வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே செம்ம டஃப் கொடுக்கும்... இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அதி-நவீன மின்சார பைக்!

ஹைதராபாத் ஐஐடிக்கு சொந்தமான ப்யூர் இவி நிறுவனம் சூப்பர் திறன்கள் கொண்ட மின்சார பைக்கை களமிறக்க தயாராகி வருகின்றது. இந்த மின்சார பைக் பற்றியும், அது எப்போது அறிமுகமாக இருக்கின்றது என்பது பற்றிய சுவாரஷ்ய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே செம்ம டஃப் கொடுக்கும்... இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அதி-நவீன மின்சார பைக்!!

மின் வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்து வரும்நிலையில் புதிய சூப்பர் திறன்கள் கொண்ட எலெக்ட்ரிக் பைக்கை இந்திய நிறுவனம் ஒன்று நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ப்யூர் இவி எனும் நிறுவனமே அதன் இட்ரைஸ்ட் (ETryst) 350 மாடலை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே செம்ம டஃப் கொடுக்கும்... இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அதி-நவீன மின்சார பைக்!!

ப்யூர் இவி ஓர் ஐஐடி ஹைதராபாத்திற்கு சொந்தமான நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் மின்சார மோட்டார்சைக்கிளே விரைவில் அறிமுகமாக இருக்கும் இட்ரைஸ்ட் 350 மாடல் எலெக்ட்ரிக் பைக். ஆகஸ்டு 15ம் தேதியில் இருந்து இப்பைக் விற்பனைக்கு விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே செம்ம டஃப் கொடுக்கும்... இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அதி-நவீன மின்சார பைக்!!

இந்த மின்சார பைக் ஓர் இந்தியா தயாரிப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு என அனைத்துமே உள்நாட்டில் வைத்தே செய்யப்பட்டு வருகின்றது. ஆகையால், இப்பைக்கிற்கு இந்திய அரசின் ஃபேம்2 மானியம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே செம்ம டஃப் கொடுக்கும்... இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அதி-நவீன மின்சார பைக்!!

இந்த மின்சார பைக்கில் 3.5 kWh பேட்டரி பேக்கை பொருத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது அதிகபட்சமாக 120 கிமீ ரேஞ்ஜை ஓர் முழுமையான சார்ஜில் வழங்கும். இத்தகைய சூப்பர் திறன் கொண்ட பைக்கையே முதல் கட்டமாக 50 யூனிட் அளவில் உற்பத்தி செய்ய இருக்கின்றது ப்யூர் இவி. இவையனைத்தும் டெமோ பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட இருக்கின்றன.

வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே செம்ம டஃப் கொடுக்கும்... இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அதி-நவீன மின்சார பைக்!!

இதனைத் தொடர்ந்து ஆகஸ்டு 15ம் தேதி அன்று நாடு முழுவதும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. முதல் கட்டமாக நாட்டின் குறிப்பிட்ட சில முக்கிய நகரங்களில் இப்பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களிலேயே இப்பைக் முதலில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே செம்ம டஃப் கொடுக்கும்... இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அதி-நவீன மின்சார பைக்!!

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் நிறுவனம் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. மேலும், அதிகாரப்பூர்வமற்ற தகவலாக இட்ரைஸ்ட் மின்சார பைக் ரூ. 1லட்சம் என்ற குறைந்த விலையில் விற்பனைக்கு வருவதாக இருப்பதாகவும் வெளியாகி வருகின்றது.

வெளிநாட்டு தயாரிப்புகளுக்கே செம்ம டஃப் கொடுக்கும்... இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அதி-நவீன மின்சார பைக்!!

இவ்வாறு உறுதியற்ற தகவல்கள் வெளியாகி வரும் அதேவேலையில் சில உறுதிவாய்ந்த தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. அதாவது, மின்சார பைக் அதிகபட்சமாக 85 கிமீ செல்லும் மற்றும் ஐந்து வருட வாரண்டில் விற்பனையில் வரும் என பல்வேறு தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றது. இதுபோன்ற மேலும் பல்வேறு சுவாரஷ்ய தகவல்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகவும் இருக்கின்றன.

குறிப்பு: 2 மற்றும் 3 ஆகிய இரு புகைப்படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை ஆகும்.

Most Read Articles

English summary
Pure EV Reveals ETryst 350 Electric Motorcycle, Launch Soon. Read In Tamil.
Story first published: Friday, February 12, 2021, 16:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X