புதியதாக ராயல் என்பீல்டு பைக் வாங்கியுள்ளீர்களா? உங்கள் பைக்கிலும் பிரச்சனை இருக்கலாம்... இத தெரிஞ்சிக்கோங்க!!

ராயல் என்பீல்டு நிறுவனம் இக்னிஷன் சுருளில் ஏற்படும் குறைப்பாட்டின் காரணமாக குறிப்பிட்ட 2,36,966 மோட்டார்சைக்கிள்களை உலகம் முழுவதிலும் இருந்து திரும்ப அழைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

புதியதாக ராயல் என்பீல்டு பைக் வாங்கியுள்ளீர்களா? உங்கள் பைக்கிலும் பிரச்சனை இருக்கலாம்... இத தெரிஞ்சிக்கோங்க!!

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ராயல் என்பீல்டின் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் மீட்டியோர், கிளாசிக் மற்றும் புல்லட் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்கள் உட்படுகின்றன.

புதியதாக ராயல் என்பீல்டு பைக் வாங்கியுள்ளீர்களா? உங்கள் பைக்கிலும் பிரச்சனை இருக்கலாம்... இத தெரிஞ்சிக்கோங்க!!

ஏற்கனவே கூறியதுபோல் இவற்றின் சில மாதிரிகள் இக்னிஷன் சுருளில் ஏற்படும் குறைப்பாட்டின் காரணமாக திரும்ப அழைக்கப்படுகின்றன. இந்த 2.36 லட்ச ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்கள் இந்தியா மட்டுமின்றி இந்தோனிஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

புதியதாக ராயல் என்பீல்டு பைக் வாங்கியுள்ளீர்களா? உங்கள் பைக்கிலும் பிரச்சனை இருக்கலாம்... இத தெரிஞ்சிக்கோங்க!!

இக்னிஷன் சுருளிலில் ஏற்படும் இத்தகைய குறைப்பாட்டினால் சில மோட்டார்சைக்கிள்களில் நெருப்பு வெளிப்படுவதாகவும், சில மோட்டார்சைக்கிள்களில் மின்சார குறுகிய சுற்று கூட ஏற்படுவதாகவும், இதன் விளைவாக பைக்கின் செயல்திறன் குறைவதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக ராயல் என்பீல்டின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியதாக ராயல் என்பீல்டு பைக் வாங்கியுள்ளீர்களா? உங்கள் பைக்கிலும் பிரச்சனை இருக்கலாம்... இத தெரிஞ்சிக்கோங்க!!

வழக்கமான உள் சோதனையின் போது இத்தகைய பிரச்சனையை ராயல் என்பீல்டு நிறுவனம் கண்டறிந்துள்ளது. மேலும் இந்த பிரச்சனை வெளிப்புற விநியோகஸ்தர்களின் பாகங்களினால் தான் ஏற்பட்டுள்ளது என்பதையும் இந்த சென்னை மோட்டார்சைக்கிள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

புதியதாக ராயல் என்பீல்டு பைக் வாங்கியுள்ளீர்களா? உங்கள் பைக்கிலும் பிரச்சனை இருக்கலாம்... இத தெரிஞ்சிக்கோங்க!!

இதன் காரணமாக 2020 டிசம்பரில் இருந்து 2021 ஏப்ரல் வரையில் தயாரிக்கப்பட்ட மீட்டியோர் பைக்குகளும், 2021 ஜனவரியில் இருந்து 2021 ஏப்ரல் வரையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கிளாசிக் 350 & புல்லட் 350 பைக்குகள் மட்டுமே திரும்ப அழைக்கப்படுகின்றன.

புதியதாக ராயல் என்பீல்டு பைக் வாங்கியுள்ளீர்களா? உங்கள் பைக்கிலும் பிரச்சனை இருக்கலாம்... இத தெரிஞ்சிக்கோங்க!!

மேலும் இந்த பிரச்சனை மேற்கூறப்பட்ட மோட்டார்சைக்கிள்களில் மிகவும் அரிதாகவே ஏற்படுவதால், மேற்கூறப்பட்ட காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட பைக்குகள் அனைத்திலும் இக்னிஷன் சுருளில் பிரச்சனை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை எனவும் ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது.

புதியதாக ராயல் என்பீல்டு பைக் வாங்கியுள்ளீர்களா? உங்கள் பைக்கிலும் பிரச்சனை இருக்கலாம்... இத தெரிஞ்சிக்கோங்க!!

இதனால் வாகன அடையாள எண்ணை அடிப்படையாக கொண்டே வாடிக்கையாளர்களை ராயல் என்பீல்டு டீலர்கள் தொடர் கொள்ளவுள்ளனர். இருப்பினும் இந்த செய்தியை படிக்கும் ராயல் என்பீல்டு பைக் உரிமையாளர்கள் தங்களது பைக்குகளிலும் இந்த பிரச்சனை ஏற்படுமா என்பதை அருகில் உள்ள டீலர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும்.

புதியதாக ராயல் என்பீல்டு பைக் வாங்கியுள்ளீர்களா? உங்கள் பைக்கிலும் பிரச்சனை இருக்கலாம்... இத தெரிஞ்சிக்கோங்க!!

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 கடந்த ஆண்டு இறுதியில் தான் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கிளாசிக் 350 பைக்கின் தயாரிப்பு பணிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் தற்சமயம் ஈடுப்பட்டு வருகிறது.

Most Read Articles

English summary
Royal Enfield announced a recall of its bikes including Meteor, Classic and Bullet over a defective ignition coil.
Story first published: Wednesday, May 19, 2021, 17:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X