120 ஆண்டுகள் நிறைவு: ஸ்பெஷல் பதிப்பு பைக்குகள் பற்றிய டீசரை வெளியிடுகிறது Royal Enfield!

ராயல் என்பீல்டு (Royal Enfield0 நிறுவனம், அதன் 120 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு உருவாகி வரும் சிறப்பு பதிப்பு இருசக்கர வாகனங்களின் டீசர் படங்களை இன்று வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

120 ஆண்டுகள் நிறைவு: ஸ்பெஷல் பதிப்பு பைக்குகள் பற்றிய டீசரை வெளியிடுகிறது Royal Enfield!

ராயல் என்பீல்டு நிறுவனம் சிறப்பு பதிப்பு இருசக்கர வாகனங்கள் சிலவற்றை மிக விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் விரைவில் அறிமுகமாக இருக்கும் இருசக்கர வாகனங்கள் பற்றிய டீசர் படங்களை நிறுவனம் இன்று இஐசிஎம்ஏ 2021 (EICMA 2021) கண்காட்சியில் வெளியிடுகின்றது.

120 ஆண்டுகள் நிறைவு: ஸ்பெஷல் பதிப்பு பைக்குகள் பற்றிய டீசரை வெளியிடுகிறது Royal Enfield!

ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் வரவிருக்கும் இருசக்கர வாகனங்கள் பற்றிய தகவலை ரகசியமாக வைத்திருக்க திட்டமிட்டது. இதனடிப்படையில் வாகனங்கள் பற்றிய சிறு தகவல்கள்கூட கசியாத வண்ணம் நிறுவனம் பார்த்து வந்திருக்கின்றது. ஆனால், இவற்றிற்கு இன்றைய தினம் முடிவிற்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆம், புதிய சிறப்பு பதிப்புகள் பற்றிய பல்வேறு தகவல்களை நிறுவனம் வெளியிட இருக்கின்றது.

120 ஆண்டுகள் நிறைவு: ஸ்பெஷல் பதிப்பு பைக்குகள் பற்றிய டீசரை வெளியிடுகிறது Royal Enfield!

சென்னையை தலைமையமாகக் கொண்டு இயங்கி வரும் ராயல் என்பீல்டு நிறுவனம் 1901ம் ஆண்டில் இருந்து இவ்வுலகில் செயல்பட்டு வருகின்றது. தற்போது 120 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வருகின்றது. ஆம், இந்நிறுவனம் தற்போது சராசரியாக 120 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கின்றது. இந்த வரலாற்று சிறப்பு நிகழ்வை முன்னிட்டே நிறுவனம் புதிய சிறப்பு பதிப்பு இருசக்கர வாகனங்கள் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன.

120 ஆண்டுகள் நிறைவு: ஸ்பெஷல் பதிப்பு பைக்குகள் பற்றிய டீசரை வெளியிடுகிறது Royal Enfield!

ராயல் என்பீல்டு, தற்போது விற்பனையில் இருக்கும் இருசக்கர வாகன மாடல்களையே சிறப்பு தோற்றத்தில் உருவாக்கி இருக்கின்றது. இவற்றையே மிக விரைவில் நிறுவனம் விற்பனைக்கும் கொண்டு வர இருக்கின்றது. சிறப்பு சின்னம், சிறப்பு நிறம் மற்றும் சிறப்பு கிராஃப்பிக்குகள் என புதிய அலங்காரத்தால் இருசக்கர வாகனம் மெருகேற்றப்பட்டிருக்கின்றன.

120 ஆண்டுகள் நிறைவு: ஸ்பெஷல் பதிப்பு பைக்குகள் பற்றிய டீசரை வெளியிடுகிறது Royal Enfield!

இந்த மெருகேற்றப்பட்ட இருசக்கர வாகனங்களை காட்சிப்படுத்தவே நிறுவனம் உலக அரங்கான இஐசிஎம்ஏ-வை நிறுவனம் தேர்வு செய்திருக்கின்றது. இந்த முன்னெடுப்பை வைத்து பார்க்கையில் நிறுவனம் இந்திய சந்தையில் மட்டுமின்றி உலக சந்தைகள் சிலவற்றிலும் புதிய சிறப்பு பதிப்பு வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், இது உலக தரம் வாய்ந்த தயாரிப்பாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் இருக்கின்றது.

120 ஆண்டுகள் நிறைவு: ஸ்பெஷல் பதிப்பு பைக்குகள் பற்றிய டீசரை வெளியிடுகிறது Royal Enfield!

புதிய சிறப்பு பதிப்பு வாகனங்கள் மட்டுமின்றி நிறுவனம் மிக விரைவில் புதுமுக இருசக்கர வாகன மாடல்களையும் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவை அடுத்த சில மாதங்களுக்குள் விற்பனைக்கு வர இருக்கின்றன. அதாவது, 2022ம் ஆண்டின் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் இந்திய இருசக்கர வாகன சந்தையை அலங்கரிக்க இருக்கின்றன.

120 ஆண்டுகள் நிறைவு: ஸ்பெஷல் பதிப்பு பைக்குகள் பற்றிய டீசரை வெளியிடுகிறது Royal Enfield!

நிறுவனம், ஹண்டர் 350 (Hunter 350), ஹிமாலயன் (Himalayan), ஷாட்கன் (Shotgun 650) / கிளாசிக் 350 (Classic 650) ஆகிய இருசக்கர வாகன மாடல்களையே மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இவை அனைத்தும் இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இருசக்கர வாகன மாடல்களாக இருக்கின்றன. குறிப்பாக, நிறுவனத்தின் ஹிமாலயன், இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

120 ஆண்டுகள் நிறைவு: ஸ்பெஷல் பதிப்பு பைக்குகள் பற்றிய டீசரை வெளியிடுகிறது Royal Enfield!

ஏனெனில் நிறுவனம் இந்த அட்வென்சர் இருசக்கர வாகனத்தை சாலை பயன்பாட்டை மட்டும் கருத்தாகக் கொண்ட வாகனமாக உருவாக்கி வருகின்றது. ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் அட்வென்சர் பயன்பாட்டைக் கொண்ட ஹிமாலயனுடன் ஒப்பிடுகையில் இது தனிச் சிறப்புகள் கொண்ட ஹிமாலயனாக காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

120 ஆண்டுகள் நிறைவு: ஸ்பெஷல் பதிப்பு பைக்குகள் பற்றிய டீசரை வெளியிடுகிறது Royal Enfield!

அண்மையில் ராயல் என்பீல்டு நிறுவனம் 12 தசாப்தங்களை (12 பத்தாண்டுகளை) நிறைவு செய்த வரலாற்று நிறைவை முன்னிட்டு புதிய சிறப்பு தோற்றம் கொண்ட ஹெல்மெட்டுகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 12 தசாப்தங்களைக் குறிக்கும் வகையில் நிறுவனம் 12 புதிய ஹெல்மெட்டுகளைக் களமிறக்கியது. ஹேண்ட் பெயிண்டட் மற்றும் ஹேண்ட் கிராஃப்டடாக இந்த ஹெல்மெட்டுகளை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

120 ஆண்டுகள் நிறைவு: ஸ்பெஷல் பதிப்பு பைக்குகள் பற்றிய டீசரை வெளியிடுகிறது Royal Enfield!

ஹெல்மெட்டுகள் அனைத்தும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளம் மற்றும் விற்பனையகங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். அனைத்து ஹெல்மெட்டுகளும் பிரீமியம் தர தலைக்கவசங்களாகும். லெதர் மற்றும் சன் விஸர்களைக் அது கொண்டிருக்கின்றன. மேலும், ஐஎஸ்ஐ, டிஓடி மற்றும் இசிஇ உள்ளிட்ட சான்றைப் பெற்றதாகவும் இந்த ஹெல்மெட்டுகள் காட்சியளிக்கின்றன. பாதுகாப்பான மற்றும் வாகன ஓட்டிகளல் பயன்படுத்த உகந்தவை இந்த ஹெல்மெட்டுகள் என்பது இச்சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

Most Read Articles
English summary
Royal enfield bikes are set to break cover at the eicma today
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X