ஹோண்டா சிபி350 பைக்குகளை சமாளிக்குமா புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் பைக்? விலை எந்தளவிற்கு இருக்கும்?

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த சில மாதங்களாக அதன் புதிய அறிமுகமான ஹண்டர் 350 பைக்கை சோதனைகளில் உட்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்த பைக் தோற்றத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்த ஒரு புரிதல் இதுவரையில் நமக்கு கிடைத்துள்ளது.

ஹோண்டா சிபி350 பைக்குகளை சமாளிக்குமா புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் பைக்? விலை எந்தளவிற்கு இருக்கும்?

ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்வின் போன்ற ரோட்ஸ்டர் பைக்குகளின் தோற்றத்தை கிட்டத்தட்ட இந்த புதிய ராயல் என்பீல்டு பைக் ஒத்து காணப்படுகிறது. ஆனால் விற்பனையில் போட்டி இந்த ட்ரையம்ப் பைக்குடன் இருக்காது. ஹோண்டாவின் சமீபத்திய அறிமுகங்களான சிபி350 மற்றும் சிபி350 ஆர்எஸ் பைக்குகள் தான் ஹண்டர் 350 பைகிற்கு போட்டியாக விளங்கும்.

ஹோண்டா சிபி350 பைக்குகளை சமாளிக்குமா புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் பைக்? விலை எந்தளவிற்கு இருக்கும்?

ஏனெனில் இந்த ரோட்ஸ்டர் பைக்கின் விலை மீட்டியோர் 350 மற்றும் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்குகளை காட்டிலும் சற்று அதிகமாக, மேற்கூறப்பட்ட ஹோண்டா பைக்குகளுக்கு இணையாக நிர்ணயிக்கப்படவே வாய்ப்புள்ளது.

ஹோண்டா சிபி350 பைக்குகளை சமாளிக்குமா புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் பைக்? விலை எந்தளவிற்கு இருக்கும்?

அதுமட்டுமில்லாமல் ஹோண்டா சிபி350 பைக்குகளுக்கு மேலும் போட்டி தரவே ராயல் என்பீல்டு நிறுவனம் விரும்பும். மீட்டியோர் 350 மற்றும் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்குகளுக்கு அடுத்து பிராண்டின் புதிய ஜே ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படும் மூன்றாவது பைக் ஹண்டர் 350 ஆகும்.

ஹோண்டா சிபி350 பைக்குகளை சமாளிக்குமா புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் பைக்? விலை எந்தளவிற்கு இருக்கும்?

இந்த பைக்கின் இந்திய அறிமுகம் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ எதிர்பார்க்கப்படுகிறது. மீட்டியோர் 350 மற்றும் புதிய கிளாசிக் 350 பைக்குகளை காட்டிலும் ஹண்டர் 350 பைக்கின் காற்று இயக்கவியல் பண்பு கூடுதல் ஸ்போர்டியானதாக இருக்கும்.

ஹோண்டா சிபி350 பைக்குகளை சமாளிக்குமா புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் பைக்? விலை எந்தளவிற்கு இருக்கும்?

இதற்காகவே அகலமான ஹேண்டில்பார் மற்றும் சற்று பின்னோக்கி நகர்த்தப்பட்ட ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி உள்ளிட்டவை ஹண்டர் 350 பைக்கில் கொண்டுவரப்படவுள்ளன. இதன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளட்டரில் மீட்டியோர் 350 பைக்கை போன்று கூகுள் மூலமாக இயங்கும் ட்ரிப்பர் நாவிகேஷன் சிஸ்டத்திற்கென தனியாக வட்ட வடிவிலான பேட் வழங்கப்படவுள்ளது.

ஹோண்டா சிபி350 பைக்குகளை சமாளிக்குமா புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் பைக்? விலை எந்தளவிற்கு இருக்கும்?

பைக்கை நிறுத்த ட்யுல்-சேனல் ஏபிஎஸ் சிஸ்டத்துடன் முன் மற்றும் பின் பக்கத்தில் டிஸ்க் ப்ரேக்குகள் வழங்கப்படவுள்ளன. இருக்கை ஒரே துண்டாக இருக்கும். இதன் கருப்பு நிற அலாய் சக்கரங்களில் ட்யுப்லெஸ் டயர்கள் பொருத்தப்படவுள்ளன.

ஹோண்டா சிபி350 பைக்குகளை சமாளிக்குமா புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் பைக்? விலை எந்தளவிற்கு இருக்கும்?

முன்பக்கத்தில் ஹெட்லைட்டை சுற்றிலும் க்ரோம் வழங்கப்படவுள்ளது. சஸ்பென்ஷனுக்கு முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் இரட்டை வாயு-சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்படும்.

ஹோண்டா சிபி350 பைக்குகளை சமாளிக்குமா புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் பைக்? விலை எந்தளவிற்கு இருக்கும்?

ஹெட்லைட் மட்டுமின்றி பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள், டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப் உள்ளிட்டவையும் வட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மற்ற ராயல் என்பீல்டு பைக்குகளை காட்டிலும் ஹண்டர் 350-இன் பெட்ரோல் டேங்க் சற்று மெல்லியதான வடிவத்தில் இருக்கும்.

ஹோண்டா சிபி350 பைக்குகளை சமாளிக்குமா புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் பைக்? விலை எந்தளவிற்கு இருக்கும்?

ஒரே ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுவதால் மீட்டியோர் 350 பைக்கில் வழங்கப்படும் அதே 349சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யுல்-இன்ஜெக்டட், காற்று/ஆயில்-கூல்டு என்ஜின் தான் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் உடன் ஹண்டர் 350 பைக்கிலும் வழங்கப்படவுள்ளது.

ஹோண்டா சிபி350 பைக்குகளை சமாளிக்குமா புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் பைக்? விலை எந்தளவிற்கு இருக்கும்?

ஆனால் எடையில் மீட்டியோர் 350 பைக்கை காட்டிலும் ஹண்டர் 350 சற்று குறைவானதாக விளங்கும். இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 20.2 எச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

Most Read Articles

English summary
Royal Enfield Hunter 350 to be more premium than exitsting 350cc bikes.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X