இதெல்லாம் மிக பெரிய வரலாறுங்க... 120 செகண்டுகளில் விற்று தீர்ந்த Royal Enfield பைக்குகள்... மவுசு குறையவே இல்ல

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சிறப்பு பதிப்பு 650 இரட்டையர்கள் விற்பனைக்கு வந்த 120 செகண்டுகளிலேயே விற்று தீர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

120ம் ஆண்டு விழா சிறப்பு பதிப்பு வாகனங்களின் அறிமுகம் எப்போது? ரெடியா இருங்க ரொம்ப சீக்கிரமே வரபோகுது!!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் எப்போதுமே தனித்துவமான வரவேற்பு உண்டு. இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் தரமான சம்பவமே தற்போது நாட்டில் அரங்கேறியிருக்கின்றது. நிறுவனம் மிக சமீபத்தில் 650 இரட்டையர்கள் என்றழைக்கப்படும் கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய ஆகிய பைக் மாடல்களில் ஆண்டுவிழா பதிப்பு எனும் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

120ம் ஆண்டு விழா சிறப்பு பதிப்பு வாகனங்களின் அறிமுகம் எப்போது? ரெடியா இருங்க ரொம்ப சீக்கிரமே வரபோகுது!!

இந்த பைக்குகளுக்கான புக்கிங் பணிகளை நிறுவனம் மிக சமீபத்தில் தொடங்கியது. இப்பணிகள் தொடங்கப்பட்ட 120 நொடிகளிலேயே அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்திருக்கின்றன. நிறுவனம் ஒட்டுமொத்த இந்திய இருசக்கர வாகன சந்தைக்குமே 120 யூனிட்டுகளை மட்டுமே ஒதுக்கியிருந்தது. இவை அனைத்தும்தான் 120 செகண்டுகளில் இந்தியாவில் விற்று தீர்ந்திருக்கின்றன.

120ம் ஆண்டு விழா சிறப்பு பதிப்பு வாகனங்களின் அறிமுகம் எப்போது? ரெடியா இருங்க ரொம்ப சீக்கிரமே வரபோகுது!!

அதாவது, இரண்டே நிமிடங்களில் அனைத்து யூனிட்டுகளையும் இந்தியர்கள் வாங்கியிருக்கின்றனர். ராயல் என்பீல்டு நிறுவனம் 120 ஆண்டுகள் நிறைவுறுவதை முன்னிட்டே இந்த ஆண்டுவிழா சிறப்பு பதிப்புகளை அறிமுகப்படுத்தியது. உலக வாகன அரங்கமான இஐசிஎம்ஏ 2021-இல் அவை அறிமுகம் செய்யப்பட்டன.

120ம் ஆண்டு விழா சிறப்பு பதிப்பு வாகனங்களின் அறிமுகம் எப்போது? ரெடியா இருங்க ரொம்ப சீக்கிரமே வரபோகுது!!

120 யூனிட்டுகளில் 60 யூனிட்டுகள் கான்டினென்டல் ஜிடி650 மாடலாகவும், 60 யூனிட்டுகள் இன்டர்செப்டார் 650 மாடலும் அடங்கும். இவற்றிற்கான விற்பனையை ராயல் என்பீல்டு நிறுவனம் டிசம்பர் 6ம் தேதி அன்று மாலை 7 மணி அளவில் தொடங்கியது. இது தொடங்கப்பட்ட 120 செகண்டுகளிலேயே அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்திருக்கின்றன.

120ம் ஆண்டு விழா சிறப்பு பதிப்பு வாகனங்களின் அறிமுகம் எப்போது? ரெடியா இருங்க ரொம்ப சீக்கிரமே வரபோகுது!!

இரைக்காக காத்திருக்கும் கழுகு போல் இந்தியர்கள் இந்த பைக்கிற்காக காத்திருந்து புக் செய்திருப்பது இதன் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. இத்தகைய அதிக வேகத்தில் ஓர் வாகனம் விற்பனையாகுவது உலகளவில் இதுவே முதல் முறை என்று கூறலாம். அந்தளவிற்கு அதிக வேகத்தில் சிறப்பு இரட்டையர்கள் பைக்குகள் நாட்டில் விற்பனையாகியிருக்கின்றன. இதன் வாயிலாக ராயல் என்பீல்டு நிறுவனம் ஓர் வரலாற்று சாதனையையே படைத்துள்ளது.

120ம் ஆண்டு விழா சிறப்பு பதிப்பு வாகனங்களின் அறிமுகம் எப்போது? ரெடியா இருங்க ரொம்ப சீக்கிரமே வரபோகுது!!

இச்சிறப்பு பதிப்பு இருசக்கர வாகனங்களுக்கு நிறுவனம் மூன்று ஆண்டுகள் வாரண்டியை வழங்குகின்றது. இத்துடன், நான்காவது ஆண்டு மற்றும் ஐந்தாவது ஆண்டு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும் நிறுவனம் வழங்குகின்றது. தற்போது, இந்தியாவில் இப்பைக்குகளின் விற்பனை தொடங்கியதைப் போல் ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் விற்பனைத் தொடங்க இருக்கின்றது.

120ம் ஆண்டு விழா சிறப்பு பதிப்பு வாகனங்களின் அறிமுகம் எப்போது? ரெடியா இருங்க ரொம்ப சீக்கிரமே வரபோகுது!!

உலக அரங்கில் இப்பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரும் பொருட்டே நிறுவனம் இஐசிஎம்ஏ எனும் உலக வாகன கண்காட்சியைத் தேர்வு செய்து, அங்கு வைத்து சிறப்பு பதிப்புகளை அறிமுகப்படுத்தியது. இந்தியாவைப் போலவே ஒவ்வொரு சந்தைக்கும் 120 என யூனிட்டுகள் என ஒட்டுமொத்தமாகவே 480 யூனிட் சிறப்பு பதிப்பு 650 இரட்டையர்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

120ம் ஆண்டு விழா சிறப்பு பதிப்பு வாகனங்களின் அறிமுகம் எப்போது? ரெடியா இருங்க ரொம்ப சீக்கிரமே வரபோகுது!!

வழக்கமான இரட்டையர்களைக் காட்டிலும் இச்சிறப்பு பதிப்பு இரட்டையர்கள் புதுமையான வெளிப்புற தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன. சிறப்பு நிறம், ஸ்டிக்கர்கள், சின்னங்கள் மற்றும் கிராஃபிக்குகளால் இது அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, 120 ஆண்டுகளைக் குறிப்பிடும் வகையில் கிராஃபிக்குகள் பைக்கைச் சுற்றிலும் வழங்கப்பட்டிருக்கின்றது.

120ம் ஆண்டு விழா சிறப்பு பதிப்பு வாகனங்களின் அறிமுகம் எப்போது? ரெடியா இருங்க ரொம்ப சீக்கிரமே வரபோகுது!!

இதுபோன்ற கணிசமான சிறப்பு வசதிகளுடனேயே சிறப்பு இரட்டையர்கள் 650 பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது. சிறப்பு நிறங்களாக கருப்பு மற்றும் தங்க நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நிறத்தால் ஏற்கனவே மிகவும் கவர்ச்சியாக தென்பட்ட பைக்குகள் தற்போது மேலும் பல மடங்கு கவர்ச்சியானதாக காட்சியளிக்கின்றன.

இதெல்லாம் மிக பெரிய வரலாறுங்க... 120 செகண்டுகளில் விற்று தீர்ந்த Royal Enfield பைக்குகள்... மவுசு குறையவே இல்லிங்க!

சைலென்சர், பெட்ரோல் டேங்க், வீல் மற்றும் பாடி பேனல்கள் என பல பாகங்கள் கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 120 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் ராயல் என்பீல்டு நிறுவனம் 12 சிறப்பு பதிப்பு ஹெல்மெட்டுகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஹேண்ட் பெயிண்டட் மற்றும் ஹேண்ட் கிராஃப்டட் ஹெல்மெட் ஆகும். இவற்றையே நிறுவனம் அண்மையில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்தே சிறப்பு பதிப்புகள் பைக்குகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
English summary
Royal enfield 120 year anniversary edition 650 twin motorcycles sold out with in 120 seconds
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X