Just In
- 1 hr ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 14 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
120கிமீ வேகத்தில் சாலையில் பறந்த 650சிசி ராயல் என்பீல்டு பைக்குகள்!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதமா இருக்கு...
ராயல் என்பீல்டின் அடுத்த அறிமுக மாடல்களான கிளாசிக் 650, மீட்டியோர் 650 பைக்குகளுடன் 650 க்ரூஸர் பைக் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தற்போதைய 650 இரட்டை பைக்குகளான இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் 650 பைக்குகளுக்கு இந்தியாவை தாண்டி வெளிநாட்டு சந்தைகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் சென்னையில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் 650சிசி பைக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த வகையில் முதலாவதாக 650சிசி என்ஜின் உடன் க்ரூஸர் தோற்றத்தை கொண்ட மோட்டார்சைக்கிள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த பைக் கடந்த சில மாதங்களாக தீவிரமாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது.

கேஎக்ஸ்650 என்ற பெயரில் கவாஸாகி வல்கன் எஸ் பைக்கிற்கு போட்டியாக கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த ராயல் என்பீல்டு க்ருஸர் பைக் தற்போது மீண்டும் பொது சாலையில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ராயல் பெங்களூரியன் ராஜ் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் 650 க்ரூஸர் பைக்குடன் வேறு இரு சோதனை பைக்குகளையும் பார்க்க முடிகிறது.
அவையும் இதனைபோல் உருவத்தில் பெரியதாக உள்ளதால், அவை இரண்டும் கிளாசிக் 650 மற்றும் மீட்டியோர் 650 பைக்குகளாக இருக்க வாய்ப்புள்ளது. க்ரூஸர் மாடலுடன் ஒப்பிடும்போது கிளாசிக் 650 முற்றிலும் வித்தியாசமான ரைடிங் நிலைப்பாடு மற்றும் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதியினை கொண்டுள்ளது.

அதேபோல் பின் இருக்கை க்ரூஸரை காட்டிலும் கிளாசிக் 650 சோதனை பைக்கில் சற்று அகலமானதாகவும், பெரியதாகவும் உள்ளது. க்ரூஸர் 650 பைக்கில் இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்கள் க்ரோமினால் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மற்ற இரண்டிலும் அந்த பகுதி கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

சாலை நெடுஞ்சாலை போன்று இருப்பதால், இந்த மூன்று சோதனை பைக்குகளும் கிட்டத்தட்ட 120- 130 kmph வேகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளன. தோற்றத்தில் சில மாறுபாடுகள் இருந்தாலும், கிளாசிக் பைக் மாடல்களை போன்று க்ரூஸர் 650 பைக்கும் ராயல் என்பீல்டின் அடையாள ரெட்ரோ தோற்றத்தை தான் கொண்டுள்ளது.

இதனால் ஹெட்லேம்ப்கள் மற்றும் பின்பக்கத்தை பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடிகள் வட்ட வடிவிலும், பெட்ரோல் டேங்க் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் கண்ணீர்த்துளி வடிவிலும் உள்ளன. அதேநேரம் ஹேண்டில்பார் நன்கு அகலமாக வழங்கப்பட்டுள்ளன.

650சிசி பைக்குகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் இரு எக்ஸாஸ்ட் குழாய்களை பொருத்துகிறது. இதில் க்ரூஸர் 650 பைக்கும் தப்பவில்லை. க்ரூஸர் ரக பைக் என்பதால், ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி நன்கு முன்னோக்கி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு ஏற்றாற்போல் ஓட்டுனர் இருக்கை தாழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் சமீபத்திய மீட்டியோர் 350 பைக்கில் அறிமுகமான ட்ரிப்பர் நாவிகேஷன் சிஸ்டத்தையும் இந்த புதிய 650சிசி பைக் உள்பட இனி வெளிவரும் புதிய ராயல் என்பீல்டு பைக்குகளில் எதிர்பார்க்கலாம்.

என்ஜின் அமைப்பை பொறுத்தவரையில் தற்சமயம் இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் 650 பைக்குகளில் வழங்கப்படும் அதே 648சிசி, இரட்டை சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் தான் புதிய 650 க்ரூஸர் பைக்கிலும் வழங்கப்படும் என தெரிகிறது.

அதிகப்பட்சமாக 47 பிஎச்பி மற்றும் 52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. 2027ஆம் ஆண்டிற்குள்ளாக 27 புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்த ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளதால் புதிய 650 க்ரூஸர் பைக்கின் அறிமுகத்தை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.