மீண்டும் சோதனையில் புதிய 650சிசி ராயல் என்பீல்டு பைக்- யப்பா... எக்ஸாஸ்ட் சத்தம் என்ன இப்படி இருக்கு?!

அடுத்ததாக ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகவுள்ள 650சிசி க்ரூஸர் பைக் மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் சோதனையில் புதிய 650சிசி ராயல் என்பீல்டு பைக்- யப்பா... எக்ஸாஸ்ட் சத்தம் என்ன இப்படி இருக்கு?!

கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் ராயல் என்பீல்டின் புதிய 650சிசி க்ரூஸர் பைக்கின் முதல் ஸ்பை வீடியோ வெளியானது. இதில் காற்றின் சத்தமே அதிகமாக கேட்டதால் பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தத்தை சரியாக கேட்க முடியவில்லை.

ஆனால் தற்போது மாஸ்க்டு மோட்டோ என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள புதிய ஸ்பை வீடியோவின் மூலம் இந்த புதிய 650சிசி ராயல் என்பீல்டு பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தத்தை தெளிவாக கேட்க முடிகிறது.

மீண்டும் சோதனையில் புதிய 650சிசி ராயல் என்பீல்டு பைக்- யப்பா... எக்ஸாஸ்ட் சத்தம் என்ன இப்படி இருக்கு?!

ஒரு காரில் அமர்ந்தப்படி தான் இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் எந்தவொரு காற்றின் சத்தம் நமக்கு தடையாக இல்லாமல் பைக்கின் உண்மையான சத்தத்தை அருகில் இருந்து கேட்பதுபோல் உள்ளது.

இந்த எக்ஸாஸ்ட் சத்தத்தை வைத்து பார்க்கும்போது இந்த 650சிசி க்ரூஸர் பைக்கில் தற்போதைய இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 பைக்கில் பொருத்தப்படும் அதே 270-கோண ஃபையரிங் ஆர்டர் இரட்டை-சிலிண்டர் என்ஜின்தான் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

மீண்டும் சோதனையில் புதிய 650சிசி ராயல் என்பீல்டு பைக்- யப்பா... எக்ஸாஸ்ட் சத்தம் என்ன இப்படி இருக்கு?!

இருப்பினும் மேற்கூறப்பட்ட 650சிசி இரட்டை பைக்குகளின் எக்ஸாஸ்ட் சத்ததை காட்டிலும் இதன் சத்தம் சற்று அதிகமாகவே உள்ளது. ஆரம்பத்தில் இருந்தே இந்த க்ரூஸர் பைக்கை எந்தவொரு மறைப்பாலும் மறைக்காமல் தான் ராயல் என்பீல்டு நிறுவனம் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தி வருகிறது.

மீண்டும் சோதனையில் புதிய 650சிசி ராயல் என்பீல்டு பைக்- யப்பா... எக்ஸாஸ்ட் சத்தம் என்ன இப்படி இருக்கு?!

இதன் காரணமாக பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பாகங்கள் அவ்வப்போது நமக்கு தெரிய வருகின்றன. இந்த வகையில் தற்போது கிடைத்துள்ள ஸ்பை படங்களின் மூலம் பைக்கின் முன்பக்க காற்று தடுப்பு கண்ணாடி, மீட்டியோர் 350ல் உள்ளதை போன்ற வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் மற்றும் இண்டிகேட்டர்களை பார்க்க முடிகிறது.

மீண்டும் சோதனையில் புதிய 650சிசி ராயல் என்பீல்டு பைக்- யப்பா... எக்ஸாஸ்ட் சத்தம் என்ன இப்படி இருக்கு?!

முன் மற்றும் பின்பக்க சஸ்பென்ஷன் பணியினை கவனிக்க யுஎஸ்டி ஃபோர்க்குகளும், இரட்டை ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. இரு எக்ஸாஸ்ட் குழாய்கள் மிகவும் தாழ்வாக பொருத்தப்பட்டுள்ளன.

மீண்டும் சோதனையில் புதிய 650சிசி ராயல் என்பீல்டு பைக்- யப்பா... எக்ஸாஸ்ட் சத்தம் என்ன இப்படி இருக்கு?!

பின்பக்கத்தில் கூடுதல் சவுகரியத்திற்காக இருக்கை, முதுகு தலையணை உடன் வழங்கப்பட்டுள்ளது. பின் மட்கார்டின் இறுதி முனையில் டர்ன் சிக்னல்களுடன் லைசன்ஸ் தட்டிற்கான இடம் உள்ளது. க்ரூஸர் என்பதால் இருக்கை தாழ்வாகவும், ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி சற்று முன்னோக்கியும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய 650சிசி ராயல் என்பீல்டு பைக் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருவதால் இதன் அறிமுகத்தை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
650cc Royal Enfield Cruiser Spied Again - Listen to its Exhaust Note!
Story first published: Thursday, February 11, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X