Just In
- 41 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
தேனியில் டிடிவி தினகரன் தங்க வீடு பார்க்கும் அமமுகவினர்.. கலக்கத்தில் இரண்டு தலைகள்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 vs ஹோண்டா ஹைனெஸ் சிபி350... விற்பனையில் கெத்து காட்டுவது எந்த பைக் தெரியுமா?
ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மற்றும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களுக்கு இடையேயான கடந்த ஜனவரி மாத விற்பனை ஒப்பீட்டை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம், புத்தம் புதிய ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் பெனெல்லி இம்பீரியல் 400 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கு அடுத்த மாதத்திலேயே, அதாவது 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளுக்கு நேரடி போட்டியாக மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. இது ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிளுக்கு மாற்றாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புத்தம் புதிய மாடல் ஆகும்.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மற்றும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையும் கிட்டத்தட்ட ஒரே அளவில்தான் உள்ளது. கடந்த மாதம் (2021ம் ஆண்டு ஜனவரி) இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களின் விற்பனையும் எப்படி இருந்தது? என்பதைதான் இந்த செய்தியில் நாம் பார்க்கவுள்ளோம்.

இந்திய சந்தையில் கடந்த ஜனவரி மாதம் ஹோண்டா நிறுவனம் 3,543 ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. அதே சமயம் ராயல் என்பீல்டு நிறுவனம் இதை விட அதிகமான எண்ணிக்கையில் மீட்டியோர் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. மீட்டியோர் 350 பைக்கின் கடந்த ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கை 5,073.

விற்பனை எண்ணிக்கையில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் கூட, வளர்ச்சி விகிதத்தில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் அசத்தியுள்ளது. 2020ம் ஆண்டின் கடைசி மாதத்துடன் ஒப்பிடுகையில், அதாவது 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளின் விற்பனை 126 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஏனெனில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் வெறும் 1,564 ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. அதே சமயம் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளின் விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளது. ஏனெனில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 8,569 மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்திருந்தது.

இதன் மூலமாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளின் விற்பனை உயர்ந்து வருவதை புரிந்து கொள்ளலாம். ஹோண்டா நிறுவனமும் ஹைனெஸ் சிபி350 பைக்கின் விற்பனையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஹோண்டாவின் பிரத்யேக பிக்விங் பிரீமியம் டீலர்ஷிப்கள் வாயிலாக மட்டுமே ஹைனெஸ் சிபி350 விற்பனை செய்யப்படுவது ஒரு குறையாக உள்ளது.

ஹோண்டாவின் பிக்விங் பிரீமியம் டீலர்ஷிப்கள் குறிப்பிட்ட நகரங்களில், மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன. எனினும் இந்த குறையை போக்கும் வகையில் பிக்விங் பிரீமியம் டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சிகளில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் வரும் காலங்களில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் விற்பனை நன்கு உயரலாம்.