மணிக்கு 64கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இ-பைக்!! அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது!
அமெரிக்க, டென்வர் நகரத்தை சேர்ந்த ரிஸ்ட்ரெட்டோ எலக்ட்ரிக் நிறுவனம் அதன் ரிஸ்ட்ரெட்டோ 303 எஃப்.எஸ் (முழு சஸ்பென்ஷன்) என்ற எலக்ட்ரிக் பைக்கின் நிறுவனர்கள் பதிப்பிற்கான முன்பதிவுகளை அமெரிக்க நாட்டில் துவங்கியுள்ளது.

வெறும் 500 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் இ-பைக் 10 விதமான நிறங்களில் கிடைக்கும். இந்த இ-பைக்கிற்கான விலை 3,920 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.2.85 லட்சமாகும். ஆனால் இந்த இ-பைக்கிற்கு சில சலுகைகளை ரிஸ்ட்ரெட்டோ எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ரிஸ்ட்ரெட்டோ 303 எஃப்.எஸ் நிறுவனர்கள் எடிசனை 2744 டாலர்களில், அதாவது ரூ.2 லட்சத்தில் வாங்க முடியும்.

இத்தகைய மலிவான விலையே ரிஸ்ட்ரெட்டோ 303 எஃப்.எஸ் இ-பைக்கை அமெரிக்கர்கள் மத்தியில் பிரபலமாக்கியுள்ளது. மேலும் இந்த ஸ்பெஷல் எடிசனும் வாங்கக்கூடிய இ-பைக்காகவே அவர்களால் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க சந்தையை பொறுத்தவரையிலும் விலை தான் குறைவே தவிர, மோட்டார் பாகங்களில் எந்த குறையும் இந்த இ-பைக்கில் கிடையாது. ரிஸ்ட்ரெட்டோ 303 இ-பைக்கில் தயாரிப்பு நிறுவனம் 3.5 கிலோவாட்ஸ் மோட்டாரை பொருத்துகிறது.

மேலும் இவ்வாறான மிகவும் ஆற்றல்மிக்க எலக்ட்ரிக் மோட்டாரை பெறும் முதல் இ-பைக் இதுதான் எனவும் ரிஸ்ட்ரெட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பவர்ஃபுல் மோட்டாரின் உதவியுடன் அதிகப்பட்சமாக மணிக்கு 64கிமீ வேகத்தில் இந்த இ-பைக்கை ஓட்ட முடியுமாம்.

ஆனால் அமெரிக்காவில் இ-பைக்கில் இவ்வளவு வேகத்தில் எல்லாம் செல்ல முடியாது. இதற்காக ‘சாலை' என்கிற மோட் இந்த வாகனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாகவே 45kmph வேகத்தில் இயங்கவே அனுமதிக்கும்.

இதன் எலக்ட்ரிக் மோட்டாரில் 17.5Ah லித்தியம்-இரும்பு பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் ஏற்றி கொண்டால் 88கிமீ தூரம் வரையில் இந்த இ-பைக்கில் பயணிக்கலாம். இதன் இந்த ரேஞ்ச் உண்மையில் ஏத்தர் 450எக்ஸ், ஹோண்டா பிசிஎக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காட்டிலும் அதிகம்.

ஆனால் இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5ல் இருந்து 6 மணிநேரங்கள் தேவைப்படும். விரைவு சார்ஜிங் வசதி தற்போதைக்கு இல்லை. ஆற்றல்மிக்க எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பை பெற்றுள்ளதால் அதற்கு ஏற்றாற்போல் சஸ்பென்ஷன் & ப்ரேக் அமைப்புகளும் நன்கு வலிமைமிக்கதாக வழங்கப்பட்டுள்ளன.

ரிஸ்ட்ரெட்டோ 303 எஃப்.எஸ் நிறுவனர்கள் எடிசன் இந்திய ஷோரூம்களுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இங்கு ஏற்கனவே இ மோட்டோராட் இ.எம்.எக்ஸ், டி-ரெக்ஸ் மற்றும் கார்பன் என ஏகப்பட்ட இ-பைக்குகள் விற்பனையில் உள்ளன.


Click it and Unblock the Notifications








