இந்த பைக்கில் அப்படி என்ன தாங்க இருக்கு!! புதிய தோற்றத்திற்கு மாற்றப்பட்ட யமஹா ஆர்எக்ஸ்100...

90களில் மிக பிரபலமாக இருந்த மோட்டார்சைக்கிள்களுள் ஒன்று யமஹா ஆர்எக்ஸ்100. இதனுடன் அந்த காலத்தில் பல முன்னணி நிறுவனங்களது பைக்குகள் விற்பனை செய்யப்பட்டாலும், ஆர்எக்ஸ்100 பைக்குகளை மட்டும் இந்தியர்கள் தங்களது மனதில் தனி இடத்தில் வைத்துள்ளனர்.

இந்த பைக்கில் அப்படி என்ன தாங்க இருக்கு!! புதிய தோற்றத்திற்கு மாற்றப்பட்ட யமஹா ஆர்எக்ஸ்100...

இதனாலேயே விற்பனை நிறுத்தப்பட்டு பல வருடங்களான போதிலும் செகண்ட் ஹேண்ட் சந்தையில் ஆர்எக்ஸ்100 தவிர்க்க முடியாத பைக்காக இருந்து வருகிறது. இதன் காரணமாக இப்போதும் இந்த யமஹா பைக்கை சாலைகளில் பார்க்க முடிகிறது.

இந்த பைக்கில் அப்படி என்ன தாங்க இருக்கு!! புதிய தோற்றத்திற்கு மாற்றப்பட்ட யமஹா ஆர்எக்ஸ்100...

2-ஸ்ட்ரோக் மான்ஸ்டர் என அழைக்கப்படும் ஆர்எக்ஸ்100 கிட்டத்தட்ட 11 வருடங்கள் இந்தியாவில் விற்பனையில் இருந்தது. மேலும் ஜப்பானிய யமஹா நிறுவனத்திற்கு ஒரு தனி அடையாளத்தை வழங்கிய மோட்டார்சைக்கிள் இதுதான் என்றால் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த பைக்கில் அப்படி என்ன தாங்க இருக்கு!! புதிய தோற்றத்திற்கு மாற்றப்பட்ட யமஹா ஆர்எக்ஸ்100...

பழைய ஆர்எக்ஸ்100 பைக்குகளை மீண்டும் புதிய தோற்றத்திற்கு கொண்டுவந்து விற்பனை செய்வதையே ஒரு சிலர் தொழிலாக பார்த்து வருகின்றனர். அவ்வாறு புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றப்பட்ட தெலுங்கானாவை சேர்ந்த யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

Image Courtesy: Painting From Cm

இந்த வீடியோவில் கிட்டத்தட்ட 90களில் யமஹாவின் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் ஆர்எக்ஸ்100 பைக்கை போன்று இந்த கஸ்டமைஸ்ட் பைக் காட்சி தருகிறது. இருப்பினும் அதேநேரம் தற்போதைய மாடர்ன் பைக்குகளின் தொடுதல்களையும் இந்த பைக்கில் பார்க்க முடிகிறது.

இந்த பைக்கில் அப்படி என்ன தாங்க இருக்கு!! புதிய தோற்றத்திற்கு மாற்றப்பட்ட யமஹா ஆர்எக்ஸ்100...

கன்மெட்டல் க்ரே நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த ஆர்எக்ஸ்100 பைக்கில் முன்பக்க ஹெட்லேம்ப்பில் முந்தைய பல்ப்பிற்கு மாற்றாக எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேநேரம் ஹெட்லைட்டை சுற்றிலும் மற்றும் முன்பக்க டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனிலும் சில்வர் க்ரோமிற்கு மாற்றாக கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் அப்படி என்ன தாங்க இருக்கு!! புதிய தோற்றத்திற்கு மாற்றப்பட்ட யமஹா ஆர்எக்ஸ்100...

இதற்கு ஏற்றாற்போல் என்ஜின் அமைப்பும் மொத்தமாக கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. என்ஜினிற்கு அடிப்பகுதியில் பாதுகாப்பு தகடு யஹாவின் முத்திரை உடன் வழங்கப்பட்டுள்ளது. ஆர்எக்ஸ்100-இன் ஸ்போக் சக்கரங்கள் இந்த பைக்கில் அலாய் சக்கரங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த பைக்கில் அப்படி என்ன தாங்க இருக்கு!! புதிய தோற்றத்திற்கு மாற்றப்பட்ட யமஹா ஆர்எக்ஸ்100...

இவை தவிர்த்து பைக்கின் டர்ன் இண்டிகேட்டர்கள், இருக்கை, பின்பக்க டெயில்லைட், இரட்டை வாயு-சார்ஜ்டு சஸ்பென்ஷன் உள்ளிட்டவை அப்படியே தொடரப்பட்டுள்ளன. இதனால் கஸ்டமைஸ்ட் செய்வதற்கு முன்பும் இந்த ஆர்எக்ஸ்100 பைக் சிறந்த நிலையில் இருந்திருக்க வேண்டும்.

இந்த பைக்கில் அப்படி என்ன தாங்க இருக்கு!! புதிய தோற்றத்திற்கு மாற்றப்பட்ட யமஹா ஆர்எக்ஸ்100...

க்ரோம் ஆல் ஃபினிஷ்டு செய்யப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய், ஹேண்டில்பார் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் எந்த மாற்றமுமில்லை. யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கில் 98சிசி சிங்கிள்-சிலிண்டர் 2-ஸ்ட்ரோக் என்ஜின் பொருத்தப்பட்டது.

இந்த பைக்கில் அப்படி என்ன தாங்க இருக்கு!! புதிய தோற்றத்திற்கு மாற்றப்பட்ட யமஹா ஆர்எக்ஸ்100...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 11 எச்பி பவரையும் 6,500 ஆர்பிஎம்-இல் 10.39 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த ஆர்எஸ்100 பைக் 4-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷனை கொண்டதாக உள்ளது. பழைய ஆர்எக்ஸ்100 பைக்கை இவ்வாறான தோற்றத்திற்கு மாற்ற எவ்வளவு செலவு ஆனது என்பது தெரியவில்லை.

Most Read Articles
English summary
This Restored Yamaha RX100 Is For The True Enthusiast Of The Icon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X