மீண்டும் விலை உயர்வை பெறுகிறது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்... புதிய விலை பட்டியல் இங்கே!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகனங்களில் ஒன்றான கிளாசிக் 350 மாடலின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மீண்டும் விலை உயர்வை பெறுகிறது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்... புதிய விலை பட்டியல் இங்கே!

உற்பத்தி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் தயாரிப்புகளின் விலையைக் கணிசமாக உயர்த்திய வண்ணம் இருக்கின்றன. இந்த காரணத்தைக் காட்டி தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மிக சமீபத்தில் அதன் குறிப்பிட்ட சில மோட்டார்சைக்கிள்களின் விலையை உயர்த்தியது.

மீண்டும் விலை உயர்வை பெறுகிறது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்... புதிய விலை பட்டியல் இங்கே!

அவ்வாறு அது விலையை உயர்த்திய இருசக்கர வாகன மாடல்களில் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளும் ஒன்று. இந்த பைக்கின் விலையையே நிறுவனம் மீண்டும் உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இப்பைக்கின் ஆரம்ப விலையே ரூ. 1,67,235 ஆக மாறியிருக்கின்றது. இதபோன்று உச்சபட்ச மாடலின் விலை ரூ. 1,92,608ஆக உயர்ந்திருக்கின்றது.

மீண்டும் விலை உயர்வை பெறுகிறது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்... புதிய விலை பட்டியல் இங்கே!

ஆகையால், குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைத்து வந்த வாகனங்கள் தற்போது சற்று காஸ்ட்லியான வாகனங்களாக மாறியிருக்கின்றன. இந்த திடீர் விலையுயர்வு இளைஞர்கள் மற்றும் ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் விலை உயர்வை பெறுகிறது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்... புதிய விலை பட்டியல் இங்கே!

கிளாசிக் 350 பைக்கின் புதிய விலைப் பட்டியலைக் கீழே காணலாம்;

1. கிளாசிக் 350 (சாம்பல் / செஷ்ட்நட் / ரெட்டிட்ச் சிவப்பு / தூய கருப்பு / மெட்டில் சில்வர்): இப்பைக் முன்னதாக ரூ. 1,61,688 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைத்து வந்தது. இப்போது இதன் விலை ரூ. 1,67,235 ஆக மாறியிருக்கின்றது.

2. கிளாசிக் 350 கருப்பு : இதன் முந்தைய விலை ரூ. 1,69,617 ஆகும். தற்போதைய விலை ரூ. 1,75,405 ஆகும். புதிதாக ரூ. 5,788 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மீண்டும் விலை உயர்வை பெறுகிறது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்... புதிய விலை பட்டியல் இங்கே!

3. கன் கிரே நிறத்தில், அலாய் விலுடன் இருக்கும் கிளாசிக் 350 பைக்கின் புதிய விலை ரூ. 1,89,360 ஆகும். முன்னதாக இப்பைக் ரூ. 1,79,809 என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வந்தது.

4. கிளாசிக் 350, ஆரஞ்சு எம்பர் மற்றும் மெட்டாலியோ சில்வர் நிறத்தைக் கொண்ட தேர்வின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் புதிய விலை ரூ. 1,89,360 ஆகும். இதன் பழைய விலை ரூ. 1,79,809 ஆகும்.

மீண்டும் விலை உயர்வை பெறுகிறது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்... புதிய விலை பட்டியல் இங்கே!

5. ஸ்டீல்த் பிளாக் மற்றும் குரோம் பிளாக் கிளாசிக் 350 பைக்கின் விலை ரூ. 1,92,608 ஆகும். இதுவே புதிய விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் முந்தைய விலை ரூ. 1,86,319 ஆகும்.

6. கன் கிரே நிறத்தில், ஸ்போக் வீலைக் கொண்டிருக்கும் கிளாசிக் 350 பைக்கின் விலை ரூ. 1,77,294 ஆகும். பழைய விலை ரூ. 1,71,453.

7. கிளாசிக் 350 சிக்னல் ஏர்போர்ன் ப்ளூ தேர்விற்கு புதிய விலையாக ரூ. 1,85,902 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பழைய விலை ரூ.1,83,164 ஆகும்.

மீண்டும் விலை உயர்வை பெறுகிறது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்... புதிய விலை பட்டியல் இங்கே!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதன் அதிகம் விற்பனையாகும் பைக்கான இந்த கிளாசிக் 350 மாடலை அப்டேட் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விரைவில் புதிய தலைமுறை 350 பைக்கை நாம் பார்க்கும் சூழல் உருவாகியிருக்கின்றது. இதற்கான பணிகளில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஏற்கனவே களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

மீண்டும் விலை உயர்வை பெறுகிறது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்... புதிய விலை பட்டியல் இங்கே!

ஆகையால், அடுத்து வரும் வருடங்களில் இப்பைக்கை நாம் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். இந்த புதிய தலைமுறை பைக்கில் தற்போதைய சூப்பர் ஹிட் மாடலான மீட்டியோர் 350-யில் இடம்பெற்றிருப்பதைப் போன்று ட்ரிப்பர் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் கருவி இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்திய புதுமுக அறிமுகமான 2021 ஹிமாலயன் பைக்கில் இந்த வசதியை நிறுவனம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Royal Enfield Again Hikes Classic 350 Bike Price; New Price List Here. Read In Tamil.
Story first published: Saturday, February 13, 2021, 10:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X