ராயல் என்பீல்டு ரசிகரால் மட்டும் தான் இது முடியும்!! அட்வென்ச்சர் பைக்காக மாறிய இண்டர்செப்டர் 650...

அனைத்து விதமான சாலைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை பைக் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு ரசிகரால் மட்டும் தான் இது முடியும்!! அட்வென்ச்சர் பைக்காக மாறிய இண்டர்செப்டர் 650...

இத்தகைய தோற்றத்திற்காக ராயல் என்பீல்டு ஹிமாலயனின் சில பாகங்கள் இந்த இண்டர்செப்டர் 650 பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன. ஹைதராபாத்தை சேர்ந்த இமோர் (EIMOR) கஸ்டம்ஸ் என்ற நிறுவனம் இந்த மாடிஃபிகேஷன் பணிகளை மேற்கொண்டுள்ளது.

ராயல் என்பீல்டு ரசிகரால் மட்டும் தான் இது முடியும்!! அட்வென்ச்சர் பைக்காக மாறிய இண்டர்செப்டர் 650...

கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்த கஸ்டமைஸ்ட் நிறுவனம் இந்த மாடிஃபை இண்டர்செப்டர் 650 பைக்கிற்கு லைலா என பெயர் வைத்துள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள சில புதிய பாகங்கள் கையால் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

ராயல் என்பீல்டு ரசிகரால் மட்டும் தான் இது முடியும்!! அட்வென்ச்சர் பைக்காக மாறிய இண்டர்செப்டர் 650...

இந்த மாடிஃபை பைக்கில் உள்ள டிஇசி ஸ்டிங்கர் 2X1 எக்ஸாஸ்ட் சிஸ்டம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் அதேநேரம் பைக்கின் எடையையும் கிட்டத்தட்ட 14 கிலோ குறைத்துள்ளது. இருக்கைகள் மற்றும் என்ஜினின் அடித்தட்டு உள்ளிட்டவை ஃபைபர் கண்ணாடியால் தயாரிக்கப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு ரசிகரால் மட்டும் தான் இது முடியும்!! அட்வென்ச்சர் பைக்காக மாறிய இண்டர்செப்டர் 650...

அதேநேரம் பக்கவாட்டு பாடி பேனல்கள் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. பைக்கில் மிக பெரிய மாற்றம் ஆஃப்-ரோட்டிற்கும் ஏற்ற வாகனமாக கொண்டுவர வேண்டும் என்பதற்காக சஸ்பென்ஷன் அமைப்பில் தான் கொண்டுவரப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு ரசிகரால் மட்டும் தான் இது முடியும்!! அட்வென்ச்சர் பைக்காக மாறிய இண்டர்செப்டர் 650...

இந்த ஒய்.எஸ்.எஸ் ஃபோர்க் உடன் பைக்கின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள குழாய்கள் மற்றும் பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள ஒய்.எஸ்.எஸ் மோனோஷாக் ராயல் என்பீல்டு ஹிமாயலன் பைக்குடையதாகும்.

ராயல் என்பீல்டு ரசிகரால் மட்டும் தான் இது முடியும்!! அட்வென்ச்சர் பைக்காக மாறிய இண்டர்செப்டர் 650...

பைக்கின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள பின்பக்க மோனோஷாக்கிற்காக இந்த இண்டர்செப்டர் 650 பைக்கின் பின்பக்கத்தில் உள்ள ஸ்விங்கார்ம் மற்றும் ஃப்ரேம் உள்ளிட்டவை சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு ரசிகரால் மட்டும் தான் இது முடியும்!! அட்வென்ச்சர் பைக்காக மாறிய இண்டர்செப்டர் 650...

இந்த மாடிஃபை இண்டர்செப்டரில் முன் மற்றும் பின்பக்கத்தில் 21 இன்ச் மற்றும் 17 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ள சக்கரங்கள் இரு விதமான பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையிலான மெட்ஸெலெர் காரோ டயர்களை பெற்றுள்ளன.

ராயல் என்பீல்டு ரசிகரால் மட்டும் தான் இது முடியும்!! அட்வென்ச்சர் பைக்காக மாறிய இண்டர்செப்டர் 650...

இவற்றுடன் அதி-செயல்திறன்மிக்க கே&என் காற்று வடிகட்டியையும் இமோர் கஸ்டம்ஸ் நிறுவனம் இந்த பைக்கில் பயன்படுத்தியுள்ளது. என்ஜின் மற்றும் பெட்ரோல் டேங்க் பகுதிகளில் வழங்கப்பட்டுள்ள அவற்றின் பாதுகாப்பான்களின் வடிவம் பைக்கின் தோற்றத்துடன் ஒத்து போகவில்லை.

ராயல் என்பீல்டு ரசிகரால் மட்டும் தான் இது முடியும்!! அட்வென்ச்சர் பைக்காக மாறிய இண்டர்செப்டர் 650...

அவற்றை இன்னமும் சிறப்பானதாக வடிவமைத்திருக்கலாம். மற்றபடி சிவப்பு ஹைலைட்களுடன் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த மாடிஃபை இண்டர்செப்டர் 650 பைக் உண்மையில் பார்ப்பதற்கு அருமையானதாக உள்ளது.

ராயல் என்பீல்டு ரசிகரால் மட்டும் தான் இது முடியும்!! அட்வென்ச்சர் பைக்காக மாறிய இண்டர்செப்டர் 650...

இத்தகைய பெயிண்ட் இந்த பைக்கின் சிவப்பு நிற சேசிஸிற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. புதிய பின்பக்கத்தை காட்டும் கண்ணாடி மற்றும் ஓட்டுனர் கை பாதுகாப்பான் உள்ளிட்டவை பைக்கை காஸ்ட்லீயானதாக காட்டுகின்றன.

Most Read Articles
English summary
Royal Enfield Interceptor 650 Tastefully Modified into Dual-Purpose Bike.
Story first published: Tuesday, May 11, 2021, 1:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X