Royal Enfield Himalayan Vs புதிய Honda CB200X: உங்களது தேர்வு எது?

இந்தியாவில் அட்வென்ச்சர் பைக்குகளுக்கான சந்தை கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் விரிவடைந்து வருகிறது. இதனாலேயே இந்த பிரிவில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

Royal Enfield Himalayan Vs புதிய Honda CB200X: உங்களது தேர்வு எது?

இந்த வகையில் Honda Motorcycle and Scooter India நிறுவனம் சமீபத்தில் அதன் Hornet 2.0 பைக்கின் அடிப்படையிலான அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை CB200X என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

Royal Enfield Himalayan Vs புதிய Honda CB200X: உங்களது தேர்வு எது?

Hondaவின் இந்த அட்வென்ச்சர் பைக்கிற்கு எதிர்பார்த்ததை காட்டிலும் சிறப்பான வரவேற்பு வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்து வருகிறது. இதனால் CB200X பைக்கின் விற்பனை நல்லப்படியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Royal Enfield Himalayan Vs புதிய Honda CB200X: உங்களது தேர்வு எது?

தற்போதைக்கு அட்வென்ச்சர் பிரிவில் மிகுந்த வரவேற்பிற்கு மத்தியில் விற்பனையாகி கொண்டிருக்கும் அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் என்று பார்த்தால், அதில் ஹிமாலயன் முக்கியமானதாக உள்ளது. ஆனால் உண்மையில் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்கள் என்பதை தாண்டி CB200X-க்கும், ராயல் என்பீல்டின் ஹிமாலயனும் இடையே நேரடியாக எந்தவொரு போட்டியும் இல்லை.

Royal Enfield Himalayan Vs புதிய Honda CB200X: உங்களது தேர்வு எது?

இருப்பினும் இந்தியாவில் தற்சமயம் விரல்விட்டு எண்ணிவிடும் அளவிற்கே அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்கள் உள்ளதால், ஹிமாலயனை வாங்க திட்டமிட்டு வருபவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ CB200X மாற்று மாடலாக விளங்கலாம்.

Royal Enfield Himalayan Vs புதிய Honda CB200X: உங்களது தேர்வு எது?

அதாவது ஹிமாலயனை வாங்க தயாராகி வருபவர்களுக்கு, CB200X பைக்கும் நன்றாக தானே இருக்கிறது என்ற எண்ணம் அதன் அறிமுகத்தில் இருந்து ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறான குழப்பத்தில் தான் நீங்கள் உள்ளீர்களா? கவலை வேண்டாம், இவை இரண்டை பற்றிய முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். எது சிறந்தது? எது நமக்கு ஏற்றது? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Royal Enfield Himalayan Vs புதிய Honda CB200X: உங்களது தேர்வு எது?

மற்ற பிரீமியம் ரக மோட்டார்சைக்கிள் பிராண்ட்களுடன் ஒப்பிடுகையில், Royal Enfield பைக்குகள் மலிவானவை என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். இருப்பினும் இந்த சென்னை நிறுவனத்தின் ஒரே ஒரு அட்வென்ச்சர் பைக்கான ஹிமாலயன் சற்று விலைமிக்கதாக உள்ளது.

Royal Enfield Himalayan Vs புதிய Honda CB200X: உங்களது தேர்வு எது?

ஆதலால் பட்ஜெட் போட்டு மோட்டார்சைக்கிளை வாங்குகிறீர்கள் என்றால், Hondaவின் புதிய CB200X பைக்கை தேர்வு செய்யுங்கள். ரூ.1.44 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த அட்வென்ச்சர் பைக் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் Himalayan-இன் விலையும் இதனை காட்டிலும் பல லட்சங்கள் அதிகம் இல்லை, ஆனால் ரூ.2 லட்சத்தை கடந்துள்ளது.

Royal Enfield Himalayan Vs புதிய Honda CB200X: உங்களது தேர்வு எது?

Royal Enfield Himalayan-இன் எக்ஸ்-ஷோரும் விலை தற்சமயம் ரூ.2.02 லட்சமாக உள்ளது. ரூ.1.44 லட்சம் என்பது தன்னை பொறுத்தவரையில் அதிகம் என்கிறீர்களா? அப்போ இந்தியாவின் மலிவான அட்வென்ச்சர் பைக்கான Hero XPulse200 உங்களுக்கு சரியானதாக இருக்கும். ஏனெனில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 லட்சத்திற்கும் சற்று அதிகமானதாகவே உள்ளது.

Royal Enfield Himalayan Vs புதிய Honda CB200X: உங்களது தேர்வு எது?

XPulse200-க்கும், Himalayan மாடலுக்கும் இடைப்பட்ட நீண்ட இடைவெளியை பயன்படுத்தி கொள்ளும் விதமாகவே Honda நிறுவனம் CB200X பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. Royal Enfield Himalayan-இன் முக்கிய சிறப்பம்சமே அதன் பெரிய அளவிலான ஆற்றல்மிக்க என்ஜின் தான்.

Royal Enfield Himalayan Vs புதிய Honda CB200X: உங்களது தேர்வு எது?

Himalayan-இல் பொருத்தப்படும் 411சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 24 பிஎஸ் மற்றும் 32 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் Honda Motorcycle-இன் அட்வென்ச்சர் பைக்கை ஒப்பிட்டு பார்த்தோமேயானால், புதிய CB200X பைக்கில் 184சிசி PGM-Fuel Injected என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

Royal Enfield Himalayan Vs புதிய Honda CB200X: உங்களது தேர்வு எது?

Hornet 2.0 பைக்கிலும் வழங்கப்படும் இந்த என்ஜின் 8500 ஆர்பிஎம்-இல் 17.2 பிஎச்பி மற்றும் 6000 ஆர்பிஎம்-இல் 16.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. செயல்திறன்மிக்க என்ஜினே Himalayan-ஐ இத்தகைய 'பட்ஜெட்' அட்வென்ச்சர் பைக்குகளில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது.

Royal Enfield Himalayan Vs புதிய Honda CB200X: உங்களது தேர்வு எது?

உடல் அமைப்பை பொறுத்தவரையில் Himalayan (அரை-இரட்டை பிளவு தொட்டில் சட்டகத்தில் உருவாக்கப்படுகிறது), CB200X (டைமண்ட் வகையை இரும்பு ஃப்ரேம்) இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும். இவை இரண்டும் தங்களுக்கென தனித்தனியான அடையாளங்களுடன் வடிவமைக்கப்படுகின்றன.

Royal Enfield Himalayan Vs புதிய Honda CB200X: உங்களது தேர்வு எது?

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், Honda CB200X முழு டிஜிட்டல் லிக்யூடு க்ரிஸ்டல் மீட்டரை ஐந்து விதமான Brightness adjustment நிலைகளுடன் பெற்றுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் அப்டேட் செய்யப்பட்ட Royal Enfield Himalayan புதியதாக ட்ரிப்பர் நாவிகேஷன் வசதியினை பெற்றுள்ளது.

Most Read Articles
English summary
Royal Enfield Himalayan Vs Honda CB200X, What’s The Difference?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X