நான்கு சக்கர ஏடிவி வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... இதற்கான செலவு எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க?..

இருசக்கர வாகனமான ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை நான்கு சக்கர ஏடிவி ரக வாகனமாக இந்திய இளைஞர்கள் மாற்றியமைத்திருக்கின்றனர். பைக்கின் இந்த மாற்றம்குறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

நான்கு சக்கர ஏடிவி வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... இதற்கான செலவு எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க?..

அனைத்து விதமான சாலைகளிலும் பயணிக்கும் திறன் கொண்ட வாகனம் ஏடிவி (All Terrain Vehicle). பைக் போன்று காட்சியளிக்கும் இந்த வாகனத்தில் நான்கு சக்கரங்கள் இடம் பெற்றிருக்கும். பொதுவாக, இந்த வாகனங்களை கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார்களே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

நான்கு சக்கர ஏடிவி வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... இதற்கான செலவு எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க?..

இதுமட்டுமின்றி கரடு, முரடான காடு மற்றும் மலைப் பகுதியிலும் இந்த ரக வாகனத்தின் பயன்பாடு அதிகளவில் தென்படுகின்றது. இதுதவிர சாகச விளையாட்டுகளுக்காகவும் இவ்வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தகைய ஓர் வாகனமாகவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரபல பைக் மாடல்களில் ஒன்று மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது.

நான்கு சக்கர ஏடிவி வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... இதற்கான செலவு எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க?..

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கே ஏடிவி ரக வாகனமாக மாற்றப்பட்டிருக்கின்றது. இதனை குன்வர் கஸ்டம்ஸ் எனும் நிறுவனம் மாற்றியமைத்திருப்பதாக தகவல்கள் தெரவிக்கின்றன. ராயல் என்பீல்டு ஹிமாலயன் ஓர் மலிவு விலை அட்வென்சர் ரக இருசக்கர வாகனமாகும்.

நான்கு சக்கர ஏடிவி வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... இதற்கான செலவு எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க?..

இதன் அதிகமான உயரம் மற்றும் அதி-திறன் கொண்ட எஞ்ஜின் உள்ளிட்டவை எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளித்து விடும். குறிப்பாக, ஆஃப்-ரோடை மிக அசால்டாக இப்பைக் சமாளிக்கும். எனவேதான், நீண்ட மற்றும் அட்வென்சர் பயண பிரியர்களின் முதல் நிலை தேர்வாக ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் இருக்கின்றது.

நான்கு சக்கர ஏடிவி வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... இதற்கான செலவு எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க?..

இந்த மாதிரியான சிறப்பு வசதிகளை இந்த பைக் பெற்றிருக்கின்ற காரணத்தினாலயே நான்கு சக்கரங்கள் கொண்ட ஏடிவி வாகனமாக இதனை குன்வர் கஸ்டம்ஸ் நிறுவனம் மாற்றியமைத்திருக்கின்றது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் மையமாகக் கொண்டு இந்நிறுவனம் இயங்கி வருகின்றது.

நான்கு சக்கர ஏடிவி வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... இதற்கான செலவு எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க?..

ஹிமாலயன் பைக்கிற்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குவதற்காக ஒரு சில உடற்கூறுகளை வேறுசில பைக்குகளில் இருந்தும், ஃப்ரேம் போன்ற பிற முக்கிய கூறுகளை நிறுவனமே கஸ்டமைஸ் செய்து பயன்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, இவ்வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாடி பேனல், ஹேண்டில் பார் இருக்கை உள்ளிட்டவை வெவ்வேறு வாகனங்களுடையதாகும்.

நான்கு சக்கர ஏடிவி வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... இதற்கான செலவு எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க?..

இதன் ஹேண்டில் பார் ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு பைக்குடையதாகும். தொடர்ந்து, ஏடிவி வாகனங்களில் பயன்படுத்தக்கூடிய பேனல் முகப்பு மற்றும் பின் இரு பக்கவாட்டு பகுதிகளிலும் பொருத்தப்பட்டிருக்கின்றது. மேலும், முன் பக்கத்தில் லக்கேஜ்களை எடுத்துச் செல்ல ஏதுவாக உலோகத்தால் வடிவமைக்கப்பட்ட கேரியர் பொருத்தப்பட்டிருக்கின்றது.

நான்கு சக்கர ஏடிவி வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... இதற்கான செலவு எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க?..

இதையடுத்து, வாகனத்தின் சிறந்த சஸ்பென்ஷனுக்கா நான்கு வீல்களிலும் ஷாக் அப்சார்பர், டிஸ்க் பிரேக் (முன் பக்கத்தின் இரு வீல்களிலும் பொருத்தப்பட்டுள்ளன), அனைத்து சாலைகளையும் சமாளிக்கக் கூடிய ஷோங்க்யா டயர், மிஷின் அலாய் வீல் மற்ரும் எல்இடி மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

நான்கு சக்கர ஏடிவி வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... இதற்கான செலவு எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க?..

இதுமாதிரியான பிரத்யேக பாகங்களைக் கொண்ட ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் ஏடிவி வாகனமாக மாற்றப்பட்டிருக்கின்றது. இத்துடன், நான்கு முதல் ஐந்து பேர் வரை அமர்ந்து செல்லும் வகையில் கூடுதல் இருக்கைகள் இவ்வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

நான்கு சக்கர ஏடிவி வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... இதற்கான செலவு எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க?..

இந்த ஒட்டுமொத்த உருமாற்றத்திற்கும் ரூ. 3.5 லட்சம் வரை செலவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. தொடர்ந்து, இதனை முழுமையான ஏடிவி வாகனமாக மாற்ற 3 மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் மாடிஃபிகேஷன் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

Image Courtesy: Vampvideo

இந்தியாவில் இதுபோன்று வாகனங்களை மாடிஃபை செய்வது குற்றமாகும். இந்திய மோட்டார் வாகன சட்டம் இதற்கு அனுமதியளிக்கவில்லை. இருப்பினும், இந்த வாகனத்தை நம்மால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை என்பது ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

Most Read Articles
English summary
Royal Enfield Himalayan Converted Into ATV Vehicle. Read In Tamil.
Story first published: Wednesday, March 10, 2021, 12:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X