ராயல் என்பீல்டுக்கு என்ன ஆச்சு... இந்தியாவில் விற்பனை கடும் சரிவு... கிளாசிக் 350 பைக்தான் தூக்கி நிறுத்தணும்!

இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக் விற்பனை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டுக்கு என்ன ஆச்சு... இந்தியாவில் விற்பனை கடும் சரிவு... கிளாசிக் 350 பைக்தான் தூக்கி நிறுத்தணும்!

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிக இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில், ராயல் என்பீல்டு நிறுவனம் 7வது இடத்தை பிடித்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 39,070 இரு சக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 47,571 ஆக இருந்தது.

ராயல் என்பீல்டுக்கு என்ன ஆச்சு... இந்தியாவில் விற்பனை கடும் சரிவு... கிளாசிக் 350 பைக்தான் தூக்கி நிறுத்தணும்!

இதன் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனையில் 17.9 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு பைக் என்ற பெருமையை கிளாசிக் 350 பெற்றுள்ளது. ஆனால் கிளாசிக் 350 பைக்கின் விற்பனை மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ராயல் என்பீல்டுக்கு என்ன ஆச்சு... இந்தியாவில் விற்பனை கடும் சரிவு... கிளாசிக் 350 பைக்தான் தூக்கி நிறுத்தணும்!

நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் வெறும் 23,453 கிளாசிக் 350 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 34,791 கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 32.5 சதவீத வீழ்ச்சியாகும். ஆனால் இந்த வீழ்ச்சி நிரந்தமானது கிடையாது.

ராயல் என்பீல்டுக்கு என்ன ஆச்சு... இந்தியாவில் விற்பனை கடும் சரிவு... கிளாசிக் 350 பைக்தான் தூக்கி நிறுத்தணும்!

ராயல் என்பீல்டு நிறுவனம் கிளாசிக் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலை சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த புதிய தலைமுறை மாடலின் வருகைக்காக வாடிக்கையாளர்கள் பலர் காத்து கொண்டிருந்தனர். எனவே வரும் மாதங்களில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டுக்கு என்ன ஆச்சு... இந்தியாவில் விற்பனை கடும் சரிவு... கிளாசிக் 350 பைக்தான் தூக்கி நிறுத்தணும்!

இந்த பட்டியலில் மீட்டியோர் 350 இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 6,381 மீட்டியோர் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. புத்தம் புதிய மீட்டியோர் 350 பைக் இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ராயல் என்பீல்டுக்கு என்ன ஆச்சு... இந்தியாவில் விற்பனை கடும் சரிவு... கிளாசிக் 350 பைக்தான் தூக்கி நிறுத்தணும்!

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை புல்லட் 350 பிடித்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7,257 புல்லட் 350 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 3,669 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 49.4 சதவீத வீழ்ச்சியை புல்லட் 350 பெற்றுள்ளது.

ராயல் என்பீல்டுக்கு என்ன ஆச்சு... இந்தியாவில் விற்பனை கடும் சரிவு... கிளாசிக் 350 பைக்தான் தூக்கி நிறுத்தணும்!

இந்த பட்டியலில் 4வது இடத்தை ஹிமாலயன் பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 530 ஆக இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 2,770 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 422.6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து ராயல் என்பீல்டு ஹிமாலயன் அசத்தியுள்ளது.

ராயல் என்பீல்டுக்கு என்ன ஆச்சு... இந்தியாவில் விற்பனை கடும் சரிவு... கிளாசிக் 350 பைக்தான் தூக்கி நிறுத்தணும்!

இந்த பட்டியலில் 5வது இடத்தை எலெக்ட்ரா 350 பிடித்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு 4,129 எலெக்ட்ரா 350 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 1,963 ஆக சரிந்துள்ளது. இது 52.4 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் 6வது மற்றும் கடைசி இடத்தை ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பிடித்துள்ளன.

ராயல் என்பீல்டுக்கு என்ன ஆச்சு... இந்தியாவில் விற்பனை கடும் சரிவு... கிளாசிக் 350 பைக்தான் தூக்கி நிறுத்தணும்!

இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகள்தான், 650 ட்வின்ஸ் என குறிப்பிடப்படுகின்றன. இந்த இரண்டு பைக்குகளும் ஒட்டுமொத்தமாக நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 834 என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 864 ஆக இருந்தது.

ராயல் என்பீல்டுக்கு என்ன ஆச்சு... இந்தியாவில் விற்பனை கடும் சரிவு... கிளாசிக் 350 பைக்தான் தூக்கி நிறுத்தணும்!

இதன் மூலம் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகளின் விற்பனை 3.4 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் வீழ்ச்சியை சந்திருந்தாலும், இந்த சரிவு தற்காலிகமானதாகவே பார்க்கப்படுகிறது. வரும் மாதங்களில் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை வளர்ச்சி பாதைக்கு திரும்பலாம்.

ராயல் என்பீல்டுக்கு என்ன ஆச்சு... இந்தியாவில் விற்பனை கடும் சரிவு... கிளாசிக் 350 பைக்தான் தூக்கி நிறுத்தணும்!

இதற்கு எதிர்வரும் பண்டிகை காலம் முக்கியமான காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்குகளை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளையும் ராயல் என்பீல்டு நிறுவனம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாகவும் வரும் மாதங்களில் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Most Read Articles

English summary
Royal enfield august 2021 sales report classic 350 leads chart
Story first published: Tuesday, September 21, 2021, 23:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X