2 மாதத்தில் 2வது முறையாக பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

ராயல் என்பீல்டு நிறுவனம் 2 மாதத்தில் 2வது முறையாக பைக்குகளின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 மாதத்தில் 2வது முறையாக பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஜூலை மாதம் தனது பைக்குகளின் விலையை உயர்த்தியது. அப்போது மீட்டியோர் 350 பைக்கின் ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா ஆகிய 3 வேரியண்ட்களின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டது. ஃபயர்பால் வேரியண்ட்டின் விலை 7,790 ரூபாய் உயர்ந்த நிலையில், ஸ்டெல்லர் வேரியண்ட்டின் விலை 8,020 ரூபாய் உயர்ந்தது.

2 மாதத்தில் 2வது முறையாக பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

அதே சமயம் சூப்பர்நோவா வேரியண்ட்டின் விலை 8,405 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த சூழலில், ராயல் என்பீல்டு நிறுவனம் மீண்டும் ஒரு முறை விலையை உயர்த்தியுள்ளது. புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2 மாதத்தில் 2வது முறையாக பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

இதன்படி ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் விலை தற்போது 7,000 ரூபாய் உயர்ந்துள்ளது. எனவே மீட்டியோர் 350 பைக்கின் ஃபயர்பால் வேரியண்ட்டின் விலை தற்போது 1.99 லட்ச ரூபாய் ஆகவும், ஸ்டெல்லர் வேரியண்ட்டின் விலை 2.05 லட்ச ரூபாய் ஆகவும், சூப்பர்நோவா வேரியண்ட்டின் விலை 2.15 லட்ச ரூபாயாகவும் உள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

2 மாதத்தில் 2வது முறையாக பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

அதே நேரத்தில் 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் நடப்பாண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கின் விலை கடந்த ஜூலை மாதம் 4,617 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விலை இம்முறை 5 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இந்த பைக்கின் புதிய விலை 2.10 லட்ச ரூபாய் முதல் 2.18 லட்ச ரூபாயாக உள்ளது.

2 மாதத்தில் 2வது முறையாக பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

இவையும் எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 2 மாத காலத்திற்கு உள்ளாக ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விலை சுமார் 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. இதே கால இடைவெளியில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் விலை சுமார் 15 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை கவலையடைய செய்துள்ளது.

2 மாதத்தில் 2வது முறையாக பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கில், 349 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல்டு, ஃப்யூயல்-இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,100 ஆர்பிஎம்மில் 20.2 பிஹெச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

2 மாதத்தில் 2வது முறையாக பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் முன் பகுதியில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 270 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

2 மாதத்தில் 2வது முறையாக பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

மறுபக்கம் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில், 411 சிசி, சிங்கிள்-சிலிண்டர், எஸ்ஓஹெச்சி, ஏர்-கூல்டு எலெக்ட்ரானிக் ஃப்யூயல்-இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 24.3 பிஹெச்பி பவரையும், 32 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கிற்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

2 மாதத்தில் 2வது முறையாக பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

ராயல் என்பீல்டு நிறுவனம் வெகு சமீபத்தில்தான் கிளாசிக் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த பைக்கின் டெலிவரி பணிகளும் தற்போது உடனடியாக தொடங்கப்பட்டுள்ளன. எனவே புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கின் வருகைக்காக காத்திருந்த வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

2 மாதத்தில் 2வது முறையாக பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

பழைய தலைமுறை மாடல் உடன் ஒப்பிடுகையில் புதிய தலைமுறை கிளாசிக் 350 பல்வேறு விதங்களிலும் மேம்பட்டதாக உள்ளது. இந்திய சந்தையில் இந்த பைக்கின் விற்பனை ஏற்கனவே சிறப்பாகதான் இருந்து வருகிறது. 350 சிசி செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆதிக்கத்தை இந்த பைக்தான் தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது.

2 மாதத்தில் 2வது முறையாக பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்பீல்டு... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

எனினும் ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 போன்ற புதிய போட்டியாளர்களின் வருகையால், அதனை இன்னும் சிறப்பாக எதிர்கொள்வதற்காக, கிளாசிக் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. எனவே வரும் காலங்களில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விற்பனை முன்பை விட இன்னும் அதிகமாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Royal enfield meteor 350 and himalayan prices hiked again check details here
Story first published: Tuesday, September 7, 2021, 22:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X