எலக்ட்ரிக் பைக்கை தயாரிக்க ஆரம்பிக்கும் போர்ஷே!! முடிந்தது புதிய கூட்டணி!

போர்ஷே நிறுவனம் அதன் துணை நிறுவனமான ரிமாக் ஆட்டோமொபைலிட்டி உடன் இணைந்த கிரேப் என்ற பெயர் கொண்ட குரோஷியா நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து பெரும் பங்குகளை வாங்குவதற்கு அனைத்து விதங்களில் தயாராகி வருகிறது. லக்சரி ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கும் போர்ஷே ஏற்கனவே கிரெப்பின் 10 சதவீத பங்குகளை கொண்டிருந்தது.

எலக்ட்ரிக் பைக்கை தயாரிக்க ஆர்வம் காட்டும் போர்ஷே!! ஏற்படுகிறதா புதிய கூட்டணி?

தற்போது மீண்டும் கிரெப் நிறுவனத்தில் தனது பங்குகளை அதிகப்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளது. ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரிப்பது மட்டுமின்றி இத்தகைய நடவடிக்கைகளிலும் இறங்கும் போர்ஷே நிறுவனத்தின் மூலதன உதவி பிரிவாக ரிமாக் ஆட்டோமொபைலிட்டி விளங்குகிறது.

எலக்ட்ரிக் பைக்கை தயாரிக்க ஆர்வம் காட்டும் போர்ஷே!! ஏற்படுகிறதா புதிய கூட்டணி?

இதனால் போர்ஷேவிற்கு மூன்றாம் தரப்பு முதலீட்டாளர் கிரெப் ஆகும். எலக்ட்ரிக் சூப்பர்கார் ரிமோக்கின் நிறுவனரான மேட் ரிமாக் மற்றும் மற்ற கிரெப் நிறுவனர்கள் சிறுபான்மை பங்குகளை தக்க வைத்து கொள்ளவுள்ளார்கள். ப்ளூபெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கையகப்படுத்துதல் இந்த ஆண்டின் இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரிக் பைக்கை தயாரிக்க ஆர்வம் காட்டும் போர்ஷே!! ஏற்படுகிறதா புதிய கூட்டணி?

இதுகுறித்து ரிமாக் க்ரூப்பின் சிஇஒ மேட் ரிமாக் கூறுகையில், கிரெப் ஒரு பெரிய வெற்றிக்கரமான, உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாகவும், தொழிற்துறையின் தலைவர்களில் ஒருவராகவும் இருக்க முடியும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். கிரேசிமிர் ஹெலேட் தலைமையிலான கிரெப் குழுவை பற்றியும், அவர்களது வளர்ச்சியை பற்றியும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

எலக்ட்ரிக் பைக்கை தயாரிக்க ஆர்வம் காட்டும் போர்ஷே!! ஏற்படுகிறதா புதிய கூட்டணி?

கடந்த 7 ஆண்டுகளில் 100 பேர் கொண்ட குழு சந்தேகத்திற்கு இடமின்றி சந்தையில் அதிகளவில் இணையம் பெற்ற மற்றும் தொழிற்நுட்ப ரீதியாக மேம்பட்ட இ-பைக்குகளை உருவாக்கியுள்ளது. குரோஷியாவில் ஸ்வெட்டா நெடெல்ஜா என்கிற பகுதியில் தொழிற்சாலையை அமைத்துள்ள க்ரெப், அங்கிருந்து தான் மற்ற வெளிநாட்டு சந்தைகளுக்கும் இ-பைக்குகளை அனுப்பி வைக்கிறது என்றார்.

எலக்ட்ரிக் பைக்கை தயாரிக்க ஆர்வம் காட்டும் போர்ஷே!! ஏற்படுகிறதா புதிய கூட்டணி?

போர்ஷே அதன் மின்மயமாக்கலை நோக்கிய மற்றொரு படியாக இது விளங்குகிறது. மற்ற பிரபலமான மாடல்களுக்கு இணையாக அதன் எலக்ட்ரிக் காரான டைகனை போர்ஷே நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக டைகன் ஜிடிஎஸ் மற்றும் போர்ஷே டைகன் ஜிடிஎஸ் ஸ்போர்ட் டூரிஸ்மோ கார்களை அறிமுகப்படுத்தி இருந்தது.

எலக்ட்ரிக் பைக்கை தயாரிக்க ஆர்வம் காட்டும் போர்ஷே!! ஏற்படுகிறதா புதிய கூட்டணி?

எலக்ட்ரிக் இயக்கத்தை நோக்கிய தங்களது நடவடிக்கைகள் குறித்து போர்ஷேவின் தலைமை நிதி அதிகாரி லுட்ஸ் மெஷ்கே சமீபத்தில் வெளியிட்டு இருந்த அறிக்கையில். இ-பைக் துறையில் எங்கள் செயல்பாடுகள் எங்கள் நிலையான அணுகுமுறையை அடிக்கோடிட்டு காட்டுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

எலக்ட்ரிக் பைக்கை தயாரிக்க ஆர்வம் காட்டும் போர்ஷே!! ஏற்படுகிறதா புதிய கூட்டணி?

போர்ஷே நிறுவனம் கடந்த மார்ச் இரு எலக்ட்ரிக் பைக்குகளை தயாரித்து இருந்தது. தற்போது இருசக்கர வாகன உலகில் நுழைந்திருக்கும் இந்த நிறுவனம் நேரடியாக எலக்ட்ரிக் துறையில் நுழைகிறது. அடுத்த 5 வருடங்களில் இவி துறையில் புதிய தொழிற்நுட்பங்களை உருவாக்க சுமார் 15 பில்லியன் யூரோக்களை போர்ஷே முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

எலக்ட்ரிக் பைக்கை தயாரிக்க ஆர்வம் காட்டும் போர்ஷே!! ஏற்படுகிறதா புதிய கூட்டணி?

தற்போது வரையில் மட்டுமே பகுதி மற்றும் முழு பேட்டரி-ஆற்றல் வாகனங்களை தயாரிக்க 6.5 பில்லியனை ஒதுக்கியுள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷே அதன் முதல் முழு-எலக்ட்ரிக் காரான டைகனை இந்த 2021 நவம்பர் மாதத்தில் தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது.

எலக்ட்ரிக் பைக்கை தயாரிக்க ஆர்வம் காட்டும் போர்ஷே!! ஏற்படுகிறதா புதிய கூட்டணி?

இந்த காருக்கு இந்தியாவில் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1.5 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகள் தற்சமயம் நடைபெற்று வருகின்றன. போர்ஷே டைகனை இப்போது புக் செய்தாலும் 2022இல் தான் டெலிவிரி எடுக்க முடியும் என்கிற நிலை தான் உள்ளது. டைகனை தொடர்ந்து மேலும் ஒரு எலக்ட்ரிக் காரையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவர போர்ஷே தயாராகி வருகிறது.

எலக்ட்ரிக் பைக்கை தயாரிக்க ஆர்வம் காட்டும் போர்ஷே!! ஏற்படுகிறதா புதிய கூட்டணி?

டைகனில் அதிக ரேஞ்சை வழங்குவதற்காக சுமார் 560 kwh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரத்திற்கு பயணிக்க முடியும். இதன் மோட்டாரில் விஐடி தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. டைகன், டைகன் 4எஸ், டர்போ மற்றும் டர்போ எஸ் என்ற நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

எலக்ட்ரிக் பைக்கை தயாரிக்க ஆர்வம் காட்டும் போர்ஷே!! ஏற்படுகிறதா புதிய கூட்டணி?

இதில் டர்போ எஸ் அதிக திறன் கொண்டதாக விளங்குகிறது. டர்போ எஸ் தேர்வின் 560 கிலோவாட் திறன் கொண்டதாக விளங்கும் எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 761 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஃபோர்ஷே காரில் வெறும் 2.8 வினாடிகளிலேயே 100kmph வேகத்தை எட்டிவிடலாம்.

Most Read Articles
மேலும்... #போர்ஷே #porsche
English summary
Porsche is all set to gain a major stake in Greyp, a Croatian electric-bike maker.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X