ராயல் என்பீல்டின் புதிய 'சர்வீஸ் கேர் 24' அறிமுகம்! முதல் ஜெனரல் சர்வீஸ் இலவசமாம்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு 'சர்வீஸ் கேர் 24' எனும் சிறப்பு சர்வீஸ் பேக்கேஜை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ராயல் என்பீல்டின் புதிய 'சர்வீஸ் கேர் 24' அறிமுகம்! முதல் ஜெனரல் சர்வீஸ் இலவசமாம்!!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு, சிறப்பு சர்வீஸ் திட்டம் ஒன்றை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. 'சர்வீஸ் கேர் 24' என்ற பெயரில் இச்சிறப்பு வாகன பராமரிப்பு திட்டத்தை நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

ராயல் என்பீல்டின் புதிய 'சர்வீஸ் கேர் 24' அறிமுகம்! முதல் ஜெனரல் சர்வீஸ் இலவசமாம்!!

சிறப்பு சர்வீஸ் திட்டத்தின் தொடக்கமாக முதல் ஜெனரல் சர்வீஸை கட்டணமில்லாமல் (Complimentary) வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் சர்வீஸ் கேர் 24 திட்டத்தை வாங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என நிறுவனம் அறிவித்துள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய 'சர்வீஸ் கேர் 24' அறிமுகம்! முதல் ஜெனரல் சர்வீஸ் இலவசமாம்!!

சேஸிஸ் எண்ணின் அடிப்படையில் கட்டணமில்லா ஜெனரல் சர்வீஸ் சலுகை வழங்கப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. சர்வீஸ் கேர் 24 பேக்கேஜுக்கான கட்டணம் ரூ. 2,499 ஆகும். நான்கு ஜெனரல் சர்வீஸ் மற்றும் இரு ஆயில் மாற்றம் ஆகியவற்றை இந்த பேக்கேஜில் அடங்கியிருக்கின்றன.

ராயல் என்பீல்டின் புதிய 'சர்வீஸ் கேர் 24' அறிமுகம்! முதல் ஜெனரல் சர்வீஸ் இலவசமாம்!!

இதுதவிர உதிரிபாகம், பணியாளர் கட்டணம் ஆகியவற்றிலும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட இருக்கின்றது. பாகங்கள் மற்றும் ஆயில்களின் விலையில் 5 சதவீதம் தள்ளுபடியும், லேபர் கட்டணத்தில் 20 சதவீதம் வரையும் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய 'சர்வீஸ் கேர் 24' அறிமுகம்! முதல் ஜெனரல் சர்வீஸ் இலவசமாம்!!

இந்த சிறப்பு திட்டத்தை தமிழகத்தின் தலைநகர் சென்னையை தலைமையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு நாடு தழுவிய அளவில் அறிவித்திருக்கின்றது. ஆன்லைன் வாயிலாக சிறப்பு திட்டத்திற்கான விண்ணப்பத்தை வாடிக்கையாளர்கள் கொடுக்கலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய 'சர்வீஸ் கேர் 24' அறிமுகம்! முதல் ஜெனரல் சர்வீஸ் இலவசமாம்!!

வாடிக்கையாளர்களைக் கவர வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் விற்பனைக்கு பிந்தைய சேவையைச் சிறப்பிக்கும் நோக்கில் ராயல் என்பீல்டு சர்வீஸ் கேர் 24 திட்டத்தை நாட்டில் தொடங்கி வைத்திருக்கின்றது.

ராயல் என்பீல்டின் புதிய 'சர்வீஸ் கேர் 24' அறிமுகம்! முதல் ஜெனரல் சர்வீஸ் இலவசமாம்!!

நிறுவனம் தற்போது புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கை அறிமுகப்படுத்துவதற்கான பணியில் மும்பரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே சாலையில் காட்சியளிக்கத் தொடங்கிவிட்ட இப்பைக் மிக விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கின் சோதனையோட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ராயல் என்பீல்டின் புதிய 'சர்வீஸ் கேர் 24' அறிமுகம்! முதல் ஜெனரல் சர்வீஸ் இலவசமாம்!!

கிளாசிக் 350 மட்டுமின்றி மற்றுமொரு ரோட்ஸ்டர் அடிப்படையிலான பைக்கை உருவாக்கும் பணியிலும் ராயல் என்பீல்டு ஈடுபட்டு வருகின்றது. இது 650சிசி ரக இருசக்கர வாகனமாகும். இதுவும் சமீப காலமாக சாலையில் சோதனையோட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Royal Enfield Introduced Service Care 24 In India. Read In Tamil.
Story first published: Tuesday, June 29, 2021, 18:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X