ஃபாரஸ்ட் க்ரீன் வண்ணத்தில் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஃபாரஸ்ட் க்ரீன் வண்ணத்தில் ராயல் என்பீல்டு புல்லட் 350 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபாரஸ்ட் க்ரீன் வண்ணத்தில் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 மோட்டார்சைக்கிளை, ஃபாரஸ்ட் க்ரீன் (Forest Green) என்ற புதிய வண்ணத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350 ஃபாரஸ்ட் க்ரீன் மாடலுக்கு, 1.33 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஃபாரஸ்ட் க்ரீன் வண்ணத்தில் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

புல்லட் 350 பைக்கின் ஸ்டாண்டர்டு வேரியண்ட்டில் மட்டுமே இந்த புதிய வண்ண தேர்வு கிடைக்கும். பிளாக், ஓனிக்ஸ் பிளாக் மற்றும் புல்லட் சில்வர் ஆகிய வண்ண தேர்வு மாடல்களுடன், இந்த புதிய ஃபாரஸ்ட் க்ரீன் வண்ண தேர்வு மாடலும் விற்பனை செய்யப்படும். ஆனால் புல்லட் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்ட் இந்த புதிய வண்ண தேர்வை பெறவில்லை.

ஃபாரஸ்ட் க்ரீன் வண்ணத்தில் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

முன்பை போலவே சிகப்பு, நீலம் மற்றும் கருப்பு ஆகிய மூன்று வண்ண தேர்வுகளுடனே இந்த வேரியண்ட் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். ஸ்டாண்டர்டு ராயல் என்பீல்டு புல்லட் 350 மோட்டார்சைக்கிளில், ஃபாரஸ்ட் க்ரீன் வண்ண தேர்வு சேர்க்கப்பட்டிருப்பதை தவிர வேறு எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை.

ஃபாரஸ்ட் க்ரீன் வண்ணத்தில் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக புல்லட் 350 உள்ளது. ராயல் என்பீல்டு புல்லட் 350 மோட்டார்சைக்கிள், கடைசியாக கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான இன்ஜினை பெற்றபோது அப்டேட் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபாரஸ்ட் க்ரீன் வண்ணத்தில் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ராயல் என்பீல்டு புல்லட் 350 மோட்டார்சைக்கிளில், 346 சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 19.1 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் ராயல் என்பீல்டு நிறுவனம் 5 ஸ்பீடு கியர் பாக்ஸை ஸ்டாண்டர்டாக வழங்குகிறது.

ஃபாரஸ்ட் க்ரீன் வண்ணத்தில் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ராயல் என்பீல்டு புல்லட் 350 மோட்டார்சைக்கிளின் முன் பகுதியில் 280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 153 மிமீ டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதியும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளின் இரண்டு பக்கங்களிலும் 19 இன்ச் டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஃபாரஸ்ட் க்ரீன் வண்ணத்தில் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ராயல் என்பீல்டு புல்லட் 350 மோட்டார்சைக்கிளின் மொத்த எடை 186 கிலோ. இந்த பைக் 13.5 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்க்கை பெற்றுள்ளது. இந்திய சந்தையில் தற்போது தனது மோட்டார்சைக்கிள்களை அப்டேட் செய்யும் பணிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஃபாரஸ்ட் க்ரீன் வண்ணத்தில் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஏற்கனவே தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிளுக்கு மாற்றாக மீட்டியோர் 350 மாடலை ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதை தொடர்ந்து இன்னும் பல்வேறு புதிய மோட்டார்சைக்கிள்களையும் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

Most Read Articles
English summary
Royal Enfield Bullet 350 Launched In Forest Green Colour Scheme - Here Are All The Details. Read in Tamil
Story first published: Saturday, January 30, 2021, 20:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X