பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிய தோற்றத்தை பெற்ற நம்ம சென்னை ராயல் என்பீல்டு பைக்!! வேற லெவல்ல இருக்கு...

ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக் ஒன்று கேஃப் ரேஸர் தோற்றத்திற்கு மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை பைக்கை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிய தோற்றத்தை பெற்ற நம்ம சென்னை ராயல் என்பீல்டு பைக்!! வேற லெவல்ல இருக்கு...

கஸ்டம் பாகங்களுடன் ராயல் என்பீல்டு பைக்குகள் மாடிஃபை பணிகளை மேற்கொள்வதற்கு மிகவும் ஏற்றது என்பது பலமுறை உறுதியாகியுள்ளது. இதற்கு அவற்றின் எளிமையான தோற்றத்தை மிக முக்கிய காரணமாக சொல்லலாம்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிய தோற்றத்தை பெற்ற நம்ம சென்னை ராயல் என்பீல்டு பைக்!! வேற லெவல்ல இருக்கு...

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ராயல் என்பீல்டு பைக்குகளில் பல கஸ்டமைஸ்ட் நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு தான் வருகின்றன. இந்த வகையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மோடேசைக்கிள் கேரேஜ் என்ற ஆட்டோமோட்டிவ் பட்டறையில் இண்டர்செப்டர் பைக் ஒன்று அசத்தலான கேஃப் ரேஸர் தோற்றத்திற்கு மாடிஃபை செய்யப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிய தோற்றத்தை பெற்ற நம்ம சென்னை ராயல் என்பீல்டு பைக்!! வேற லெவல்ல இருக்கு...

இவ்வாறான தோற்றத்தை பெறுவதற்காக இந்த கஸ்டமைஸ்ட் இண்டர்செப்டர் 650 பைக்கில் காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் சில அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒற்றை-துண்டு இருக்கை மற்றும் க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் உள்ளிட்டவை அடங்குகின்றன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிய தோற்றத்தை பெற்ற நம்ம சென்னை ராயல் என்பீல்டு பைக்!! வேற லெவல்ல இருக்கு...

முன்பக்கத்தில் வட்ட வடிவிலான புதிய ஹெட்லைட் ஆனது ஃபைட்டர்-ஜெட்டின் வடிவிலான கௌல் மூலமாக மூடப்பட்டுள்ளன. அதேபோல் ஸ்டாக் இண்டிகேட்டர்களுக்கு பதிலாக சிறிய எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிய தோற்றத்தை பெற்ற நம்ம சென்னை ராயல் என்பீல்டு பைக்!! வேற லெவல்ல இருக்கு...

பெட்ரோல் டேங்கில் ‘Royal Enfield' என்ற எழுத்துகள் வித்தியாசமான ஸ்டைலிலும், பைக் முழுவதும் கருப்பு & க்ரே என்ற நிறங்களிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. என்ஜின் அமைப்பில் இந்த க்ரே நிறம் சிறிது அதிக டார்க் ஆகவே வழங்கப்பட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிய தோற்றத்தை பெற்ற நம்ம சென்னை ராயல் என்பீல்டு பைக்!! வேற லெவல்ல இருக்கு...

இரு முனைகளை எக்ஸாஸ்ட் குழாய், என்ஜினின் தலைப்பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இண்டர்செப்டர் 650 பைக்கில் இரு எக்ஸாஸ்ட் குழாய்கள் பைக்கின் இரு பக்கங்களிலும் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிய தோற்றத்தை பெற்ற நம்ம சென்னை ராயல் என்பீல்டு பைக்!! வேற லெவல்ல இருக்கு...

பைக்கின் பின்பக்க வால்பகுதியின் நீளம் சற்று குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் டர்ன் இண்டிகேட்டர்களும் பின்பக்கத்தில் புதியதாக பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டாலும், அதன் பொசிஷனில் மாற்றமில்லை.

பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிய தோற்றத்தை பெற்ற நம்ம சென்னை ராயல் என்பீல்டு பைக்!! வேற லெவல்ல இருக்கு...

பைக்கில் பொருத்தப்பட்டுள்ள மற்ற சந்தைக்கு பிறகான பாகங்களாக கருப்பு நிறத்தில் பின்பக்க ஷாக் அப்சார்பர்கள், ஃபோர்க் கெய்டர்கள், வெள்ளை நிற ரிம்களுடன் கஸ்டம் வயர்-ஸ்போக்டு சக்கரங்கள், புதிய டயர்கள் உள்ளிட்டவை உள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிய தோற்றத்தை பெற்ற நம்ம சென்னை ராயல் என்பீல்டு பைக்!! வேற லெவல்ல இருக்கு...

மற்றப்படி ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கின் 648சிசி, ஏர்/ஆயில்-கூல்டு, இணையான-இரட்டை என்ஜின் அமைப்பிலோ அல்லது ப்ரேக்குகள் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் அமைப்பிலோ எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இருப்பினும் இந்த மாடிஃபை மாற்றங்களுக்கு அதிகளவிலான பணம் செலவாகி இருக்கும் என்பது உறுதி.

Most Read Articles

English summary
Royal Enfield 650 Custom Made Cafe Racer Looks Rad. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X