக்குகள் ஏற்றுமதியாகின்றன. இந்திய இளைஞர்களை போலவே, வெளிநாடுகளை சேர்ந்த இளைஞர்களும் பஜாஜ் பல்சர் மீது அதிக காதல் கொண்டுள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்துலயே நம்ம ஊர் பைக்குகள்தான் மாஸ் காட்டுது! இந்த சூப்பரான விஷயம் இவ்ளோ நாளா தெரியாம போச்சே

பஜாஜ் பாக்ஸர் (Bajaj Boxer)

இந்தியாவில் பஜாஜ் பாக்ஸர் பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. என்றாலும் கூட இந்த பைக் இன்னமும் உற்பத்தி செய்யப்பட்டு, சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. பஜாஜ் பாக்ஸர் 125 மற்றும் பஜாஜ் பாக்ஸர் 150 ஆகிய பைக்குகள் ஆப்ரிக்க சந்தைகளில் கிடைக்கின்றன. அந்த சந்தைகளில் பஜாஜ் பாக்ஸர் மிகவும் பிரபலமான பைக்காக திகழ்கிறது.

அமெரிக்கா, இங்கிலாந்துலயே நம்ம ஊர் பைக்குகள்தான் மாஸ் காட்டுது! இந்த சூப்பரான விஷயம் இவ்ளோ நாளா தெரியாம போச்சே

பஜாஜ் டோமினார் (Bajaj Dominar)

ஒரு சில பைக்குகள்தான் ஆல்-ரவுண்டர்கள் என கருதப்படும். இதில், பஜாஜ் டோமினார் பைக்கும் ஒன்று. நெடுஞ்சாலைகளில் இந்த பைக் மூன்று இலக்க வேகத்தில் எளிதாக பயணிக்கும். அத்துடன் நகர பகுதிகளில் ஓட்டுவதற்கும் ஏற்ற பைக்காக பஜாஜ் டோமினார் உள்ளது. எனவேதான் இதனை ஆல்-ரவுண்டர் என வர்ணிக்கின்றனர்.

அமெரிக்கா, இங்கிலாந்துலயே நம்ம ஊர் பைக்குகள்தான் மாஸ் காட்டுது! இந்த சூப்பரான விஷயம் இவ்ளோ நாளா தெரியாம போச்சே

பைக் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், பல்வேறு வெளிநாடுகளில் டோமினார் பைக்கை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. பஜாஜ் நிறுவனம் டோமினார் பைக்கின் விளம்பரங்களில் ராயல் என்பீல்டு பைக்குகளை கிண்டல் அடித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இதற்கு ராயல் என்பீல்டு ரசிகர்களும் பதிலடி கொடுக்க நிலவரம் கலவரம் ஆனது.

அமெரிக்கா, இங்கிலாந்துலயே நம்ம ஊர் பைக்குகள்தான் மாஸ் காட்டுது! இந்த சூப்பரான விஷயம் இவ்ளோ நாளா தெரியாம போச்சே

ஆனாலும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கோட்டையை பஜாஜ் டோமினார் அசைக்க முடியவில்லை என்பதை மறுக்க முடியாது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கோட்டையில் இருந்து ஒரு செங்கல்லை கூட பஜாஜ் டோமினார் பைக்கால் பெயர்த்து எடுக்க முடியவில்லை. இதனால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆதிக்கம் தொடர்கிறது.

அமெரிக்கா, இங்கிலாந்துலயே நம்ம ஊர் பைக்குகள்தான் மாஸ் காட்டுது! இந்த சூப்பரான விஷயம் இவ்ளோ நாளா தெரியாம போச்சே

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350)

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏராளமான வசதிகள் இடம்பெற்றிருப்பதுடன், அதிர்வுகள் குறைவு என்பதுதான் இதற்கு காரணம். இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்துலயே நம்ம ஊர் பைக்குகள்தான் மாஸ் காட்டுது! இந்த சூப்பரான விஷயம் இவ்ளோ நாளா தெரியாம போச்சே

இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீட்டியோர் 350 பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. மேலும் தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 உள்ளிட்ட பைக்குகள் உடன், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 போட்டியிட்டு வருகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்துலயே நம்ம ஊர் பைக்குகள்தான் மாஸ் காட்டுது! இந்த சூப்பரான விஷயம் இவ்ளோ நாளா தெரியாம போச்சே

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி (TVS Star City)

பஜாஜ் நிறுவனத்தை போலவே, டிவிஎஸ் நிறுவனமும் பைக் ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கிறது. டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்டார் சிட்டி இந்தியாவில் எந்த அளவிற்கு பிரபலம்? என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதேபோல் வெளிநாடுகளிலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்குகள் மிகவும் பிரபலமாக உள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்துலயே நம்ம ஊர் பைக்குகள்தான் மாஸ் காட்டுது! இந்த சூப்பரான விஷயம் இவ்ளோ நாளா தெரியாம போச்சே

குறிப்பாக இலங்கையில் நீங்கள் அதிக அளவில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்குகளை பார்க்க முடியும். டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்கின் முக்கியமான சந்தைகளில் ஒன்றாக இலங்கை திகழ்ந்து கொண்டுள்ளது. அத்துடன் கொலம்பியாவிற்கும் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இங்கிலாந்துலயே நம்ம ஊர் பைக்குகள்தான் மாஸ் காட்டுது! இந்த சூப்பரான விஷயம் இவ்ளோ நாளா தெரியாம போச்சே

ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor)

என்ன இந்த பட்டியலில் இன்னும் ஹீரோ ஸ்பிளெண்டர் வரவில்லை? என நீங்கள் யோசித்திருக்கலாம். இந்த பட்டியலில் தவிர்க்க முடியாத ஒரு பைக்காக ஹீரோ ஸ்பிளெண்டர் உள்ளது. இந்தியாவின் கம்யூட்டர் பைக் செக்மெண்ட்டின் அரசன் ஹீரோ ஸ்பிளெண்டர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாக ஹீரோ ஸ்பிளெண்டர் திகழ்கிறது.

அமெரிக்கா, இங்கிலாந்துலயே நம்ம ஊர் பைக்குகள்தான் மாஸ் காட்டுது! இந்த சூப்பரான விஷயம் இவ்ளோ நாளா தெரியாம போச்சே

எனவே ஹீரோ ஸ்பிளெண்டர் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நைஜீரியா, வங்கதேசம் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் ஹீரோ ஸ்பிளெண்டர் பிரபலமாக இருக்கிறது. அத்துடன் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்கை போலவே, இலங்கையிலும் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் மிகவும் பிரபலம்.

Most Read Articles

English summary
Popular made in india bikes sold in international markets bajaj pulsar tvs star city hero splendor
Story first published: Friday, October 1, 2021, 12:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X