க்ரூஸர் பைக்காக மாற்றப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350!! எவ்ளோ செலவு ஆனதுனு தெரியலயே!!

ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து தற்சமயம் அதிகளவில் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள்களுள் கிளாசிக் 350 முதன்மையானது. அந்த அளவிற்கு கிளாசிக் 350 பைக்கை இந்திய வாடிக்கையாளர்கள் விரும்பி தேர்வு செய்கின்றனர்.

க்ரூஸர் பைக்காக மாற்றப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350!! எவ்ளோ செலவு ஆனதுனு தெரியலயே!!

அதன் தோற்றத்திற்காக மட்டுமின்றி மாடிஃபிகேஷன் செய்வதும் கிளாசிக் 350 பைக்கில் எளிதானது. இந்த வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த மாடிஃபிகேஷன் நிறுவனத்தால் மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

க்ரூஸர் பைக்காக மாற்றப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350!! எவ்ளோ செலவு ஆனதுனு தெரியலயே!!

இந்த மாடிஃபிகேஷன் நிறுவனத்தின் பெயர் எமோர் கஸ்டம்ஸ் ஆகும். இந்த மாடிஃபிகேஷன் மாற்றங்களினால் க்ரூஸர் ரக தோற்றத்தை பெற்றுள்ள இந்த கிளாசிக் 350 பைக்கிற்கு வடேர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

க்ரூஸர் பைக்காக மாற்றப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350!! எவ்ளோ செலவு ஆனதுனு தெரியலயே!!

புதிய பாடி பேனல்களினால் இந்த பைக் இத்தகைய தோற்றத்தை பெற்றுள்ளது. பைக்கின் தோற்றத்திற்கு ஏற்ப பைக்கில் பொருத்தப்பட்டுள்ள ஹேண்டில்பாரின் வடிவமும் புதிய ஒன்றால் மாற்றப்பட்டுள்ளது.

க்ரூஸர் பைக்காக மாற்றப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350!! எவ்ளோ செலவு ஆனதுனு தெரியலயே!!

சற்று உயரமாக வழங்கப்பட்டுள்ள பெட்ரோல் டேங்க் இந்த மாடிஃபை பைக்கிற்கு க்ரூஸர் தோற்றத்தை வழங்குகிறது. இந்த பெட்ரோல் டேங்கிற்கு அடுத்தாக இரு துண்டுகளாக இருக்கைகள், அவற்றுடன் தலையணை உள்ளிட்டவை உள்ளன.

க்ரூஸர் பைக்காக மாற்றப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350!! எவ்ளோ செலவு ஆனதுனு தெரியலயே!!

இருக்கைகள் மட்டுமின்றி என்ஜின் அமைப்பும் கருப்பு நிறத்தில் உள்ளது. ஓட்டுனரின் கால்களை பாதுகாக்கும் விதத்தில் பெரிய அளவில் பாதுகாப்பான் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கிளாசிக் 350 மாடிஃபை பைக்கின் ஸ்போக் சக்கரங்களில் நன்கு அகலமான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

க்ரூஸர் பைக்காக மாற்றப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350!! எவ்ளோ செலவு ஆனதுனு தெரியலயே!!

என்ஜின் உடன் பைக்கின் ஃபெண்டர்களும் கருப்பு நிறத்தில் இருக்க, முன்பக்க சஸ்பென்ஷன் சில்வர் நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் இந்த பைக்கில் கவனிக்கத்தக்க அம்சங்கள் என்று பார்த்தால், வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லேம்ப்களை சொல்லலாம்.

க்ரூஸர் பைக்காக மாற்றப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350!! எவ்ளோ செலவு ஆனதுனு தெரியலயே!!

ஸ்டாக் இண்டிகேட்டர்களுக்கு மாற்றாக புல்லட் இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றம் இந்த பைக்கிற்கு கூடுதல் முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகிறது. இவற்றிற்கு ஏற்ற விதத்தில் கஸ்டம் எக்ஸாஸ்ட் குழாய் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது.

க்ரூஸர் பைக்காக மாற்றப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350!! எவ்ளோ செலவு ஆனதுனு தெரியலயே!!

மற்றப்படி என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. கிளாசிக் 350 பைக்கில் 349சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Mod Job: Royal Enfield Classic 350 turns into a gorgeous laid-back cruiser.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X