யமஹா ஆர்எக்ஸ்100-இன் தோற்றத்தில் எலக்ட்ரிக் பைக்!! ஐரோப்பாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஸ்வீடனை சேர்ந்த RGNT எனப்படும் ரெஜெண்ட் (REGENT- 2019இல் மாற்றுவரும் இருந்த பெயர்) எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் அதன் நம்பர்.1 கிளாசிக் மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்து ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஐரோப்பிய எலக்ட்ரிக் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

யமஹா ஆர்எக்ஸ்100-இன் தோற்றத்தில் எலக்ட்ரிக் பைக்!! ஐரோப்பாவில் விற்பனைக்கு அறிமுகம்!

நம்பர்.1 கிளாசிக் என்பது இதன் முந்தைய தலைமுறைக்கு இருந்த பெயராகும். ஆனால் தற்போது 1.5க்கு அப்கிரேட் செய்யப்பட்டுள்ளதால் இதன் பெயர் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவில் இந்த எலக்ட்ரிக் பைக்கின் விலை 12,495 யுரோக்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யமஹா ஆர்எக்ஸ்100-இன் தோற்றத்தில் எலக்ட்ரிக் பைக்!! ஐரோப்பாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.10.75 லட்சமாகும். 10 லட்ச ரூபாயில் ஒரு எலக்ட்ரிக் பைக்கா! எலக்ட்ரிக் பைக்காக இருப்பினும் இந்த விலை சற்று அதிகமே. ஸ்வீடனில் குங்ஸ்பேகா தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் நம்பர்.1 கிளாசிக் மோட்டார்சைக்கிள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஏற்கனவே விற்பனையில் உள்ளது.

யமஹா ஆர்எக்ஸ்100-இன் தோற்றத்தில் எலக்ட்ரிக் பைக்!! ஐரோப்பாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் 90களில் விற்பனையில் இருந்த யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கை போன்று ரெட்ரோ-கிளாசிக் தோற்றத்தை கொண்ட இந்த RGNT எலக்ட்ரிக் பைக் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அதன் புதிய தலைமுறையிலும் ரெட்ரோ தோற்றத்தை தொடர்ந்துள்ளது. வழக்கம்போல் கண்ணீர்த்துளி வடிவிலான பெட்ரோல் டேங்க், ஒற்றை-துண்டு மேசை இருக்கை மற்றும் கிளாசிக் ஸ்போக் சக்கரங்கள் புதிய நம்பர்.1 கிளாசிக் பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளன.

யமஹா ஆர்எக்ஸ்100-இன் தோற்றத்தில் எலக்ட்ரிக் பைக்!! ஐரோப்பாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய தலைமுறை நம்பர்.1 கிளாசிக் பைக்கில் முக்கியமான அப்கிரேட்கள் அதன் இயந்திர பாகங்களில் தான் கொடுக்கப்பட்டுள்ளன. ஆர்எக்ஸ்100-இன் தோற்றத்தில், 7-இன்ச் தொடுத்திரை உடன் ஜிபிஎஸ்-சார்ந்த நவிகேஷனை வழங்கும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற நவீன வசதிகளை கொண்ட தற்கால மாடர்ன் எலக்ட்ரிக் பைக், RGNT-இன் நம்பர்.1 கிளாசிக் பைக் ஆகும்.

யமஹா ஆர்எக்ஸ்100-இன் தோற்றத்தில் எலக்ட்ரிக் பைக்!! ஐரோப்பாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு புதிய பைக் கண்ட்ரோல் யூனிட் (BCU) யூனிட்டை இம்முறை பெற்றுள்ளது. இந்த BCU யூனிட் ஆனது ஓவர்-தி-ஏர் (OTA) அப்டேட்களுக்கு வழிவகுக்கிறது. இந்த புதிய தலைமுறை ஐரோப்பியன் எலக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டுள்ள விளக்குகள் அனைத்தும் எல்இடி தரத்திலானவை.

யமஹா ஆர்எக்ஸ்100-இன் தோற்றத்தில் எலக்ட்ரிக் பைக்!! ஐரோப்பாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இயக்க அமைப்புகளில் தான் புதிய நம்பர்.1 கிளாசிக் பைக் அப்கிரேட்களை பெற்றுள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தோம். இதன்படி புதிய 9 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் இந்த எலக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 11 கிலோவாட்ஸ் (14.7 பிஎச்பி) வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது.

யமஹா ஆர்எக்ஸ்100-இன் தோற்றத்தில் எலக்ட்ரிக் பைக்!! ஐரோப்பாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய மோட்டாரில் உயர் தரத்திலான வயர் முறுக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலமாக என்ஜினின் வெப்பத்தினை கிட்டத்தட்ட 30 சதவீதத்திற்கு குறைக்க முடியும் என்கிறது RGNT. இதன் மூலமாக பைக்கின் எரிபொருள் திறன் மேம்படுவது மட்டுமின்றி, வெப்ப உமிழ்வினால் வீணாகும் பேட்டரி ஆற்றலை தவிர்க்கவும் முடியும்.

யமஹா ஆர்எக்ஸ்100-இன் தோற்றத்தில் எலக்ட்ரிக் பைக்!! ஐரோப்பாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய எலக்ட்ரிக் மோட்டாரில் 7.7 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. இது நெடுஞ்சாலையில் 110கிமீ ரேஞ்சையும், நகர்புற சாலையில் 160கிமீ வரையிலான ரேஞ்சையும் வழங்கக்கூடியது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய நம்பர்.1 எலக்ட்ரிக் பைக்கில் அதிகப்பட்சமாக மணிக்கு 125கிமீ வேகத்தில் செல்லலாம்.

யமஹா ஆர்எக்ஸ்100-இன் தோற்றத்தில் எலக்ட்ரிக் பைக்!! ஐரோப்பாவில் விற்பனைக்கு அறிமுகம்!

எலக்ட்ரிக் மோட்டார் அப்கிரேட் மட்டுமின்றி, பைக்கின் பயண அனுபவமும் சற்று அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் சிறந்த நம்பகத்தன்மை மற்றும் ஷாக்-அப்சார்பர்களின் பண்பிற்கு ஏற்ப முன்பக்க டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியினை கவனிக்க தற்போது கல்ஃபரின் ரோட்டார்களும், ஜே.ஜூவானின் காலிபர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

யமஹா ஆர்எக்ஸ்100-இன் தோற்றத்தில் எலக்ட்ரிக் பைக்!! ஐரோப்பாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இவற்றுடன் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு சிபிஎஸ் (இணைக்கப்பட்ட ப்ரேக் சிஸ்டம்)-ஐயும் வழங்கியுள்ள RGNT நிறுவனம் இதே எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ஸ்க்ராம்ப்ளர் வெர்சனிலும் வழங்குகிறது. ஸ்க்ராம்ப்ளர் வெர்சனிலும் பைக்கின் தோற்றம் சற்று வேறுப்படுகிறது. இந்த ஐரோப்பிய எலக்ட்ரிக் பைக்குகள் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே.

Most Read Articles

English summary
New Electric Motorcycle With Yamaha RX100 Inspired Styling – Debuts (RGNT Electric Motorcycle)
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X