ஆஸ்திரேலியாவில் ராயல் என்பீல்ட்டிற்கு பெருமை சேர்த்த இண்டர்செப்டர் 650!! புதிய டாப் ஸ்பீடை எட்டியது!

மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக் ஒன்று ஆஸ்திரேலியாவில் புதிய சாதனை ஒன்றை புரிந்துள்ளது. இந்த மாடிஃபை இண்டர்செப்டர் 650 பைக்கை பற்றியும் அதன் சாதனையை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆஸ்திரேலியாவில் ராயல் என்பீல்ட்டிற்கு பெருமை சேர்த்த இண்டர்செப்டர் 650!! புதிய டாப் ஸ்பீடை எட்டியது!

சென்னையில் தொழிற்சாலைகள் அமைத்து இந்தியா உள்பட பல நாட்டு சந்தைகளில் வணிகத்தை மேற்கொண்டுவரும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரபலமான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்று இண்டர்செப்டர் 650.

ஆஸ்திரேலியாவில் ராயல் என்பீல்ட்டிற்கு பெருமை சேர்த்த இண்டர்செப்டர் 650!! புதிய டாப் ஸ்பீடை எட்டியது!

குறிப்பாக வெளிநாட்டு சந்தைகளில் இந்த நிறுவனத்தின் 650சிசி ட்வின் பைக்குகளுக்கு தான் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏனெனில் குறைவான விலை மட்டுமில்லாமல் ராயல் என்பீல்டு பைக்குகளை மாடிஃபை செய்வதும் எளிமையானது.

ஆஸ்திரேலியாவில் ராயல் என்பீல்ட்டிற்கு பெருமை சேர்த்த இண்டர்செப்டர் 650!! புதிய டாப் ஸ்பீடை எட்டியது!

இதனால் வெளிநாட்டினர் பெரும்பாலும் மாடிஃபை செய்து உபயோகப்படுத்தவே ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்குகின்றனர். இந்த வகையில் ஆஸ்திரேலியாவில் மிட் லைஃப் சைக்கிள்ஸ் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனத்தின் மூலமாக மாடிஃபை செய்யப்பட்ட இண்டர்செப்டர் 650 பைக் ஒன்று நம்பவே முடியாத அளவிலான வேகத்தை எட்டியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ராயல் என்பீல்ட்டிற்கு பெருமை சேர்த்த இண்டர்செப்டர் 650!! புதிய டாப் ஸ்பீடை எட்டியது!

ராயல் என்பீல்டு பைக்குகள் அழகானவை, ஆற்றல்மிக்கவை. இவற்றில் பரவலாக பார்க்கப்படும் சிறு குறை எதுவென்றால், அவற்றின் வேகம் தான். அதிக எடையில் தயாரிக்கப்படுவதால், மிக அதிவேக பயணத்தை விரும்பக்கூடியவர்கள் பொதுவாகவே ராயல் என்பீல்டு பைக்குகள் பக்கம் செல்லமாட்டார்கள்.

ஆஸ்திரேலியாவில் ராயல் என்பீல்ட்டிற்கு பெருமை சேர்த்த இண்டர்செப்டர் 650!! புதிய டாப் ஸ்பீடை எட்டியது!

ஆனால் ஆஸ்திரேலியாவில் மாடிஃபை செய்யப்பட்டுள்ள இந்த இண்டர்செப்டர் 650 பைக் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கெய்ட்னர் என்ற உறைந்த ஏரியில் மேற்கொள்ளப்பட்ட மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் மணிக்கு 212.514கிமீ என்ற வேகத்தை எட்டியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ராயல் என்பீல்ட்டிற்கு பெருமை சேர்த்த இண்டர்செப்டர் 650!! புதிய டாப் ஸ்பீடை எட்டியது!

இந்த மாடிஃபை ராயல் என்பீல்டு பைக்கிற்கு இண்டர்செப்டர் 650 சால்ட் ரேஸர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கெய்ட்னர் உறைந்த ஏரியின் மீது பைக்கை அதி வேகத்தில் இயக்குவது அவ்வளவு எளிதானது இல்லை போல.

ஆஸ்திரேலியாவில் ராயல் என்பீல்ட்டிற்கு பெருமை சேர்த்த இண்டர்செப்டர் 650!! புதிய டாப் ஸ்பீடை எட்டியது!

ஏனெனில் இந்த ஏரி பந்தயந்தில் பதிவு செய்யப்பட்ட முந்தைய டாப் ஸ்பீடு 119.961 mph என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அதி வேகம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு 2016ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. "பொன்னேவில்லே ரேசர் அமெரிக்க உட்டா பகுதியில் உள்ள பொன்னேவில்லே சால்ட் ஃப்ளாட்டில் 159 mph வேகத்தை எட்டினார்.

ஆஸ்திரேலியாவில் ராயல் என்பீல்ட்டிற்கு பெருமை சேர்த்த இண்டர்செப்டர் 650!! புதிய டாப் ஸ்பீடை எட்டியது!

அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டு இருப்பது எங்களுக்கு மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனை" என ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சிஇஒ வினோத் தேசாரி தெரிவித்துள்ளார். இந்த அதிவேக சாதனையினை இண்டர்செப்டர் 650 பைக்கில் சார்லி ஹல்லம் என்பவர் கடந்த மார்ச் 8ஆம் தேதி எட்டியுள்ளார்.

Most Read Articles

English summary
The Royal Enfield Interceptor 650 creates a new record at Speed Week Australia with a top speed of 212.514 kmh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X